பொறியியலாளர் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது

சுமார் 55 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பணிபுரியும் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையில் செயல்படும் அபிவிருத்தி திட்டமொன்றில் பணியாற்றும், ஈரானைச் சேர்ந்த 45 வயதுடைய பொறியியலாளர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் ஏர் அரேபியா விமானம் G9502 விமானம் மூலம் ஷார்ஜாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் கொண்டு […]
RTI உறுப்பினர் வெற்றிடத்துக்கு விண்ணப்பம்

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் வெற்றிடத்துக்கு பெயர் குறித்த நியமனங்கள் கோரப்படுகின்றன 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 12(1)(இ) ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் ஒருவரின் வெற்றிடத்திற்கு நியமனம் செய்வதற்கு கௌரவ ஜனாதிபதிக்கு விதப்புரையை மேற்கொள்வதற்கு சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து பெயர் குறித்த நியமனங்களை அரசியலமைப்புப் பேரவை கோருகின்றது. தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 12(1)(அ)(i) கீழ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சட்டம், ஆளுகை, பொது நிர்வாகம், […]
யோர்க் பிராந்திய காவல் துறையில் புதிய ஆட்சேர்ப்புப் பட்டமளிப்பு விழா

34 புதிய காவல் துறை கான்ஸ்டபிள்கள் எங்கள் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க தயாராக உள்ளனர் என யோர்க் பிராந்திய காவல் துறை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. கடந்த வாரம் அரோறா நகரில் நடைபெற்ற புதிய ஆட்சேர்ப்பு பட்டமளிப்பு விழாவில், யோர்க் பிராந்திய காவல் துறையின் (York Regional Police) புதிய அதிகாரிகள் குழுவை நாம் வரவேற்றோம். இவர்கள் முன்னதாக பாதுகாப்புத் துறையினர், சிறப்பு கான்ஸ்டபிள்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள். தற்போது யோர்க் […]
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் பலி; யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை 1.18 மணியளவில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உயிரிழந்தவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மண்டைதீவு பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குறித்த சிறுவனை பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது தலையில் துப்பாக்கிச் சூட்டு காயம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் […]
சீஷெல்ஸ் ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் சந்திப்பு

டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியாவுக்கு 5 நாள் பயணமாக வந்த சீஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி, கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி சென்னை வந்தடைந்தார். இந்த நிலையில் தொடர்ந்து சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின்னர் நேற்று முன்தினம் டில்லிக்கு சென்றுள்ளார். நேற்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை […]
பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீது முறைப்பாடு

பிரிட்டனின் ‘Republic’ என்ற அமைப்பு, முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீது பொலிஸில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது. பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் அவர் அரசு ரீதியான ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக இந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம் முன்னதாக வெளியிட்ட மின்னஞ்சல்களின்படி, 2010இல் ஆண்ட்ரூ, தனது அரசுப் பயணங்கள் (சிங்கப்பூர், வியட்நாம், ஹொங்காங்) குறித்த விபரங்களையும், ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்பு முதலீடுகள் குறித்த இரகசியத் தகவல்களையும் எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது. 2001 முதல் 2011 வரை பிரிட்டனின் […]
அரசாங்கத்தை மக்கள் விரைவில் விரட்டியடிப்பர்

எமது நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரின் கௌரவத்தைப் பாதுகாக்கத் தவறியுள்ள தற்போதைய அரசை, இந்நாட்டு மக்கள் மிக விரைவில் வெறுத்து ஒதுக்குவார்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பியால் நிஷாந்த தெரிவித்தார். இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று இந்த நாடு ஒரு மயான பூமியாகவோ அல்லது […]
திரு.தயாளன் காங்கேசு

சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் காலம்சென்ற காங்கேசு அவர்களின் மூத்த புதல்வரும் , டேவினா ட்ராஸ்போர்ட் உரிமையாளருமான திரு.தயாளன் காங்கேசு அவர்கள் (50) (Shorty – Jane and Finch ) 07-02-2026 அன்று காலமானார் . அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த கவலையுடன் அறியத் தருகிறோம் .கஜந்தன் – (சகோதரர்) – 416 303 2656 பிரேம் (மைத்துனர் ) 416 999 […]
ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளர் நியமனம்

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய பணிப்பாளராக Shannon Cowlin நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று(09) கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பணியாற்றிய 13 ஆண்டுகள் உட்பட, Cowlin 26 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவம் கொண்ட ஒரு அதிகாரியாவார். வலுசக்தி, காலநிலை, சுற்றுச்சூழல், காற்றின் தரம், பொது சுகாதாரம் மற்றும் உணவு-நீர் ஆகிய துறைகளில் முதலீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் கொள்கை விடயங்களில் அவர் நிபுணத்துவம் பெற்றவர். அவர் 2023 ஆம் […]
வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.