நீர்கொழும்பில் கைத்துப்பாக்கி மீட்பு!

நீர்கொழும்பு- துன்கல்பிடிய கடற்கரை வீதிக்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று(7.2.2026) மாலை முன்னெடுத்த தேடுதலின்போதே இந்தக் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள கடற்கரை அணுகல் வீதியின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.65 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் துன்கல்பிடிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு நினைவேந்தல்

கிளிநொச்சியில் மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கான நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. மாவை ஒரு சரித்திரம் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று ( 08.02.2026) பகல் 9.30 மணிக்கு கிளிநொச்சி யில் அமைந்துள்ள கே.கே. மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாவை சேனாதிராஜாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்த்தரப்புக்கள் அரசியல் தீர்வு குறித்து பொதுநிலைப்பாட்டை எட்டுவதற்கு முயற்சி?

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. இலங்கை – சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த […]
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடல்
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளுக்காக கேள்வி மனுக்கள் கோரப்பட்ட பின்னர் நிறுவனமொன்றுக்கு அது வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் அது தொடர்பான பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெரவில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்துடன் இணைந்து வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் கூறியுள்ளது. […]
கடந்த அரசாங்கங்களைப் போன்று எமது அரசாங்கம் கம்பனிகளுக்கு அடிபணியாது – கலைச்செல்வி எம். பி தெரிவிப்பு

தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கடந்த அரசாங்கங்களைப் போன்று எமது அரசாங்கம் கம்பனிகளுக்கு அடிபணியாது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இன்று(08.02.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்தேசியக் கம்பனிகளுடன் 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே இந்தக் கூட்டு ஒப்பந்தமாகும். கூட்டு ஒப்பந்தம் மட்டுமே மலையக மக்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அல்லது அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அவசியம் என்று கூறுவதைக் […]
சட்டவிரோதமாக கட்டப்பட்டதையிட்டி திஸ்ஸ விகாரையின் காணி உரிமம் தொடர்பில் விகாராதிபதி கோரிக்கை

சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள், தமது காணி உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயருக்கு மாற்றம் செய்தால், அந்தக் காணியை உரிமையாளர்களின் பெயருக்கு உரிமை மாற்றி வழங்க தயாராக இருப்பதாக நயினாதீவு நாகதீப விகாராதிபதி தெரிவித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கமைய இன்று(08.05.2026) நயினாதீவு நாகதீப விகாராதிபதியை நேரில் சென்று சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியதாக அவர் […]
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதிச் செயலாளர் நாயகம் மீதான விசாரணைகள்

இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன ஆகிய இருவருக்கும் எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படவுள்ளன. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய பமுறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, இது தொடர்பான தீர்மானித்தை எடுத்துள்ளது. சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட 8 பிரதான குற்றச்சாட்டுகள் குறித்து சபாநாயகர் விசாரணைக்கு உள்ளாகிறார்: முறையற்ற வகையில் இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெறுதல்அதிகாரப்பூர்வ வாகனங்கள் மற்றும் நாடாளுமன்ற ஊடக உபகரணங்களை தவறாகப் பயன்படுத்துதல். […]
விபத்தில் மூவர் பலி

தல்துவ – அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான குறித்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததுடன், மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த காரில் 4 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர். குறித்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்ட உதவிகள்

இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் டித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்பார்க்கும் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து […]
புதிய சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வது குறித்த விவாதங்கள்

புதிய சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வது குறித்த விவாதங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதானது, அச்சட்டத்தின் பிரயோகத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எவரேனும் மேற்கொண்டிருக்கும் முயற்சியின் ஓரங்கமா என்ற கேள்வி எழுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் சர்வ ஜன நீதி அமைப்பு, பயங்கரவாதத்தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும் எனவும், தற்போது புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்டவரைவைத் தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது. தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் […]