உலக வங்கி குழு இலங்கை விஜயம்!

2022-23 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை மீண்டும் தொடங்கும் நோக்கில் அடுத்த மாதம் உலக வங்கி குழு இலங்கை வரவுள்ளது. ‘இதன்போது, டிட்வா’ புயலால் ஏற்பட்ட 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சேதங்கள் மற்றும் அதற்கான நிதி உதவி குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் பூர்த்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் […]

பட்டதாரிகள் ஆசிரியர் சேவை; வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு?

பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமக்கான நியமனங்களை உறுதிப்படுத்தி அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இன்று(8.2.2026) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த சங்க உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் என்று சொல்வதை விட ஏமாற்றப்பட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும். நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல. எமது உரிமைகளுக்காகப் […]

வல்வெட்டித்துறைத்துறையில் நடந்த தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு

வல்வெட்டித்துறைத்துறையில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு இடம்பெற்று 55 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, அதன் வரலாற்றை வால்வெட்டித்துறை நகரசபையின் தலைவரான எம்.கே சிவாஜிலிங்கம் எடுத்துரைத்துள்ளார். நேற்று இரவு வல்வெட்டித்துறை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தமிழ்த் தேசியக்கட்சியின் வடமராட்சி – வல்வெட்டித்துறை அமைப்பாளரான விமலதாஸ் கவிச்செல்வன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரான செல்வராசா விதுசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 1971 ஆம் […]

நாட்டை தாக்கிய தித்வா புயலால் 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர்

நாட்டை தாக்கிய தித்வா புயல் காரணமாக தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இந்த தகவல்களைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிப்பதற்கும் அவர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும். […]

இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது; வெலிஓயா சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சி கடும் விசனம்

இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தத்தமது மொழியில் பேசும் உரிமை உண்டு என ஜனாதிபதி அடிக்கடி கூறுகின்றார். ஆனால் நடைமுறை யதார்த்தம் அவ்வாறானதாக இல்லை என்பதற்கு மணலாறு (வெலிஓயா) ஒரு உதாரணமாகும். அரசாங்கம் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கின்றது. மொழி உரிமை மிகமுக்கியம் எனக் கூறிக்கொண்டு, மறுபுறம் அவ்வுரிமை மறுக்கப்படுகின்றது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 3 ஆம் திகதி […]

அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான கூட்டம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில், அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post Disaster Needs Assessment – PDNA) தொடர்பான கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. முக்கிய பங்குதார நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். PDNA செயல்முறை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தேசிய திட்டமிடல் திணைக்களம் (NPD) மற்றும் பிற தேசிய-சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. உட்கட்டமைப்பு சேதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் சமூக […]

இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் முறையற்ற பண வசூலிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுப்பதற்கு அரசாங்கம் முறையான சுற்றறிக்கையை வெளியிட வேண்டுமெனஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிடுகையில், பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான கலாநிதி ஹரினி அமரசூரிய பாடசாலைகளில் இனிமேல் பண வசூலிப்பு இடம் […]

அமைச்சரவையில் மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றது!

ன்சார சபை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் நாளை (09) அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டம் 5 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதில் 04 கட்டங்கள் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, அடிப்படை கைமாற்றல் திட்டம், வருடாந்த மின் கொள்முதல் திட்டம், நீண்டகால மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் நீண்டகால […]

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் டோலி பேகம்

ஸ்கார்பாரோ தென்மேற்கு தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் (MPP), ஒன்டாரியோ என்.டி.பி (NDP) கட்சியின் துணைத் தலைவருமான டோலி பேகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எதிர்வரும் மத்திய அரசு (Federal) இடைத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பாரோ தென்மேற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பில் பிளேயர் (Bill Blair), ஐக்கிய ராச்சியத்திற்கான (UK) கனடிய தூதராக நியமிக்கப்பட்டதை அடுத்து அந்தத் தொகுதிக்கான ஆசனம் வெறுமையானது. என்.டி.பி-யின் முக்கிய முகமாக இருந்த டோலி […]

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதா ஏயார் கனடா?

தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக ஏயார் கனடா (Air Canada) நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கக் கனடா உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. ஏயார் கனடா விமானப் பயணச்சீட்டு விலைகளை இணையதளத்தில் அதிக விலையில் கட்டணங்களைக் காண்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மைக்கேல் சைலாஸ் என்பவர் ஏயார் கனடா இணையதளத்தில் காட்டிய விலையை விட தான் பயணச்சீட்டு வாங்கும் போது 124 டொலர் கூடுதலாக வழங்கியதாக குறிப்பிட்டிருக்கின்றார். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு சேவையின் முழு விலையையும் ஆரம்பத்திலேயே நுகர்வோருக்குத் […]