கடும் மின்னல்; ’செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை

இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் கடும் மின்னல் தாக்கம் தொடர்பான ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் இன்று விடுத்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் […]
மதுவரி வருமானத்தை அதிகரிக்க திட்டம்?

மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவுள்ள டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு மதுவரித் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் தமது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மதுவரித் திணைக்களத்தின் வினைத்திறனை அதிகரிப்பதன் மூலம் வருமான சேகரிப்பை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. அதற்காகத் தேவையான டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறை, புதிய சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக வினைத்திறனை மேம்படுத்தல், மனித வள […]
கறிவேப்பிலை பறித்துக்கொண்டிருந்த தாயும் மகளும் மின்சாரம் தாக்கிப் பலி

கலஹா – நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில், மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (07) காலை 10.00 மணியளவில் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கறிவேப்பிலை மரத்தில் இருந்து கறிவேப்பிலை பறித்துக்கொண்டிருந்தபோது, மின்சாரக்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார் பாஹீம் அஷ்ரப்

கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று சனிக்கிழமை (07) நடைபெற்ற பத்தாவது ஐசிசி ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் நெதர்லாந்தின் சவாலை முறியடித்து 3 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் பாகிஸ்தான் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. போட்டியின் 18ஆவது ஓவர் முடிவில் தோல்வியின் விளிம்பிலிருந்த பாகிஸ்தான் அணியை பாஹீம் அஷ்ரப்பின் கடைசிநேர அதிரடி மீட்டெடுத்தது. பாகிஸ்தானில் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் வன் பீக்கின் பந்துவீச்சில் 6, […]
இந்தியாவின் உதவிகள் தொடரும் – அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது பேச்சு நடத்தப்பட்டது. டித்வா புயலின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு ரில்வின் சில்வா நன்றி தெரிவித்தார். இலங்கைக்கான தமது நாட்டு ஆதரவை இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தினார். இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியாவின் உதவிகள் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மணல் அகழ்வில் பல்வேறு ஊழல் அம்பலம்!

யாழ். வடமராட்சி, அம்பன் கிழக்கு பகுதியில் 2023, 2024 காலப்பகுதியில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் ஊடக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட மணல் விநியோகத்தில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தால் கணக்காய்வு நடவடிக்கைகளுக்கென நியமிக்கபட்ட 5 பேர் கொண்ட கணக்காய்வு குழு அறிக்கையினை அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்துள்ளது. இதில் பல்வேறு ஊழல் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 840 உழவு […]
அமெரிக்காவில் தினசரி நாளிதழ் ‘வொஷிங்டன் போஸ்ட்’ ஊழியர்கள் 300 பேர் நீக்கம்

அமெரிக்காவில் ‘நியூயோர்க் டைம்ஸ்’, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’, ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகும் 3-வது பெரிய தினசரி நாளிதழ் ‘வொஷிங்டன் போஸ்ட்’. 1877-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் உரிமை பலரிடம் கை மாறியுள்ளது. இறுதியாக கடந்த 2013ம் ஆண்டில் இந்த பத்திரிகையை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 250 மில்லியன் டொலருக்கு வாங்கினார். இந்த நாளிதழின் விற்பனை கடந்தாண்டில் 1 லட்சம் பிரதிகளுக்கு கீழ் குறைந்தது. கடந்த 55 ஆண்டுகளில் முதல் முறையாக இதன் விற்பனை […]
ஒலுகலவின் இடத்திற்கு பதில் பணிப்பாளர் நியமனம்
வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.சி. ஆரியவங்ச நியமிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக தற்போது கடமை விடுப்பில் இருக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மீண்டும் பணிக்குத் திரும்பும் வரை, அந்தப் பதவியின் பதில் கடமைகளை மேற்கொள்வதற்காக கே.சி. ஆரியவங்ச நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.சி. ஆரியவங்ச தற்போது மத்திய குற்றத்தடுப்பு பணியகத்தின் (CCIB) பணிப்பாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
பாகிஸ்தான் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 31 பேர் பலி

பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்லாமாபாத் பொலிஸாரை மேற்கோள் காட்டி அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மீட்புப் பணியாளர்களும் நேரில் கண்டவர்களும் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொலிஸார் மற்றும் […]
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை

ரைவலைக் கைத்தொழிலுக்காக இயந்திர சாதனங்களைப் பயன்படுத்துவதனால் கரையோரச் சூழல் அமைப்பிற்கும் ஏனைய மீனவ சமூகத்தினருக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாகப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, அனைத்து கரைவலை மீனவர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றார். உழவு இயந்திரங்கள் (Tractors) மற்றும் விஞ்ச் (Winch) இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராகச் சில பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், […]