தேசிய விசேட நடவடிக்கை; 777 சந்தேகநபர்கள் கைது

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல் மற்றும் அதற்கான தேவையைக் குறைக்கும் நோக்கில் இலங்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “முழு நாடும் ஒன்றாக” தேசிய விசேட நடவடிக்கையின் கீழ், நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 777 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது பொலிஸாரால் பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: ஹெரோயின்: 434 கிராம் ஐஸ் (Ice): 477 கிராம் கொக்கெய்ன்: 2 கிராம் 536 மில்லி கிராம் கஞ்சா: 5 கிலோ கிராம் 658 கிராம் […]

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்; இலங்கை குறித்து 182 இடங்களில் குறிப்பு

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளியான அமெரிக்கப் பிரஜை எப்ஸ்டீன் பற்றி அந்நாட்டில் வெளியிடப்பட்ட புதிய ஆவணத் தொகுப்பில், இலங்கை பற்றி 182 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர் இந்நாட்டிற்குள் ஏதேனும் தவறுகளை இழைத்துள்ளதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்காவில் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனின் வழக்குக்குரிய மில்லியன் கணக்கான புதிய ஆவணங்கள் அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அதனுடன், இதுவரை வெளியாகி உள்ள, எப்ஸ்டீனுடன் தொடர்புகளைப் பேணிய உலகின் […]

யாழ். இளவாலை இளைஞர் தற்கொலை!

யாழ்ப்பாணம், இளவாலை – அக்கத்தானைப் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்ற இளைஞர், கடன் சுமை காரணமாகத் தவறான முடிவெடுத்து இன்று (07) உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். நேற்றைய தினம் வேலை நிமித்தம் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற இவர், இன்று காலை சண்டிலிப்பாய் – அந்திரான் வாய்க்கால் பகுதியில் உள்ள துருசு ஒன்றில் சுருக்கு மாட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த இளைஞனின் உறவினர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, நீண்டகாலமாக நிலவி வந்த கடன் சுமை காரணமாக […]

இரத்மலானை இளைஞன் அடித்துக்கொலை : 4 பெண்கள் உட்பட பலர் கைது

இரத்மலானையில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் முற்றியதில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பு தொடர்பில் நான்கு பெண்கள், இரு ஆண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைகள் முன்வைப்பு!

அவதூறு தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. குற்றவியல் விசாரணைத் திணைக்களம் மற்றும் கணினி குற்றப் விசாரணை பிரிவுகளில் முறைப்பாடுகளை செய்வதை தடுக்குமாறு கூறுகிறது. அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து இணையம் உள்ளிட்ட பல்வேறு ஊடக தளங்களில் வெளியிடப்படும் அவதூறு பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் அமைக்கப்பட்டிருக்கும் குற்றப்புலனாய்வு பிரிவுகளில் செய்யப்படும் அதிகளவான முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே […]

ஊழியர் பற்றாக்குறை; தபால் சேவைகள் பாதிக்கப்படலாம்

தபால் துறையில் நிலவும் பாரிய ஊழியர் பற்றாக்குறை தபால் சேவைகளை கடுமையாகப் பாதித்து வருவதாகவும், இதன் காரணமாக மக்களுக்கு தரமான சேவையை வழங்க முடியவில்லை என்றும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தபால் துறையில் 7000 த்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்களில் தபால் விநியோகத்தர்களுக்காக சுமார ஆயிரத்து ஐநூறு (1500) வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதனால் சில பகுதிகளுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே கடிதங்கள் வழங்கப்படுகின்றன என்றும் தொழிற்சங்கத்தின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார […]

பிரித்தானியா தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற உதவ வேண்டும்

சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திப் பங்காளிகள் ஆகிய அணிகளுக்குப் பிரித்தானியா தலைமைப் பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற உதவிட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பற்றிக்குடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறிப்பாக, இன்றைய, அரசு முன்னேடுக்கும், 50 இலட்சம் ரூபா […]

சிங்கள மற்றும் தமிழ் இனவாதிகளால் நாட்டை ஒன்றிணைப்பதில் சிக்கல் காணப்படுகின்றது – ஜனாதிபதி

நாட்டை ஒன்றிணைப்பதற்கு இரு குழுக்கள் தடையாகவுள்ளன.ஒன்று வடக்கில் இருக்கும் தமிழ் இனவாதிகள் மற்றையது தென் பகுதியிலுள்ள சிங்கள இனவாதிகள். இவர்கள் வடக்கில் இருக்கும் விகாரைக்கு சென்று போயா தினத்தில் விகாரையை அகற்றுமாறு கூச்சலிடுகின்றனர்.அதற்கு சமமாக தென் பகுதி இனவாதிகள் அதே விகாரைக்கு போயா தினத்தில் செல்கின்றனர். குழப்பதை ஏற்படுத்துவதற்கு வேறு ஒன்றுக்குமில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ‘டித்வா’ சூறாவளியினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்கள் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகமுள்ள இடங்களாக இனங்காணப்பட்ட […]

வடமராட்சி கிழக்குப் பகுதியில் மோட்டார் வகைக்குண்டு மீட்பு!

யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் வகைக்குண்டு இன்றையதினம் (7.2.2026) இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த பகுதியில் வசிக்கும் நபர்கள் ஆடு மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற போது வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக்குண்டு ஒன்றினை அவதானித்து உள்ளனர். உடனடியாக அந்த நபர்கள் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்த போது சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். பொலிஸார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட […]

சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் குறித்த செய்தி!

இலங்கை மின்சார சபை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சிறிய நீர் மின் நிலையங்களிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவதற்கான கொள்முதல் விலையை குறைத்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படாத நிலையில், இது மின் நிலையங்களை உருவாக்க வங்கிகளில் கடன் வாங்கிய சுமார் 150,000 பேருக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. சூரிய மின்சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை சமீபத்தில் ரூ. 37 லிருந்து ரூ. […]