நாட்டின் கலாசாரத்தையும் புத்தசாசனத்தையும் அழிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது – நாமல்

புத்தசாசனத்தையும் நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று அரசாங்கம் நினைப்பது முற்றிலும் தவறாகும்.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் நாங்கள் அமோக வெற்றிப்பெறுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான […]

அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஐரோப்பிய பிரதிநிதி பேச்சு!

ஐரோப்பிய வெளிநடவடிக்கை சேவையின் (EEAS) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27வது கூட்டத்தொடரில் இணைத் தலைமை தாங்குவதற்காக ஐரோப்பிய வெளிநடவடிக்கை சேவையின் (EEAS) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு […]

ஊழல் குறிகாட்டி சுட்டெணில் இலங்கை முன்னேற்றம்

2025-ஆம் ஆண்டிற்கான ஊழல் குறிகாட்டி சுட்டெணில், இலங்கை கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசையில் இலங்கை 121-ஆவது இடத்தைப் பெற்றிருந்த நிலையில், தற்போது 14 இடங்கள் முன்னேறி 107-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 0 முதல் 100 வரையிலான புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தச் சுட்டெண்ணில், அதிக புள்ளிகள் பெறுவது ஊழல் குறைந்த ‘சுத்தமான’ நிலையைக் குறிக்கும். இலங்கையின் இந்த முன்னேற்றத்திற்குப் பின்வரும் காரணங்கள் […]

சைபர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை

நாட்டின் முன்னணி அரசு நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் (NCSOC) இணைப்பதற்கான அமைச்சரவை முடிவை செயல்படுத்துவது குறித்து இன்று (10.01.2026) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இலங்கை சிஇஆர்டி (CERT) மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் இணைந்து இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. நவீன உலகில், சைபர் பாதுகாப்பு என்பது இனி ஒரு தொழில்நுட்ப பிரச்சினை மட்டுமல்ல, தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை நேரடியாக பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் […]

ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிரிழந்த உடனேயே எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க அரசு வெளிட்டது!

ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிரிழந்த உடனேயே எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதுவரை பார்த்திராத இந்தப் புகைப்படங்கள், அவரது உடல் ஒரு ஸ்ட்ரெச்சரில் இருப்பதையும், மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதையும் காட்டுகின்றன. எப்ஸ்டீன் சிறையில் இருந்தபோது நிகழ்ந்த மரணம் குறித்த எஃப்.பி.ஐ விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியாக இருபது படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பல படங்கள் பார்ப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனுடன் பிரேதப் பரிசோதனை மற்றும் சிறையின் உள் ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் […]

இந்தியா – பாகிஸ்தான் போட்டி உறுதி!

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்கும் தீர்மானத்தை வரவேற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்தியா–பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இணை நடத்துனர் என்ற வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மற்றும் இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இலங்கை நன்றியினைத் தெரிவித்துள்ளது. 1996 உலகக் கிண்ணத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை மறக்கவில்லை […]

சவூதி அரேபியாவின் ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட்?

நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்போவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. ஒட்டகங்களை சிறந்த முறையில் வளர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சவூதி அரேபியா அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை ஒட்டக வளர்ப்பின் லாபத்தை அதிகரிக்கும் மற்றும் விலங்குகள் மற்றும் உரிமையாளர்களை அடையாளம் காண்பதற்கான நம்பகமான தரவுத்தளத்தை உருவாக்கும். 2024-ஆம் ஆண்டில், சவூதி அரேபியாவில் சுமார் 2.2 மில்லியன் (22 லட்சம்) ஒட்டகங்கள் இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்த ஒட்டகங்கள் ஒவ்வொரு ஆண்டும் […]

மின்சார சபை மறுசீரமைப்பு வர்த்தமானி வெளியீடு குறித்து முக்கிய தீர்மானம்

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றாது,மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் வலுசக்தி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளன. மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 8 கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களினால் மின்சக்தி மற்றும் வலுசக்தி […]

கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை

கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் வடபகுதி கம்யூனிஸ்ட் இயக்க முக்கியஸ்தர் எம்.ஏ.சி.இக்பால் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ. முத்துலிங்கம், எம். ஏ. சி. இக்பால், பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் பிரதம பேச்சாளரான சமூக அரசியல் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம் “இலங்கை எதிர்நோக்கும் உள்நாட்டு மற்றும் புவிசார் அரசியல் […]

தலைமைப் பதவிகளில் மாற்றம்?

அரச நிறுவனங்களில் பதவிகளை மாற்றுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க, இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அரச நிறுவனங்களில் தலைவர்கள், பணிப்பாளர்கள், குழுத் தலைவர்கள் உள்ளிட்ட பல பதவிகளில் எதிர்வரும் நாட்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.