போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுசெவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போரா சமூக உறுப்பினர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்கள், […]

பாரிய பணி பகிஷ்கரிப்புக்கு அரச தாதியர்களும் தயார்?

அரச தாதியர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு அரசாங்கம் இரண்டு வாரங்களில் தீர்வு வழங்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு பாரிய பணி பகிஷ்கரிப்புக்கு செல்வோம் என அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் கொழும்பில் செவ்வாய்க்கிழமை (10) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரச சேவையில் 40ஆயிரத்துக்கும் அதிகமான தாதியர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். […]

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி; கனிமொழி கருத்து

ட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டெல்லியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களுடன் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு பற்றி முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பற்றி எம்பி கனிமொழி முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கான பரபரப்பு ஆரம்பித்து விட்ட நிலையில் திமுக மாநாடு, பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி […]

வாவியில் மறைத்து வைக்கப்பட்ட கோடா மற்றும் கசிப்புடன்; மூவர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்ட கோடா மற்றும் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்களை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய திங்கட்கிழமை (09) மாலை ஆறு மணி முதல் செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை ஆறு மணி வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது […]

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உட்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி திருகோணமலை சங்கமித்தை விகாரைகக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பிக்குமார் உட்பட 10 பேருக்கு எதிரான வழக்கு புதன்கிழமை(11) அன்று திருகோணமலை மேல் நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றம் என்பவற்றில் இடம்பெறவுள்ளது. திருகோணமலை டச்பே கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானம் ஒன்றை அமைத்து,அதில் புத்தர் சிலையொன்றை வைத்தமை தொடர்பான வழக்கில் கடந்த […]

இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெடிவிபத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஷியா முஸ்லிம் மசூதியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) தொழுகையின் போது நடத்தப்பட்ட கொடூர தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர், 169 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல், பாகிஸ்தான்நாட்டில் மீண்டும் தீவிரவாத அச்சத்தை எழுப்பியுள்ளது. தலைநகரின் ஷெஷாத் டவுன் பகுதியில் அமைந்துள்ள தர்லாய் இமாம்பர்கா என்ற ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை […]

ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பல் கொழும்பை வந்தடைந்தது

ரோயல் ஓமான் கடற்படை போர்க்கப்பல் கொழும்பு வருகை

ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘சாத்’ (SADH), விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக இன்று செவ்வாய்க்கிழமை (10) இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது. அதன்படி, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 75 மீட்டர் நீளமுள்ள ‘RNOV SADH’ என்ற போர்க்கப்பலுக்கு, லெப்டினன்ட் கமாண்டர் ஷாஹீம் சௌட் அப்துல் ரஹ்மான் அல் பலுஷி (Shaheen Saud Abdul Rahman AI Balushi) தலைமை தாங்குகிறார். மேலும், போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் […]

இவ் வாண்டின் முதல் சூரிய கிரகணம்!

இவ்வாண்டின் முதல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. தேதி, நேரம் மற்றும் காணப்படும் பகுதிகள் பற்றிய முழு தகவல்கள்.

சூரிய கிரகணம் என்பது, சந்திரன் பூமி மற்றும் சூரியன் இடையே நேர்கோட்டில் வந்து நிற்கும் போது, சூரியனின் ஒளி பூமியை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ அடையாமல் மறைக்கப்படுவதைக் குறிக்கும். இந்த நிகழ்வு அமாவாசை நாளில் மட்டுமே நடைபெறும். சந்திரன் சூரியனை முழுமையாக மறைத்தால் முழு சூரிய கிரகணம், ஒரு பகுதி மட்டும் மறைந்தால் பகுதி சூரிய கிரகணம், சூரியன் வளையம் போல தெரிந்தால் வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணம் ஒரு இயற்கையான […]

தி.மு.க – த.வெ.க கட்சிகளுக்கு இடையில் மோதல்?

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக சார்பில் அனுமதியின்றி சர்வே எடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து கட்சிகளும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட இருக்கின்றன. அதே நேரம் தவெக ஆட்சியில், […]

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு; நடிகர் ஜெயராமுக்கு அழைப்பாணை

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கேரள மாநிலத்தில் உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது.இந்த ஐயப்பன் கருவறைக்கு வெளியே துவார பாலகர்கள் சிலைகள் தங்க முலாம் பூசப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிலின் புனரமைப்பு பணிகள் நடந்தனர். அப்போது தங்க முலாம் பூச துவார பாலகர்கள் சிலைகளை சென்னைக்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.பின்னர் தங்க […]