மெல்போர்ன் நகரில் மகாத்மா காந்தியின் சிலை திருட்டு

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதற்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மெல்போர்ன் நகரின் ரோவில்லே பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய இந்திய சமூக மையத்தில் அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலையை, கடந்த ஜன.12 அன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்து திருடிச் சென்றுள்ளதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சுமார் 420 கிலோ எடையுள்ள இந்தச் சிலையின் கால்பகுதி வரை மர்ம நபர்கள் […]
முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மூத்த மகள் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல,இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னரும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சமித்ரி ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மத்திய அரசின் அறிவிப்பு; ஏழை மக்களுக்கு எதிரான வஞ்சனை
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், வரும் தேர்தலிலும் மக்கள் முதல்வர் சுட்டிக்காட்டும் வேட்பாளர்களுக்கே ஆதரவளிப்பார்கள் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்நிலை மற்றும் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வசித்து வந்த 876 குடும்பங்களுக்கு, சுமார் ரூ.129 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 400 சதுர அடி பரப்பளவில், தலா ரூ.18 லட்சம் மதிப்பிலான இந்த வீடுகளைச் சென்னையில் இருந்து […]
‘புலி’ படத்திற்கு பெற்ற சம்பளத்தை நடிகர் விஜய் வருமானமாகக் காட்டவில்லை!

‘புலி’ படத்திற்கு விஜய் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை, வருமானமாக காட்டவில்லை என வருமான வரித்துறை அபராத நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று வௌ்ளிக்கிழமை (06) தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பில், விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என நீதிமன்றம் கூறியிருக்கிறது. வருமானத்தை கணக்கில் காட்டாததால், ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து கடந்த 2022ம் ஆண்டு விஜய் நீதிமன்றத்தை […]
புற்றுநோய் சிகிச்சைத் துறையில் உலகளாவிய ரீதியில் கனடா முன்னணியில் இருக்கின்றது – ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாம் ஒன்றிணைந்து நிற்கிறோம்; ஒன்டாரியோவில் மற்றும் உலகம் முழுவதும் வாழும் புற்றுநோய் மீட்பாளர்களின் உறுதியையும், அவர்களின் குடும்பங்களின் தைரியத்தையும் மரியாதையுடன் கௌரவிக்கிறோம் என ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தெரிவித்திருக்கின்றார். எங்கள் அரசு, உயிரைக் காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கான அணுகலை வேகப்படுத்துவது உட்பட, சாதனை அளவிலான முதலீடுகள் மூலம் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆய்வுகளை ஆதரித்து வருகிறது. டொராண்டோ — ஒன்டாரியோ அரசு, Funding Accelerated for […]
மீண்டும் சேவைக்கு வரவுள்ள நோர்த்லாண்டர்

முந்தைய லிபரல் அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டதிலிருந்து 14 ஆண்டுகளுக்குப் பின் மீளத் தொடங்கப்படுவதுடன், பயணிகள் ரயில் சேவையை கட்டமைத்து விரிவுபடுத்துவதில் ஒன்டாரியோ நாடு முழுவதும் முன்னணியில் உள்ளது என ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தகவல் பகிர்ந்துள்ளார். உண்மையில், GO ரயில் சேவையின் விரிவாக்கம், புதிய மெட்ரோ (Subway) மற்றும் லைட் ரெயில் டிரான்சிட் (LRT) திட்டங்கள், மேலும் நோர்த்லாண்டர் ஆகியவற்றை உட்பட, வட அமெரிக்காவில் மிகப் பெரிய போக்குவரத்து உட்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, […]
மீண்டும் விளக்கமறியலில் அனுஷ பெல்பிட்ட

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேக நபர் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான அனுஷ பெல்பிட்ட, தனக்குச் சொந்தமான 4 […]
ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது. இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர், குறித்த சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, இந்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகச் சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலம்!

இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனிநபர் சட்டமூலம் ஒன்றை நேற்று (05) சாணக்கியனால் பாராளுமன்றத்தில் என்னால் முன்வைக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றிய சாணக்கியன், பயங்கரவாத தடைச் சட்டம் கடந்த காலங்களில் குறிப்பாக தமிழ் மக்கள்மீது தவறான கைது, நீண்டகால விசாரணையில்லா சிறைவாசம், அடிப்படை உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. “நாடு உண்மையான […]
இருபதுக்கு 20; உலகக் கிண்ணப் பாதுகாப்பு

இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் போட்டிகளைக் காண வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 600 போக்குவரத்துப் பிரிவு உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, பார்வையாளர்கள் விளையாட்டரங்கிற்குள் பெரிய அளவிலான பயணப் பொதிகள், கண்ணாடிப் போத்தல்கள், ட்ரோன் (Drone) கருவிகள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை எடுத்து வருவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகச் சிவில் உடையில் […]