தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய மனு: வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் பெப்ரவரி 16-ந் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி 2013-ல் வைகோ தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (06) அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வைகோ நேரில் ஆஜராகி, இந்தத் தடை ஏன் சட்ட விரோதமானது என்பதற்கான […]

கிழக்கு கல்வி அமைச்சின் துறை சார்ந்த அபிவிருத்தித் திட்ட மதிப்பாய்வு

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் துறை சார்ந்த மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவின் தலைமையில் நேற்று(05.02.2026) திருகோணமலை மாகாண கல்வி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அமைச்சகமும் அமைச்சகத்துடன் இணைந்த நிறுவனங்களான மாகாண விளையாட்டுத் திணைக்களம், பண்பாட்டுத் திணைக்களம், மாகாண முன்பள்ளி பிரிவு ஆகியவற்றின் முன்னேற்ற நிலைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் […]

எம்.பி.இளங்குமரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு

யாழ். மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையான வழக்கு ஒன்று தொடர்பில், நீதிமன்றுக்கு வெளியில் வெளியிட்ட பகிரங்கக் கருத்து மூலம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை ஆளும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இழைத்தார் என்று தெரிவித்து, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், எதிர் மனுதாரரான இளங்குமரன் எம்.பி. இந்தியா செல்கின்றமையால் வழக்கைப் […]

கண்கவர் காட்சியுடன் டி20 உலகக் கோப்பை மும்பையில் தொடங்குகின்றது!

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டி நாளை சனிக்கிழமை (07) மாலை மும்பையின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் உற்சாகமான தொடக்க விழாவுடன் தொடங்கும், இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த விழா, நேரடி இசை மற்றும் பெரிய அளவிலான நடன அமைப்பை இணைத்து, அரங்கத்தை ஒரு தனித்துவமான, அதிவேக மேடையாக மாற்றும், அதைத் தொடர்ந்து ரிஷப் சர்மா மற்றும் சிவமணி ஆகியோரின் சக்திவாய்ந்த இசை கலவையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது,

இ.போ.சபைக்கு 19 பெண் நடத்துனர்கள் நியமனம்

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (SLTB) 19 பெண் நடத்துனர்கள் நிரந்தரப் பணியில் நியமிக்கப்பட்டனர். இது இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். மாகும்புர மல்டிமாடல் போக்குவரத்து மையத்தில் வௌ்ளிக்கிழமை (06) அன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்மாலி குணசிங்க மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் உரையாற்றிய பிரதி […]

இலங்கையில் அவசரகால சட்டம் நீடிப்பு: சஜித் அணி கடும் எதிர்ப்பு

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டார். அவசரகாலச் சட்டத்தை இந்த அரசு ஒடுக்குமுறைக்காகப் பயன்படுத்துகின்றது எனவும், எனவே, அந்தச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். ரஞ்சித் மத்தும பண்டாரவின் இந்தக் […]

சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பரா ரூமி இலங்கை பிரதமரை சந்திப்பு

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமிவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று(06.02.2026) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பலதரப்பு ஈடுபாட்டை அடிப்படையாகக் கொண்ட முற்போக்கான சர்வதேச ஒத்துழைப்புக்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கள் பரிமாற்றப்பட்டதாக பரா ரூமி, அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வழக்கமான பரிமாற்றம் மிகவும் மதிப்புமிக்கது, அதே சமயம், நம்பிக்கையை […]

புங்குடுதீவில் வாள்களுடன் நடமாடிய இருவர் கைது!

வேலணை – புங்குடுதீவு, வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(6.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவரின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பல தரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. […]

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்விக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்லவை பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று(06.02.2026) பிற்பகல் கொழும்பு பிரதம நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மூத்த […]

அமெரிக்க பிரஜைகளை ஈரானிலிருந்து வெளியேறுமாறு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ ரீதியான மற்றும் ரகசிய திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்க மக்கள் வெளியேற வேண்டும் என பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவு கவனம் பெற்றிருக்கிறது. ஈரான் கடல் பகுதியில், அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மற்றும் அத்துடன் சில தாக்குதல் […]