குஜராத் மாநில ஆளுநர் – விஜித ஹேரத் சந்திப்பு

இந்தியாவின் குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்வ்ரத் மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு நேற்று (05) இடம்பெற்றதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் கலாநிதி தேவ்வ்ரத், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர […]

தமிழ் கட்சிகள் ஒருமித்து கிவுல் ஓயா திட்டத்தை முற்றாக எதிர்க்கும் வகையில் செயற்படத் தீர்மானம்!

தமிழ் கட்சிகள் ஒருமித்து, ஐக்கியமாக செயல்பட்டால் இழந்த உரிமைகளை மீட்டு பெற முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். நேற்று(05-02-2026) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்துடனும், சிங்களக் குடியேற்றங்கள் கொண்டு வரும் நோக்கத்துடனும் ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் கிபுல்ஓயா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வடக்கு மற்றும் […]

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை!

மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றைப் பேணி வந்து, டுபாய், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக நபர்களைச் சேர்த்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளினால் கடந்த 03 ஆம் திகதி இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, முல்லேரியாவ பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீடொன்றில் […]

கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் சிக்கிய பெண் சட்டத்தரணியிடம் 25 மில்லியன் மதிப்புள்ள கார்?

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை சம்பவம், இந்த நாட்டின் குற்றவியல் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கொலைக்கு நேரடியாக உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி தொடர்பாக குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விரிவான விசாரணைகளில் பல அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம தலைமையில் நேற்று இவ்வழக்கு விசாரணை நடைபெற்றபோது, ​​சந்தேக நபரிடம் இருந்த சொத்து மற்றும் […]

ரஷ்யாவில் படித்த மாணவனுக்கு வைத்திய பீட அனுமதி மறுப்பு?

ரஷ்யாவில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கையில் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகுவதற்கான தகுதியைப் பெற்றிருந்த இலங்கை மாணவன் ஒருவரை, உள்நாட்டு மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்வதை மறுத்ததன் ஊடாக அவரது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், குறித்த மாணவனை உடனடியாக இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றின் மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டுள்ளது. பொரளையைச் சேர்ந்த இசுல தம்சித் ஜயரத்ன என்ற மாணவரே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். […]

குறைந்த விலையில் மதுபானம்; அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது!

குறைந்த விலையில் மதுபானம் வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை தற்போதைய வரி கட்டமைப்பின் கீழ் நிறைவேற்ற முடியாது என மதுபான உரிமம் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்டுள்ள மதுபான வரி, 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT), 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரி உள்ளிட்ட வரிகள் காரணமாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது நடைமுறை சாத்தியமற்றது என தெரிவித்துள்ளது. குறிப்பாக குறைந்த விலையில் மதுபான போத்தல்களை விற்பனை செய்ய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது. 2024–2025 ஆண்டுகளில் […]

இருபதுக்கு – 20; இந்தியா – பாக். போட்டி புறக்கணிப்பால் ஷம்மி சில்வா கடும் அதிருப்தி!

இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணத் தொடரில் அதிக கவனத்தை ஈர்த்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்கப் பாகிஸ்தான் எடுத்த முடிவு குறித்து, இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், பாகிஸ்தான் சவாலான நேரங்களை எதிர்கொண்டபோது, ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இலங்கை கிரிக்கெட் வழங்கிய ஆதரவை அவர்கள் மறந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் அனைவரினதும் […]

போதைப்பொருளுடன் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கைது!

இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும் இருவர் நீர்கொழும்பு நகரிலுள்ள சொகுசு விற்பனை நிலையத்திற்கு அருகில் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அந்த இரு நபர்களும் […]

“முழு நாடுமே ஒன்றாக”; போதைப்பொருள்களுடன் ஒரே நாளில் 802 பேர் கைது

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளைத் தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 802 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 16 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 794 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், 6 பேர் மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது […]

வீதி விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு  

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (05) மாலை பனாகமுவ பகுதியில், பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்த இருவர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மோட்டார் […]