பொழுதுபோக்கிற்குத் தந்தை தடை விதித்ததால் 3 மகள்கள் தற்கொலை!

கொரிய நாட்டு நாடகங்கள், இணையத்தள விளையாட்டுகள், சமூக வலைத்தளக் காணொளிகள் ஆகியவற்றில் சிறுமிகள் மூவரும் தீவிரமாக மூழ்கியிருந்துள்ளனர். அதனால் அவர்களின் தந்தை மகள்களிடமிருந்து கைப்பேசிகளைப் பறித்து வைத்துள்ளார். தங்களது விருப்பமான பொழுதுபோக்கிற்குத் தந்தை தடை விதித்ததால் ஆத்திரமடைந்த சிறுமிகள், விபரீத முடிவு ஒன்றை எடுத்து, ஒன்பதாவது மாடியிலிருந்து குதித்து தங்கள் உயிர்களை மாய்த்து கொண்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கண்ணீர் மல்கப் பேசிய அவர்களின் தந்தை, குழந்தைகளின் நலன் […]

பெருந்தோட்ட மக்கள் சம்பள பிரச்சனைகளுக்கு ஜனாதிபதி அனுரவினால் தீர்வு கிடைத்தமைக்குக் கொண்டாட்டம்

“இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவின் ஊடாக மாத்திரமே பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.” என மலையக மக்கள் தெரிவித்துள்ளனர் 1750 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றதுடன் இதில் கருத்து தெரிவிக்கும் போதே […]

பூனையைச் சித்திரவதை செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்

பூனை ஒன்றை பிடித்து அதனை சித்திரவதை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் ஞாயிற்றுக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார். திப்படுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இளைஞன் ஒருவன் பூனையை சித்திரவதை செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் அண்மையில் பரவின. இந்த காணொளிக்கு விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் […]

முழு நாடுமே ஒன்றாக; 802 பேர் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (09) வெளியிடப்பட்ட தினசரி அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது 791 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான 588 சுற்றிவளைப்புகளே அதிகூடிய எண்ணிக்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 11 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்!

இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றுக்கொள்வதாக சட்டமா அதிபர் இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் மாதம் 04ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு […]

2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெற்ற சிம் அட்டைகள் மீள் பதிவு!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டத்தின் கீழ், 2019 ஆம் ஆண்டில் சிம் அட்டை பதிவு செய்தல் தொடர்பான ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், அந்த விதிகள் 2019.08.02 […]

சட்டவிரோத கடற்தொழிலை சஜித் ஆதரிப்பது தனது அரசியல் இருப்புக்காகவே!

அநுர அரசாங்கத்தினால் சட்டவிரோத கரைவலை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல் கொடுப்பது அவரது அரசியல் இருப்பை தக்கவைக்க எடுக்கும் முயற்சியாகும் என வடமாகாண கடற் தொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்தார். குறித்த விடயம் தொடர்பாக இன்று (10) அவரை தொடர்புகொண்டு வினவும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் சட்டவிரோத கரைவலையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமையை வரவேற்பதோடு எதிர்க்கட்சித் […]

விசேட பணிப்புரைக்கு அமைவாகவடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் நேற்று (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த […]

கரையோரங்களில் குவிந்துள்ள பைபர் கிளாஸ் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் திட்டம்

நீண்ட காலமாக மீன்பிடித் துறைமுகங்கள், இறங்குதுறைகள் மற்றும் கரையோரங்களில் குவிந்துள்ள பைபர் கிளாஸ் ஒதுக்கப்பட்ட படகுகள் மற்றும் கழிவுகளை முறையான வகையில் முகாமைத்துவம் செய்வதற்காக, கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பைபர் கிளாஸ் மீள்சுழற்சித் திட்டத்திற்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று (09) கடற்றொழில் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. ‘Clean Sri Lanka’ (தூய்மையான இலங்கை) நிதியத்தின் ஊடாக 56 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட கடற்றொழில், […]

விசேட தேவையுடையவர்களுக்காக புதிய பேருந்துகள்!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை […]