காட்டு விலங்குப் பாகங்களுடன் 6 பேர் கைது

கேகாலை, அலபலாவலவத்துர பகுதியில், வனவிலங்குகளின் பல்வேறு பாகங்கள் உட்பட, 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கேகாலை, அலபலாவலவத்துர மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. விமானப்படையின் புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ரிட்டிகல வனவிலங்கு அலுவலகம், குருநாகல் வனவிலங்கு உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் குருநாகல் நாரம்பெத்த பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் இந்த சோதனையில் இணைந்திருந்தனர். விமானப்படை புலனாய்வு […]

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழி துஷ்பிரயோகம்: கட்டளையை திருத்த கோரிக்கை

சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநயாகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றமாக பத்தாவது பாராளுமன்றம் திகழ்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் கொண்ட ஒரு நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக, அவர்கள் பாராளுமன்ற சபைக்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். பெண் பாராளுமன்ற […]

இலங்கை கடற்படையால் மீனவ சமூகத்தினருக்கு ஆதரவு பயிற்சி

இலங்கை கடற்படையால் மீனவ சமூகத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காப்பு (Basic Life Support – BLS) பயிற்சி திட்டம் திருகோணமலையில் உள்ள கோட்பே மீன்வளத் துறைமுகத்தில் 2026 பெப்ரவரி 02, அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. அதன்படி, ‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ திட்டத்தின் கீழ் சமூக உறுப்பினர்களின் சமூக வலுவூட்டலின் கீழ், கிழக்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், திருகோணமலையில் உள்ள கோட் பே மீன்வள துறைமுகத்தில் உள்ள மீனவ சமூகத்திற்கு […]

ரமலான் மாதத்தை முன்னிட்டு இலங்கை முஸ்லிம்களுக்கு குவைத் தொன் ஈச்சம் பழம் வழங்கல்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு இலங்கை முஸ்லிம்களுக்கு குவைத் அரசாங்கம் இம்முறை 25 தொன் ஈச்சம் பழங்கள் குவைத்தி பதிவு செய்யப்பட்ட 16 முஸ்லிம் தன்னவர் ஆர்வ நிறுவனங்கள் ஊடாக ஞாயிற்றுக்கிழமை (08) அன்று வழங்கி வைக்கப்பட்டது. குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம் திங்கட்கிழமை (09) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கொழும்பு 7 ல் உள்ள குவைத் தூதரகத்தில் வைத்து ஈச்சம் பழங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந் […]

மியாமியில் உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் சந்திப்பு

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் அடுத்த வாரம் அமெரிக்காவின் மியாமியில் சந்தித்துப் பேச அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளதாக செலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் ரஷ்யாவின் கருத்து இன்னும் வெளியாகவில்லை. இந்த சந்திப்பு நடந்தால், அது, உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்க மண்ணில் […]

கனடா மத்திய அரசினால் கியூபாவுக்குப் பயண எச்சரிக்கை!

செவ்வாய்க்கிழமை கனடா மத்திய அரசு கியூபாவுக்கான பயண எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு, தண்ணீர், மருந்து போன்ற அடிப்படை தேவைகளின் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், அது விடுதிகளையும் பாதிக்கக்கூடும் என்று கனடியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. “கியூபாவில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்,” என்று அந்த அறிவுறுத்தல் குறிப்பிடுகிறது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சிதைந்த உள்கட்டமைப்பு காரணமாக கியூபாவில் தினமும் பரவலான மின்தடைகள் ஏற்படுகின்றன. சுற்றுலா வருகை குறைவு, அமெரிக்காவின் கடுமையான தடைகள் மற்றும் நாணய […]

உள்நாட்டு தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் நாளை திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார அறிவித்துள்ளார். இதற்கமைய சாதாரண தபால் கட்டணம் 70 ரூபாயாகவும், பதிவுத் தபால் கட்டணம் 130 ரூபாயாகவும் ஆரம்ப நிறை 20 கிராமில் இருந்து 30 கிராம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய நிர்ணயிக்கப்பட்ட தபால் அட்டைக்கான விலை 40 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 250 கிராம் உள்நாட்டுச் சாதாரண பொதிகள் சேவைக்கான ஆரம்ப கட்டணம் 150 ரூபாயாகவும், விரைவு ‘கூரியர்’ […]

ஆப்கானிஸ்தானை வென்றது நியூசிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் தற்போது முடிவுக்கு வந்த ஆப்கானிஸ்தானுக்கெதிரான குழு டி போட்டியில் நியூசிலாந்து வென்றது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ரஷீட் கான், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், குல்படின் நைப்பின் 63 (35), செதிகுல்லா அட்டலின் 29 (24), ரஹ்மனுல்லா குர்பாஸின் 27 (22), டர்விஷ் ரசூலியின் 20 (13), அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் 14 (07), […]

மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக, ஓராண்டு காலத்திற்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன. இதன்படி, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் 1,964 மேலதிக விண்ணப்பங்கள் […]

நாளாந்த விசேட சோதனை ஒரே நாளில் 36,000 பேர் சோதனை; 500 இற்கும் மேற்பட்டோர் கைது

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நாடளாவிய ரீதியில் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த விசேட சோதனை நடவடிக்கைகளில் 526 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (07) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது 36,840 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 144 பேரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். […]