மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (07) நடைபெற்ற 2026 ரி20 உலகக் கிண்ணத் தொடரின் 2ஆவது லீக் ஆட்டத்தில், ஸ்கொட்லாந்து அணியை 35 ஓட்டங்களால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்கொட்லாந்து தரப்பில் […]
கையடக்க தொலைபேசியால் ஏற்பட்ட தீ விபத்து!

சீகிரியா, கலகொட்டுவ பகுதியில் வீடொன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டு, வீட்டின் ஒரு அறை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. சார்ஜருடன் கையடக்க தொலைபேசி இணைக்கப்பட்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர் பயன்படுத்திய அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும், மாணவரின் மடிக்கணினி, உடைகள் மற்றும் கல்விக்குத் தேவையான அனைத்து புத்தகங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. […]
சர்ச்சைக்குரிய சட்டமூலம் தொடர்பில் வெளியான தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் இம்மாதம் 17 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள நாடாளுமன்ற விவகாரக் குழு திட்டமிட்டுள்ளதாக அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் அன்றைய தினம் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார். இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும் பிரிவு 121(1) இன் கீழ் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று […]
மீனவப் படகுகள் மீதான தாக்குதல்: அரசாங்கம் தொடர் விசாரணை

இலங்கை கடற்பரப்பில் இரண்டு மீனவப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில் இன்று (07) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை கடற்படைக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்தத் […]
இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதிக்கு சரமாரி அடி!

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தின் சாரதி மீது, அதே வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் இன்று (07) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் இ.போ.ச டிப்போவின் தரைக்கால முகாமையாளர் தெரிவித்துள்ளார். டயகமவில் இருந்து காலை 6:30 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்த குறித்த பேருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதற்குப் […]
அடுத்த 3 ஆண்டுகளில் தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்!

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் […]
இலவங்கப்பட்டை ஏற்றுமதி; 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 8,000 கோடி ரூபா) வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைவதற்குத் தமது நிறுவனம் எதிர்பார்ப்பதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர தெரிவித்தார். இலவங்கப்பட்டை தயாரிப்புகளுள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது ‘இலவங்கப்பட்டை சுருள்கள்’ ஆகும். இதன் மூலம் மாத்திரம் 251 மில்லியன் அமெரிக்க டொலர் […]
கணினி சார்ந்த சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய பொலிஸ் பிரிவு

கணினி சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்று (06) பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார். தற்போது அதிகரித்து வரும் குற்றங்களின் தன்மை குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர், நாளொன்றுக்கு 23 முதல் 25 வரையான சைபர் குற்றங்கள் பதிவாகுவதாகவும், இது கணிசமான அளவு உயர்வு எனவும் சுட்டிக்காட்டினார். […]
இளைஞன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை

ரத்மலானை, தர்மாராம வீதிப் பகுதியில் ரயில் வீதிக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் முற்றியதில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் தடிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட அறுவர் கல்கிஸ்ஸ பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ரத்மலானை, ஸ்ரீ தர்மாராம வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே […]
சூடானில் வாகனங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள்: 8 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி!
சூடானில் வாகனங்கள் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களில் 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். மத்திய சூடானின் வடக்கு கோர்டோஃபேன் மாகாணத்தில் ரஹாத் நகரையொட்டி, துணை ராணுவப்படையின் கிளர்ச்சியாளர் பிரிவால் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூடானில் நீடிக்கும் உள்நாட்டுச் சண்டை காரணமாக, இடம்பெயர்ந்து சென்ற மக்களைக் குறிவைத்து சனிக்கிழமை(பிப். 7) தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், வாகனங்கள் மீதான தாக்குதல்களில் 2 கைக்குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டதாக […]