இலங்கையின் தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க நடவடிக்கை!
இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25 தொழில்நுட்பக் கல்லூரிகளையும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்ற வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டன. இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், “வெறுமனே தொழில்நுட்ப அறிவை வழங்குவதோடு […]
தற்போதைய அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகவுள்ளது – எம்.ஏ.சுமந்திரன்

தமிழர்களின் மொழியுரிமையை அரசு அடியோடு மறுக்கின்றது. வெலிஓயா ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் இதற்கு சரியான சான்று என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சுமத்தியுள்ளார். ‘வெலிஓயா’ எனப்படும் பிரதேச செயலாளர் பிரிவின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 3 ஆம் திகதி வழமைக்கு மாறாக தனிச் சிங்களத்தில் இடம்பெற்றமை தொடர்பில் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மொழி […]
அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு

நெல் கொள்வனவு செயல்முறைகளை தாம் தொடங்கியுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்துள்ளார். அத்தோடு,அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(6.2.2026) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பல மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளது.அறுவடை கிடைக்கப்பெறும் அளவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்புகளை முறையாக அரிசியாக […]
அரச ஊழியர்களுக்கு 2027ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை வேறெந்தக் கொடுப்பனவும் அதிகரிக்கப்படாது

அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 2027ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். கண்டியில் ஜனாதிபதி தலைமையில் இன்று (06.02.2026) காலை இடம்பெற்ற நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையைப் பொறுத்தவரை அடிப்படைச் சம்பள உயர்வே முக்கியம் என்று நாங்கள் கருதினோம். அந்த அடிப்படை சம்பள உயர்விற்காக மாத்திரம் […]
வவுனியா வாரிக்குட்டியூர் பகுதி விபத்தில் மாணவன் பலி!
வவுனியா- வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5.2.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் நேற்றைய தினம் இரு மாணவர்கள் பயணித்த போது மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் மரணமடைந்துள்ளார். இந்த விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார். மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை அதிபர் மாணவனின் தந்தை மீது தாக்குதல்

தலவாக்கலை பிரதேசத்தில் இயங்கும் பாடசாலை ஒன்றில் தரம் 09 கல்வி கற்கும். வேறு பாடசாலையில் சேர்ப்பதற்காக விடுகைப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள பாடசாலைக்கு சென்ற மாணவனின் தந்தைக்கும். பாடசாலை அதிபர் மற்றும் காவலாளிக்கும். இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து மாணவனின் தந்தை தாக்கப்பட்டு, கழுத்தில் அடிபட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் மாணவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார். அத்தோடு பாடசாலை நிர்வாகமும். குறித்த தந்தை தவறான முறையில் நடந்து கொண்டதாக முறைப்பாடு செய்துள்ளது. சம்பவம் தொடர்பான […]
இந்திய மக்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளி சபை ஒத்தி வைப்பு!

மக்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், பிப்ரவரி 9 காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் […]
இந்தியாவில் அறிமுகமாகும் ஹூண்டாய் பேயன்!
ஹூண்டாய் நிறுவனம், பேயன் என் லைன் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த காரின் சோதனை ஓட்டம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள பேயன் மாடல் கார் தற்போது சில அப்டேட்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஏற்கெனவே சந்தையில் உள்ள ஹூண்டாய் ஐ-20 மாடலிவிட சற்று மாறுபட்ட ஸ்போர்ட்டியான தோற்றத்தில், சிறிது பெரிதாக பேயான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதி ஃப்ராங்ஸ் மாடல் […]
பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு தனித்தனி உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 4 – 5 தேதிகளில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த இரண்டு தனித்தனி நடவடிக்கையில் ஃபித்னா-அல்-கவாரிஜ் அமைப்பைச் சேர்ந்த 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஐஎஸ்பிஆர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஃபித்னா-அல்-கவாரிஜ் என்பது தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபன் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளைக் குறிக்க அரசால் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். மாகாணத்தின் ஒரக்ஸாய் மற்றும் […]
6 சமத்துவபுரங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 42 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 6 சமத்துவபுரங்களை சென்னை, தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நிறைவடைந்த புதிய திட்டங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப். 6) தொடக்கி வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 42 கோடியே 40 லட்சம் செலவில் […]