வடக்கின் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு புதிய திட்டம்

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் தயாரிக்கப்பட்ட “2026 – 2030 வடக்கு சுற்றுலா அபிவிருத்தி மூலோபாயத் திட்டம்” நேற்று(06.02.2026) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போதே, திட்ட அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதோடு, அத்திட்டம் தொடர்பான விரிவான முன்னளிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியாப் பல்கலைக்கழக வியாபாரக் கற்கைகள் பீடத்திடம் இந்த […]

சுவிஸ் பேர்ன் பல்சமய இல்லம் தொடர்பாக மன்னார் ஆயருடன் கலந்துரையாடல்

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் நகரில் உள்ள “பல்சமய இல்லம்” (Haus der Religionen) உலகின் பல்வேறு மதங்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கும் புதுமையான கட்டிடமாக கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக பண்பாட்டு இணக்கத்திற்கும் மதங்களிடைய உரையாடலுக்கும் முக்கிய தளமாக திகழ்கின்றது. பேர்ன் நகரின் வடபகுதியிலிருந்து தெற்கே செல்லும் பயணிகளுக்குக் கண்ணில் பட்டுவிடக்கூடிய இந்த கட்டிடம், ஐரோப்பாவில் கூட அரிதாகக் காணப்படும் தனித்துவத்தை உடையது. இந்த ஒரே கட்டிடத்தில் கருவறையில் தமிழ் வழிபாடு நடைபெறும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில், இசுலாமியப் […]

இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட அலங்காரச் செடிகளுடன் இரண்டு பெண்களையும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து வந்த இரண்டு இலங்கைப் பெண்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர். இரண்டு பெண் சந்தேக நபர்களும் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அலங்காரச் செடிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் […]

வீதியோரத்தால் பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவி மீது லொரி மோதிப் பலி

இரத்தினபுரியில் வீதியோரத்தில் நடந்து சென்ற பாடசாலை மாணவி ஒருவர் லொரி மோதி உயிரிழந்துள்ளார். எலபத பொலிஸ் பிரிவில் கனதொல-இலுக்தென்ன வீதியில் உள்ள 79 ஆம் இலக்க ரப்பர் தோட்டத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாணவி இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவர் அலுகட்டிய பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்து தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எலபத பொலிஸார் மேலதிக […]

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தின்படி, 4,250 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,330 ரூபாவாகும். அதேபோன்று 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,742 ரூபாவாகும்.

இன்றும் மழை

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக ஓரளவு பலத்த […]

இன்று உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இலங்கை மற்றும் இந்திய ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் இலங்கை, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், சிம்பாப்வே அணிகளும் சி பிரிவில் இங்கிலாந்து, இத்தாலி, […]

அவசரகால நிலை நீடிப்பு தொடர்பாக ஜனாதிபதி விளக்கம்

மீள்கட்டியெழுப்பும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்காக மாத்திரமே அவசரகால நிலை நீடிப்பு ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோஷமாக இனவாதம் மாறிவிட்டது என்றும், வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நமது மிகப்பாரிய பலம் ஒற்றுமை என்றும், நமது நாட்டின் முக்கிய பலம் நாம் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது என்றும், அனைவரும் […]

புதிய தேசிய கனிமக் கொள்கை வரும்வரை: கனரக கனிய அகழ்வு உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை (Mining Licenses) வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சில் நேற்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். புதிய தேசிய கனிமக் கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றிச் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை கட்டுமானத் துறைக்குத் தேவையான […]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழில் போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்யுமாறும், அதற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்துமாறு கோரியும் யாழ்ப்பாண நகரில் நேற்று(06) கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது. அத்துடன் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு காரணங்களைக் கூறி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறுவதற்குப் போராட்டக்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட உடனடியாக முன்வர […]