கடன்களை செலுத்த சலுகைக் காலம் அவசியம்

நாட்டில் சுமார் 11 இலட்சம் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் காணப்படுகின்றனர். இவர்கள் 45 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருகின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% பங்களிப்பை இவர்கள் நல்குகின்றனர். கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட நான்கு பெரும் துயர் சம்பங்களினால் அவர்களின் தொழில் முயற்சிகள் மற்றும் வியாபாரங்கள் வீழ்ச்சி கண்டன. இதற்கு அவர்கள் காரணமல்லர். அவர்களின் தவறால் இது நடக்கவில்லை. 2022 புள்ளிவிவரங்களின்படி, 263,000 தொழில்முயற்சிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சுமார் 150,000 தொழில் […]

மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை!

சர்வதேச கடற்பரப்பில் இனம் தெரியாத குழுவினரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களின் நலன் விசாரிப்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று புதன்கிழமை (04) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு “சதுன் புதா 04” (IMUL-A 0852 CHW) எனும் பலநாள் மீன்பிடி படகில் இருந்த நான்கு மீனவர்களே இலக்காகியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தலையீட்டில் நேற்று காலை கரைக்கு அழைத்து […]

தெவ்னி மோரி புனித சின்னங்களின் வழிபாடு ஆரம்பம்

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை வழிபடுவதற்கு இன்று (5) முதல் பொதுமக்கள் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த புனித தாதுக்கள் நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்டு ஹுணுபிட்டி கங்காராம விகாரையில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டு, இந்த வழிபாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தெவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை இன்று (5) காலை […]

பல பகுதிகளில் இன்று மழை!

டக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ-க்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீ-க்கும் அதிக ஓரளவு பலத்த மழை […]

நாடு முழுவதும் 3000 அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள்!

நாடு முழுவதும் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாடசாலைகளில் 3,065 பாடசாலைகளில் 10-க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அப்பாடசாலைகளுள் ஒரு தேசிய பாடசாலையும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1,645 அரச பாடசாலைகளில் […]

தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் அதிகரிக்கின்றன – ரவிகரன் எம்.பி

ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தவகையில் ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பெறுவதனாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களும் வலுப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திரநாளினை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் நேற்று 04.02.2026 புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் […]

தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” கருத்தரங்கு

தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” அரசியல் கருத்தரங்கு நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அண்மையில் அமைந்துள்ள வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது. வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் விடுதலைப் போரில் உயிர்நீத்த ஆத்மாக்களுக்கான அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. சிவாஜிலிங்கத்தின் தலைமை உரையினை தொடர்ந்து, சிறீலங்காவின் சுதந்திர தினமும் தமிழ்மக்களும் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரையாற்றினார். தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சரவணமுத்து நவரத்தினத்தின் (கரிகாலன்) உரையை தொடர்ந்து […]

உமையாள்புரம் பகுதியில் கைக்குண்டு மீட்பு

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் நேற்று பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் சிறுவர்கள் தமது பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக நீர் ஓடும் வாய்க்கால் அருகாமையில் சென்ற போது வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றினை அவதானித்துள்ளனர். உடனடியாக அச்சிறுவர்கள் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கைக்குண்டினை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்கு கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவுக்கு தகவலை அனுப்பியுள்ளனர். நீதிமன்ற […]

பாடசாலை மாணவி கோடரி தாக்குதலில் பலி

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தம்பால பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், வீட்டிற்குள் கோடரியால் தாக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு உயிரிழந்ததாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுத எதிர்பார்த்திருந்த தம்பல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாத்திமா நஷிமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 17 ஆம் திகதி, அவர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அயல் வீட்டில் வசிக்கும் 26 வயது இளைஞர் ஒருவர் அவரை […]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பாட்டு அரசியலிலிருந்து ஒதுங்கினார்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதனை அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். “தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கையில் பங்கேற்கவும் இல்லை. எவரேனும் நாட்டுக்கு நன்மை செய்தால் அது தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றேன்” என்றும் ஊடகங்களிடம் கூறியுள்ளார். மைத்திரிபால சிறிசேன சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்தவர். இவர் 2014 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் […]