சியோஸ் தீவுக்கு அருகே கப்பலுடன் மோதி அகதிகள் படகு விபத்து : 15 பேர் பலி!

கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவுக்கு அருகே ஏஜியன் கடலில் இடம்பெற்ற விபத்தில், குறைந்தது 15 அகதிகள் உயிரிழந்துள்ளனர். அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிரீஸ் கடலோர பாதுகாப்புப் படையின் கப்பலுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சியோஸ் நீரிணையில் உள்ள வ்ரோந்தாதோஸ் (Vrontados) கடற்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, கடலோர பாதுகாப்புப் படையின் எச்சரிக்கை ஒளி மற்றும் ஒலி சைகைகளை […]

நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இந்திய ஜனாதிபதி இரங்கல்

மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா மலைப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் உயிரிழந்தாக செய்தி வெளியானதை அறிந்து வேதனையடைந்தேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் தஷ்காய் எனும் இடத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று (5) மாலை இடம்பெற்ற […]

ரஷ்ய இராணுவ உயர் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு

ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில், இராணுவத்தின் உயர் பதவியிலுள்ள அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷ்ய இராணுவ தளபதியின் பிரதான புலனாய்வுத்துறையின் (GRU) உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்செயேவ் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் மொஸ்கோ நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள வோலோகோலாம்ஸ்க் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டடமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக வைத்திசாலைக் […]

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் ஒதுக்கிய பெருந்தொகை

‘ ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கு ரூ.10,000 கொடுப்பனவை வழங்க ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களால் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் கல்வியைப் பேணுவதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ரூபா.25,000 வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் ரூபா.15,000 பொது திறைசேரியிலிருந்தும் ரூபா.10,000 […]

அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் வீட்டை புனரமைக்கிறது; ஹெக்டர் அப்புஹாமி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை புனரமைக்கும் அரசாங்கம் டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் வீடு கட்டி கொடுக்கவில்லை. இது வெட்கக் கேடான செயற்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (06.02.2026) உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர், தேசிய சுதந்திர தினத்தில் கடனுக்கு வாங்கிய யுத்த உபகரணங்களை காட்சிப்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தனர். அது அபிமானத்திற்குரிய செயற்பாடல்ல என்றனர். இராணுவ வீரர்கள் யுத்த […]

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் மோதல்

களுத்துறை – பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (5) இடம்பெற்றுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்காக இடம்பெற்ற விசேட வகுப்பில் கலந்துகொண்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையில் இவ்வாறு தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வடக்கு தவிசாளர் வெளியிட்ட கருத்தை பிரதி அமைச்சர் மறுப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரிபுபடுத்தி வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு, நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆளுநருக்கு தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்கவால் கூட்டத்தில் வைத்து பழிவாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக நேற்று (05.02.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து […]

இரணைதீவின் வடக்கில் கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்தவர்கள் கைது!

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சியின் இரணைதீவின் வடக்கு கடல் பகுதியில் வியாழக்கிழமை (5) இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த 07 நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். அதன்படி, கிளிநொச்சி, இரணைதீவுக்கு அப்பால் வடக்கு கடல் பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புவனக நிறுவனம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் பரிசோதிக்கப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக இரவு நேர […]

மஹையாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

கண்டி நகரத்திற்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் (A009) மஹையாவ சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று (6) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 699.6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள், இன்றிலிருந்து 273 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைத் திட்டத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி, அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அங்கு கூடியிருந்த மக்களுடனும் சுமூகமாக உரையாடினார். போக்குவரத்து, […]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வழக்கில் கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். நீதவான் நீதிமன்றில் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணமால் ஆக்கப்பட்டுள்ள நிலைமையில் அவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதவான் […]