சென்னையில் நோக்கியா ரூ. 270 கோடி முதலீடு!
சென்னையில் முதற்கட்டமாக நோக்கியா நிறுவனம் ரூ. 270 கோடி முதலீடு செய்யவிருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார். இதுகுறித்த அறிவிக்கையில் டிஆர்பி ராஜா கூறியிருப்பதாவது, நிலையான நெட்வொர்க்குகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிக்காக தமிழ்நாட்டை நோக்கியா அணுகியுள்ளது. இதன் மூலம், தொலைத் தொடர்பில் மாநிலத்தின் தலைமை வலுப்படுகிறது. சென்னையில் சிப்காட் சிறுசேரியில் நோக்கியா தனது புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைத் திறந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 200 வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நோக்கியா, மாநிலத்தின் […]
மசூதி தற்கொலைப் படை தாக்குதல் பின்னணியில் ஒரு பெண்?
இஸ்லாமாபாத் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதன் பின்னணியில் ஒரு பெண்ணுக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் வெள்ளிக்கிழமை(பிப். 6) தொழுகையின்போது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; மேலும் 169 போ் காயமடைந்தனா். மேற்கண்ட கொடுங்குற்றச் செயலில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், தற்கொலைப்படைத் தாக்குதலை நிகழ்த்தியதாகக் கருதப்படும் நபர் யாசிர் என்று அடையாளம் காணப்பட்டது. அவரது பின்புலத்தை ஆராய்ந்ததில், பேஷாவரில் […]
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை!
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுவதாக திமுக எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்துக்கான ரயில்வே பட்ஜெட் குறித்து மாநிலங்களவை எம்.பி.யான பி. வில்சன், “பாஜக அரசின்கீழ் தமிழகத்துக்கு 7.5 மடங்கு அதிக ரயில்வே நிதி கிடைப்பதாக மத்திய ரயில்வே அமைச்சகம் மீண்டும் மீண்டும் கூறுகிறது. ரயில்வே நிதியானது, ஆண்டுக்கு (2009 – 14) ரூ. 879 கோடியிலிருந்து 2025 – 26 ஆம் ஆண்டில் ரூ. 6,626 கோடியாக உயர்ந்ததாக மத்திய […]
தமிழ் இலக்கியம் என்றும் அழியாப் புகழ் கொண்டது…
லகிற்கு இந்தியா அளித்த பரிசு தமிழ் என மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ) மலேசியா வந்துள்ள பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று வந்துள்ள பிரதமர் மோடி மலேசியா பயணம் மேற்கொள்கிறார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை […]
அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி!

அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட தரை விட்டு தரை பாயும் அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்திலிருந்த நேற்று (6) இந்த சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் ராணுவம் இணைந்து இந்த சோதனையை நடத்தியது. ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்பக் கூறுகளும் வெற்றிகரமாக செயல்பட்டன எனவும் ஏவுகணை அதன் இலக்கை மிகத் […]
பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது
நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி வியாழக்கிழமை (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின் நானுஓயா பொலிஸாரால் குறித்த ஆசிரியரை கைது […]
கொங்கோ சுரங்க பகுதியில் மண்சரிவு ; 200 பேர் உயிரிழப்பு

கிழக்கு கொங்கோவின் ரூபாயா பகுதியில் உள்ள கோல்டான் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 200 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொங்கோவின் ரூபாயா பகுதியில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லுவோவோ சுரங்கத் தளத்தில் நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் பெய்த கடும் மழையையடுத்து சுரங்கப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பல தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கியுள்ளனர். மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் மக்கள் […]
நேபாளத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் மேற்கு பகுதியான சுதூர்பச்சிம் மாகாணத்தின் பைதடி மாவட்டத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக பைதடி நகரின் பாவ்னி கிராமத்திலிருந்து பாஜங் நகரின் சன்குடா கிராமத்தை நோக்கி பயணித்த பஸ், மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 150 முதல் 200 மீற்றர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாகவும், சம்பவ இடத்திலேயே […]
முல்லைத்தீவு நெற்கொள்வனவு தாமதம் குறித்து துரைராசா ரவிகரன் கேள்வி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட 304 மெற்றிக்தொன் நெல் பயன்டுத்தப்படாமல் களஞ்சியசாலைகளில் நிறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள களஞ்சியசாலை நெருக்கடியினாலேயே நெல்சந்தைப்படுத்தல்சபையினால் தற்போது விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நெல் சந்தைப்படுத்தல்சபை விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை விரைந்து ஆரம்பிக்கவேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன்.அந்தவகையில் […]
யாழ்.கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

யாழ்ப்பாணம் – கச்சத்தீவு, புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா பெப்ரவரி 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் இந்த நிகழ்விற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில், வருகைத்தரவுள்ள பக்தர்களின் வசதிக்காக உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்த இலங்கை கடற்படை தற்போது செயற்பட்டு வருகிறது. கடற்படைத் தளபதியின் உத்தரவிற்கமைய, வடக்கு கடற்படைப் பகுதித் தளபதியின் மேற்பார்வையின்கீழ், கச்சத்தீவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கடற்படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வரவிருக்கும் திருவிழாவிற்குத் தயாராகும் வகையில் […]