கறுப்பின வரலாற்று மாதத்தின் 30 ஆண்டு நிறைவு

இன்று பிராம்டன் நகராட்சியானது கறுப்பின வரலாற்று மாதத்தின் 30 ஆண்டுகள் நிறைவை த ரோஸ் (The Rose) அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நினைவு கூருகிறது. தலைமுறைகளைத் தாண்டி கறுப்பின சமூகத்தின் சிறப்பையும் அறிவாற்றலையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், விருதுகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் நடைபெறும் இந்த மாலை நிகழ்வில் சகல சமூகத்தினரையும் இலவசமாக கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒன்டாரியோ அரசினால் நாளை எக்லின்டன் க்ராஸ்டவுன் எல்.ஆர்.டி. திறப்பு

டொரோண்டோ — பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்தி, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தைச் சுருக்குவதன் மூலம் ஒன்டாரியோவை பாதுகாக்கும் மாகாணத் திட்டத்தின் முக்கியமான கட்டமாக, டொரோண்டோவில் எக்லின்டன் க்ராஸ்டவுன் லைட் ரெயில் டிரான்சிட் (LRT) சேவையின் அதிகாரப்பூர்வத் திறப்பை ஒன்டாரியோ அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய போக்குவரத்து வழித்தடம் நாளை 2026 பிப்ரவரி 8 முதல் டொரோண்டோ டிரான்சிட் கமிஷன் (TTC) நிர்வாகத்தின் கீழ் செயல்படத் தொடங்கும். இது ஒவ்வொரு வாரநாளிலும் 123,000-க்கும் மேற்பட்ட பயணிகளைச் சேவையளித்து, […]
2026 ஆண்டு பட்ஜெட்டை பிராம்டன் நகராட்சி ஏற்றுக்கொண்டது

பிராம்டன் நகராட்சி 2026 ஆண்டு பட்ஜெட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சியின் சொத்து வரி கட்டணத்தில் நகரத்தின் பங்கிற்கு 0% உயர்வு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதுடன், பிராம்டனின் இரண்டாவது மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீட்டை ஆதரிக்கும் நோக்கில் தனிப்பட்ட 1% வரி விதிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது புதிய மருத்துவமனையின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதோடு, வில்லியம் ஒஸ்லர் சுகாதார அமைப்பிற்கு நகராட்சி வழங்க வேண்டிய மாகாண கட்டாயமான 125 மில்லியன் டாலர் பங்களிப்பிற்கும் உதவுகிறது. பல்வேறு சமூக ஆலோசனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 2026 […]
இலங்கை தமிழரசுக்கட்சியில் சாணக்கியனுக்கு புதிய பதவி

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டார். இதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல்லியடி பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியியின் சுமந்திரன் அணி இனிப்பு வழங்கியும், வெடி கொழுத்தியும் கொண்டாடியுள்ளது. குறித்த அணி இளைஞர்கள் பொதுமக்கள், மற்றும் பயணிகள், வியாபாரிகளுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கி கொண்டாடியுள்ளனர். இதன்போது, சாணக்கியனின் அரசியல் செயல்பாடுகள், மற்றும் தலைமைக் குணங்களைப் பாராட்டும் வகையிலான கருத்துகள் இளைஞர்களால் வெளியிடப்பட்டன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்!

இலங்கையில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரின் சுற்றுப்பயணம் நிறைவடைந்துள்ளது. இந்த பயணம், வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவரால் கடந்த மாதம் 20 ஆம் திகதி காலை 8.45 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று(06.02.2026) மன்னாரில் நிறைவு செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி, காலை 8.45 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் […]
கிழக்கு மாகாண ஆளுநருக்கும் புதிய கடற்படை தளபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது, பாதுகாப்பு மற்றும் கடலோரப் பாதுகாப்பு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் மற்றும் அவசர கால அனர்த்தங்களின் போது கடற்படையினரால் வழங்கப்படக்கூடிய ஒத்துழைப்புகள் மற்றும் […]
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை அரசு உடனடியாக நடத்த வேண்டும் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், மாகாண சபைகளுக்கென அரசியல் யாப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் வழங்கி, மக்களாட்சியைக் கொண்டவையாக அவை செயற்படுவதற்கு வேண்டியனவற்றை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு மேற்கொண்டுள்ள தீர்மானம் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் வை.விக்கினேஸ்வரன் […]
வாழைச்சேனையில் ரொக்கட் லோஞ்சர் மீட்பு

வாழைச்சேனை, குடும்பிமலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சுவீடன் நாட்டுத் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அரலகங்வில சிறப்புப் பணிக்குழுவுடன் இணைந்து இந்த மூன்று ராக்கெட் லாஞ்சர்களையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலத்சேனை, குடும்பிமலைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தபோது யாரோ ஒருவரால் இவை தோண்டி எடுக்கப்பட்டு அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட மூன்று ராக்கெட் லாஞ்சர்களும் […]
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகிய ஹேசில்வூட்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட் விலகியுள்ளார். இந்நிலையில் ஹேசில்வூட்டின் பிரதியீடு குறித்து தொடரின் இறுதிப் பகுதியில் தீர்மானிக்கப்படவுள்ளது.
இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியனான இந்தியா

சிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற்று வந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் ஆறாவது தடவையாக இந்தியா சம்பியனானது. ஹராரேயில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற இங்கிலாந்துடனான இறுதிப் போட்டியில் வென்றே இந்தியா சம்பியனானது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: இந்தியா இந்தியா: 411/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: வைபவ் சூரியவன்ஷி 175 (80), ஆயுஷ் மாத்ரே 53 (51), அபிக்யான் குன்டு 40 (31), கனிஷ் சோஹன் ஆ.இ 37 (20), வேதந் ட்ரிவேடி 32 (36), […]