காலியான நிலப்பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

தலங்கம பகுதியில் அடையாளம் காணப்பட்ட இளைஞனின் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 2025.02.04 அன்று தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். தலங்கம டிப்போவில் இருந்து 50 மீட்டர் தூரத்தில், பத்தரமுல்லை நோக்கிச் செல்லும் பிரதான சாலையின் இடது புறத்தில் அமைந்துள்ள காலியான நிலப்பகுதியில் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்த நபர் பண்டாரவளை லியன்கஹவெல வத்த பிரதேசத்தைச் சேர்ந்த சத்திய வேலு […]

பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு உத்தரவு

ஐஸ், போதைப்பொருளை பாராளுமன்ற சேவையாளர்கள் பாவிப்பதாகவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை முன்னெடுக்க சபாநாயகர் பணிப்பு என்று வெளியான செய்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவுறுத்தினார் பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை (05) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே இந்த அறிவுறுத்தலை விடுத்தார். 2026.01. 11 ஆம் திகதியன்று வெளியான சிங்கள பத்திரிகை ஒன்று […]

இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது. விலகல் முறையிலான இத்தொடரின் நடப்புச் சம்பியன்களான நியூகாசில் யுனைட்டெட்டை வென்றே இறுதிப் போட்டிக்கு சிற்றி தகுதி பெற்றிருந்தது. நியூகாசிலின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த சிற்றி, தமது மைதானத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று 5-1 என்ற மொத்த கோல் […]

‘இங்கிலாந்து தலைமைப் பயிற்சியாளராவது எனது கனவு’

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராவது தனது கனவு என அவ்வணியின் முன்னாள் வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில், இங்கிலாந்து லயன்ஸ் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான முகாமில் பயிற்சியாளரொருவராக மொயின் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் மூன்றாம் மட்ட தகுதிகாணுக்காக மொயின் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு தான் சிறப்பான பொருத்தமாக இருக்குமென மொயின் நம்புகின்றார்.

அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி?

சுற்றாடல் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார். முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் காரணமாக குறித்த திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அம்புலுவாவ பகுதியில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன, குறித்த திட்டத்தின் மூலம் எவ்வித […]

கதிரேசன் வீதிப் பகுதியில் கொலை!

கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரேசன் வீதிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் ஆட்டுப்பட்டி தெரு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறினால் நேற்று (04) இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் […]

இந்தியாவினால் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இந்திய உயர்ஸ்தானிகராலயம்

சம்பவம் தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஜனவரி 29 ஆம் திகதியன்று இந்தியக் கரையோரக் காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. 2026 ஜனவரி 29 அன்று கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான ஊடகச் செய்திகளைத் மேற்கோள் காட்டி, அறிக்கையொன்றை வெளியிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தகவல்களைத் திரட்டிய பின்னர், இந்தியக் கடற்படையினரோ அல்லது இந்தியக் கரையோரக் காவல்படையினரோ அத்தகைய தாக்குதல் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதை […]

புதிய கணக்காய்வாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (5) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். இலங்கையின் 42-வது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள அவர், இந்த பதவிக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சமுதிகா ஜயரத்ன, வங்கி, நிதி, காப்புறுதி, வரி, திறைசேரி சேவைகள் மற்றும் கடன் முகாமைத்துவம் ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்தவராவார்.

வீடற்றவர்களுக்கு இரண்டாவது வீட்டுத் திட்டம் மொன்ட்ரியலில் நிறைவு

மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவுபெற்றுள்ளது. இதனை பிரதமர் மார்க் கார்னி மற்றும் மொன்ட்ரியல் மேயர் சோரயா மார்டினெஸ் பெர்ராடா ஆகியோர் திறந்து வைத்தனர். வீடற்ற நிலையில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கும் நோக்கில், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மொன்ட்ரியல் நகரின் அஹுன்ட்சிக்-கார்டியர்வில் (Ahuntsic-Cartierville) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம், வெறும் தங்குமிடம் மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு பாலமாகச் செயல்படும். இந்த வளாகத்தில், மொத்தம் 27 அறைகள் உள்ளன. இதில் 24 […]

சட்டத்தை மீறிய ‘எஸ்டி லாடர்’ நிறுவனத்துக்கு அபராதம்

உலகின் முன்னணி அழகு சாதன நிறுவனமான ‘எஸ்டி லாடர்’ (Estée Lauder), நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காகச் சுமார் 7.5 லட்சம் டாலர் (750,000) அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது கண் மை (Eyeliner) தயாரிப்புகளில் மத்திய அரசுக்குத் தெரிவிக்காமல் ஆபத்தான ரசாயனங்களைப் பயன்படுத்தியதை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. நாட்டின் சுற்றுச்சூழல் அதிகாரிகள் நடத்திய சோதனையில், எஸ்டி லாடர் நிறுவனத்தின் சில கண் மை தயாரிப்புகளில் ‘பெர்ஃப்ளூரோநோனைல் டைமெதிகோன்’ (Perfluorononyl Dimethicone) […]