மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கட்டாக்காலி மாடுகளுக்கான தண்டப்பணம் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளுக்கான தண்டப்பணம் 10ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வானது மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. அமர்வில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன்,சபையின் செயலாளர்,மாநகரசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது சபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல்வரின் தலைமையுரையுடன் சென்ற கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது திருத்தங்களுடன் […]

“நாள் சத்திர சிகிச்சை நிலையம்” யாழ். போதனாவில் திறப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” வெள்ளிக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் […]

தொடரும் மீனவர்களின் போராட்டம்: பேச்சுவார்த்தைகள் தோல்வி!

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச்களைப் பயன்படுத்தி மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மீனவர்கள் குழுவொன்றினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நேற்று சனிக்கிழமை (07) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. குறித்த தடையை நீக்கக்கோரி முல்லைத்தீவு, கோகிலாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் குழு, வியாழக்கிழமை (05) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மீனவர்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் டி. கமகேவுடன் கலந்துரையாடினர், ஆனால் அது தோல்வியடைந்தது, இதன் காரணமாக, அந்தக் குழுவினர் […]

சக அதிகாரியை கத்தியால் குத்திய பொலிஸ் உத்தியோகத்தர்!

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின், பொலிஸ் அதிகாரியொருவர் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய சம்பவமொன்று   பதிவாகியுள்ளது. இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்ததன் காரணமாக தாக்குதல் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது காயமடைந்த பொலிஸ் அதிகாரி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், பின்னர் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் […]

தேசிய வாசிப்பு ஊக்குவிப்புத் திட்டம்

தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைந்த வகையில் செயல்படுத்தப்படும் ‘அருணு தொர’ தேசிய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நடமாடும் நூலக வாகனங்கள் விநியோகிக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக்கிழமை (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், கெஸ்பேவ மற்றும் சீதாவக்கபுர நகர சபைகள் மற்றும் ஹோமாகம, தொம்பே, அத்தனகல்லை, மினுவங்கொடை, வத்தளை, புலத்சிங்ஹல, வலல்லாவிட்ட மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச சபைகளுக்கும் நவீன […]