இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் கலந்துரையாடல்

டுபாயில் நடைபெற்று வரும் 2026 உலக அரசாங்க உச்சி மாநாட்டின் (World Government Summit) ஒரு பகுதியாக, இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது குறித்த இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி அஹமட் பெல்ஹூல் அல் ஃபலாசி (H.E. Dr. Ahmad Belhoul Al Falasi) உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஐக்கிய […]
புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக சுதுமலை அம்மன் கோவில் சூழல் பிரகடனம்

யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்டில் சுதுமலை அம்மன் ஆலய வளாகமும் அதனைச் சூழ உள்ள பிரதேசமும் புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மானிப்பாய் பரிஸ் அரிமா கழகத்தினர் அனுசரணை வழங்கியிருந்தார்கள். இதில் கிராம சேவையாளர் சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலை மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான கனடா கம்ப்யூட்டர்ஸ் இணையதளத்தில் சைபர் தாக்குதல்

பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான ‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’ (Canada Computers & Electronics), தனது இணையதளத்தில் நடந்த சைபர் தாக்குதலில் சுமார் 1,300 வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தகவல் திருட்டு அனைத்து வாடிக்கையாளர்களையும் பாதிக்கவில்லை எனவும் குறிப்பிட்ட சிலரை மட்டுமே பாதித்துள்ளது எனவும் தெரியவருகின்றது. உறுப்பினராகப் பதிவு செய்து (Member Account) பொருட்கள் வாங்கியவர்களுக்கும், நேரடியாகக் கடைகளுக்குச் சென்று (In-store) பொருட்கள் வாங்கியவர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என நிறுவனம் […]
2025 ஆம் ஆண்டில் மத்தல விமான நிலையம் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை அளவிலான விமானப் பயணிகளைக் கையாண்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பதிவான அதிகூடிய பயணிகளின் எண்ணிக்கை இதுவாகும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 140,614 பயணிகள் கையாளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் […]
மஹிந்தானந்த, நளின் வழக்கு – உத்தரவு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆரம்ப ஆட்சேபனைகள் மீதான உத்தரவை அறிவிப்பது மார்ச் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக 14,000 கரம்போர்ட் பலகைகளையும் , 1,000 தாம் பலகைகளையும் இறக்குமதி செய்து, அப்போதைய ஜனாதிபதி […]
கியூபெக் மாகாணத்தில் ‘பில் 19’ சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சுகாதார அமைச்சர்

‘பில் 19’ எனப்படும் புதிய சட்ட மசோதாவைச் கியூபெக் சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) தாக்கல் செய்தார். கியூபெக் மாகாணத்தில் கடந்த ஓராண்டாக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே நிலவி வந்த கடும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த புதிய சட்ட மசோதா அமைந்துள்ளது. முன்னதாகக் கொண்டு வரப்பட்ட ‘பில் 2’ சட்டத்தின் மூலம் மருத்துவர்களுக்குக் கட்டாய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, அவற்றை நிறைவேற்றத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த […]
கனடாவின் தனித்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார் டிரம்ப்!

“அண்டை நாடான அமெரிக்கா தற்போது ஒரு பகைமை நாடாக மாறிவிட்டது” என, முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் எச்சரித்துள்ளார். ஓட்டவாவில் நடைபெற்ற தனது ஆட்சியின் 20-வது ஆண்டு விழாவில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக ஒப்பந்தங்களை மீறுவதோடு, கனடாவின் தனித்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறார் என ஹார்ப்பர் குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் இந்த முறையற்ற தாக்குதலுக்குக் கனடா ஒரு “வலிமையான பதிலடி” கொடுக்க வேண்டும் என்றும், அமெரிக்கப் பொருட்கள் மீது பதிலுக்கு […]
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் பகிரங்க மன்னிப்பு கோரினார்!

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களிடம் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பீட்டர் மண்டெல்சனை அமெரிக்காவிற்கான தூதராக நியமித்த தனது முடிவிற்காக வருத்தம் தெரிவித்துள்ள அவர், மண்டெல்சனின் “பொய்களை” தான் நம்பி ஏமாந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புத் தணிக்கையின் போது, எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகளை மறைத்து, அவரை தமக்கு ஓரளவே தெரியும் என்று மண்டெல்சன் பொய் கூறி திசைதிருப்பியதாக பிரதமர் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நியமனம் காரணமாகத் தனது சொந்தக் கட்சி (தொழிற்கட்சி) […]
வெற்றிலைக்கேணி கடற்படை தளத்திற்கு புதிய அதிகாரி நியமனம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி கூட்டுப்படை தளத்தின் தளபதியாக பணியாற்றிய பொறுப்பதிகாரி றணசிங்க இடமாற்றமாகி சென்று விட்டார். இந்நிலையில், வெற்றிலைக்கேணி கடற்படை தளத்திற்கு புதிய அதிகாரியாக கமாண்டர் WCIS ஜெயசூர்யா(Cdr WCIS Jayasooriya) நியமிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்த நிலையில், வெற்றிலைக்கேணி கடற்படை தளத்திற்கு இவ்வாறு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தாறுமூலையில் வாள்வெட்டில் பலியானவரின் உடலுடன் கவன ஈர்ப்புப் போராட்டம்!

இரவு வேளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் பகிரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை என்கின்ற இடத்திலேயே கடந்த 16.01.2026 அன்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இந்த தாக்குதல் சம்பவம் 16.01.2026 அன்று இரவு, மரணித்த இந்த நபர் தனது சொந்த வயலில் இருந்த […]