தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மீது ஒப்பந்த மோசடிக் குற்றச்சாட்டு!

கம்பஹா பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள், அரசாங்க ஒப்பந்தங்களைத் தமது பெயரில் செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அப்பிரதேச சபையின் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர். நேற்று (07) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, உள்ளூராட்சி சபைகள் கட்டளைச் சட்டத்தின் படி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஒப்பந்தங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனத் தொடர்புடைய உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினர். அத்துடன் அவ்வாறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு பணம் […]

நாவலப்பிட்டி விகாரைகளில் புத்தர் சிலைகளில் தங்கக் கலசங்களைத் திருடிய இருவர் கைது

புத்தர் சிலைகளின் நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய குற்றச்சாட்டில், இரண்டு சந்தேகநபர்கள் இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரைகளில் உள்ள புத்தர் சிலைகளின் நெற்றியில் காணப்படும் கலசங்களையே இவ்விரு சந்தேகநபர்களும் திருடியுள்ளனர். அண்மையில் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற இவர்கள், நாவலப்பிட்டி – கெட்டபுலாவ விகாரையில் உள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தைத் திருடியுள்ளனர். இக்காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி […]

காலி – வர்த்தக நிலையம் ஒன்றில் தீவிபத்து

காலி, தெவட்ட சந்திப் பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் – காசா போர் ஆயுதங்களில் கனடாவில் தயாரிக்கப்பட்ட உதிரிப்பாகங்கள்?

இஸ்ரேல் – காசா போரில் பயன்படுத்தப்படும் அமெரிக்க ஆயுதங்களில், கனடாவில் தயாரிக்கப்பட்ட ராணுவ உதிரிப்பாகங்கள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து கனடா அரசு ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் புகாரைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கனடா அரசு நேரடியாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவில்லை என்றாலும், அமெரிக்கா வழியாக இவை இஸ்ரேலைச் சென்றடைவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, […]

நகரசபை வேட்பாளரை குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு

களுத்துறை நகரசபை வேட்பாளரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், ஆனால் இலக்கு தவறிவிட்டதாகவும் களுத்துறை தெற்கு தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து களுத்துறை நகரசபைக்கு போட்டியிட்ட பந்துல பிரசன்னவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பந்துல பிரசன்னவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ஆனால் அதுவும் தோல்வியடைந்தது. களுத்துறை, நாகொட சந்தியில் பந்துல பிரசன்ன […]

மீண்டும் மழை: மண்சரிவு அபாயம்

டிட்வா பேரழிவின் போது ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பசறை பிரதேச செயலாளர் பிரிவின் டபாகோட்டேயில் உள்ள மடித்தகொல்ல பகுதியில் கடும் மழை பெய்தமையால், மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. முந்தைய டிட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட நிலச்சரிவால் தடைபட்ட மடித்தகொல்ல சாலை பழுதுபார்க்கப்பட்டு அதன் மீது மண் குவியல்கள் போடப்பட்டுள்ளன, மேலும் தற்போதைய மழையால், மண் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு கீழே பாயத் தொடங்கியுள்ளது, எனவே மடித்தகொல்ல சாலையும் மீண்டும் மண் குவியல்களால் அடைக்கப்பட்டுள்ளது தேசிய கட்டிட ஆராய்ச்சி […]

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்தொன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் தொடர்பாக அக்போபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, கந்தளாய் – அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்ஊற்று பகுதியில் வெள்ளிக்கிழமை (06) இரவு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே அதற்கான காரணம் என […]

வட சீனாவில் பாரிய வெடிப்பு சம்பவம்!

வட சீனாவில் உள்ள ஓர் உயிர்த்தொழில்நுட்பத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் எட்டு பேர் மாண்டனர். வெடிப்பில் ஒருவர் காணாமல்போனதாக இதற்குமுன்னர் தகவல் வெளியானது. ஆனால் அவரும் மாண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். தொழிற்சாலையின் சட்டப் பிரதிநிதி விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தொழிற்சாலையில் துப்புரவுப் பணிகள் நடைபெறுகின்றன. வெடிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதைப் பார்க்க முடிவதாக ஊடகங்கள் கூறுகின்றன. வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்னர் கடந்த ஜனவரி மாதம் அண்டை மாநிலமொன்றில் உள்ள […]

முப்பரிமாண முறையில் கொங்கிரீட் கட்டமைப்பு

ங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நாட்டில் முதன்முறையாக ஒரு கான்கிரீட் கட்டமைப்பை வெற்றிகரமாக முப்பரிமாண முறையில் அச்சிட்டுள்ளனர் . அது மனிதவளத்தை 40 சதவீதத்துக்கும் மேல் குறைத்து செயல்திறனை 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கிறது. பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்யும் அதே வேளையில் ஊழியர் பற்றாக்குறையையும் இது நிவர்த்தி செய்கிறது. கட்டுமான நடைமுறைகளை மறுவடிவமைக்கத் தொழில்நுட்பம் உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். முப்பரிமாண முறையில் அச்சிட்டுத் தனது சொந்த எடையைத் தாங்கக்கூடிய ஒரு கான்கிரீட் கட்டமைப்பை ஆய்வாளர்கள் […]

இந்தியாவின் விருப்பு, வெறுப்புக்கு அமையவே இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது!

கடந்த கால அரசாங்கங்களை காட்டிலும் இந்தியாவை தீவிரமாக ”லவ்”பண்ணும் (காதலிக்கும்) அரசாங்கமாக அநுரகுமார அரசாங்கமே உள்ளது. இந்தியாவின் விருப்பு, வெறுப்புக்கு அமையவே அரசாங்கம் செயற்படுகிறது. இவர்களுக்கு வெட்கமில்லையா என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்தியாவுக்கு எதிராக இந்திய எதிர்ப்பு மாதத்தை அனுஸ்டித்தவர்களுக்கு […]