விரைவில் புதிய வரிச் சட்டமூலம்

வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி ஒருங்கிணைப்புக்கு வழியமைத்து, வரி முறைமையை மேம்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட வரிச் சீர்திருத்தங்களை உள்ளடக்கி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு 2025-05-19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, திருத்தப்பட்ட சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்குச் சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், பின்னர் அங்கீகாரத்துக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி […]
மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்மநபர்

மருதனார்மடம் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை (10) காலை 06.03 மணிக்கு, துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை வந்துள்ளார். இதன்போது அவரது இடுப்புக்குள்ளும் கைத்துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வருகை தந்த நபர் தனிநபர் ஒருவரது பெயரை விசாரித்துவிட்டு, வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அங்கு விசாரித்ததாக கூறப்படுகிறது. […]
குருணாகல் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ

குருணாகலை – பரகஹதெனிய பகுதியில் உள்ள ஹெல்மெட் தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (10) பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ பரவலில், தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
யாழில் பனை அபிவிருத்தி சபையின் வேலை திட்டங்கள்!

யாழ்ப்பாணத்திற்கு திங்கட்கிழமை (11) உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பனை மற்றும் பனை சார் கைத்தொழிலினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பனை அபிவிருத்தி சபையின் பிரதான காரியாலயத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது 2025 ஆம் ஆண்டு பனை அபிவிருத்தி சபையின் வேலை திட்டங்கள் பற்றியும் அடைந்த அபிவிருத்தி தொடர்பாகவும் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் யாழ் மாவட்ட […]
ஒன்டாரியோவின் பொருளாதார செயற்பாடுகள்; மிசிசாகா வர்த்தக வாரியத்தில் கலந்துரையாடல்

ஒன்டாரியோவின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் எங்கள் அரசின் திட்டம் குறித்து மிசிசாகா வர்த்தக வாரியத்தில் நடைபெற்ற ‘fireside chat’ கலந்துரையாடலில் நான் பங்கேற்றேன் என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது லிங்க் டின் சடூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். வர்த்தகச் சங்கங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளின் சூழலில் உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளின் சூழலில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், மிசிசாகாவின் வளர்ச்சியை ஆதரித்து தொழிலாளர்கள் தொடர்ந்து பணியில் நிலைத்திருக்க உதவும் Highway 413 மற்றும் Hazel […]
சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட கிருமிநாசினிகளுடன் இருவர் கைது
டல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 80 இலட்சம் ரூபா பெறுமதியான கிருமிநாசினிகள் மற்றும் விதைகள் ஆகியவற்றுடன் ஹெம்மாத்தகம பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் வரி செலுத்தப்படாமல் கொண்டு வரப்பட்ட இந்தக் கிருமிநாசினிகள் மற்றும் விதைகள், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த போது கேகாலை நாரம்பத்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று (09) கைப்பற்றப்பட்டுள்ளன. மிகவும் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் கிருமிநாசினிகள் தொடர்பில் கற்பிட்டி விமானப்படைத் தளத்தின் […]
கொழும்பில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, திட்டமிட்டபடி பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் சபை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) ஆகியவற்றுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை லாகூரில் நடைபெற்ற முத்தரப்பு சந்திப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகத் தெரியவருகிறது. […]
அரசாங்கத்துக்கு ஆறுமாத காலவகாசம்; அதிகாரத்தை எமக்குத் தாருங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி
அரசாங்கம் நினைத்தால் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பிரேரணையை அடுத்தவாரமே பாராளுமன்றத்துக்கு கொண்டு வரலாம். அரசாங்கத்துக்கு ஆறு மாதம் காலவகாசம் வழங்குகிறோம். முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க சவால்விடுத்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார மீதும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் இயலாமை மற்றும் பலவீனம் தொடர்ச்சியாக […]
மத்திய கிழக்கை சூளும் போர் பதற்றம்…

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி, கடந்த நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து கலந்து கொண்டு வந்த விமானப்படை தளபதிகளுடனான ஆண்டு கூட்டத்தை இந்த ஆண்டு முதன்முறையாக தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. இந்த நிகழ்வு, அமெரிக்கா வளைகுடா (Gulf) பிராந்தியத்தில் தனது இராணுவ இருப்பை அதிகரித்து வரும் நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கிடையே மோதல் தீவிரமடையலாம் என்ற அச்சம் […]
அரசமைப்பு பேரவை விவகாரம்; என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகுகின்றேன் – சிறீதரன் எம்.பி.

குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்குத் தயார்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் எம்.பி. விலக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே சிறீதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். “அரசமைப்பு பேரவையில் இராணுவத்துக்கு ஆதரவாக எட்டு தடவைகள் சிறீதரன் வாக்களித்தார் எனப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. அதாவது நான் […]