கனடாவில் தற்காலிக விசாவுடன் தங்கியிருக்கும் நபர்கள் குறித்த அரசின் தீர்மானம்

தற்காலிக விசாவுடன் கனடாவில் தங்கியிருக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறனை உருவாக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடிவரவு அமைச்சர் லீனா டியாப் (Lena Diab) தெரிவித்துள்ளார். கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) மற்றும் கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களை கண்காணிக்கக்கூடியதாக இருந்தாலும், தற்காலிக விசாவுடன் உள்ளவர்கள் எத்தனை பேர் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர் என்பதைக் கணக்கிடுவதற்கான […]

மொராக்கோவில் கனமழை; 40க்கு மேற்பட்டோர் பலி

மொராக்கோவில் கடந்த சில நாட்களாக புயல் காற்றுடன் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முதலான அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மொராக்கோவின் பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, நான்கு மாகாணங்களிலிருந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று புதன்கிழமை (4) அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. லூக்கோஸ் நதி (Loukkos River) நிரம்பி வழிந்தோடத் தொடங்கியதைத் தொடர்ந்து, Ksar el-Kebir […]

சமூக ஊடகங்களில் சிறுவர்களை குறிவைத்த நபர் மீது 596 குற்றச்சாட்டுகள்

சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் தளங்கள் வாயிலாகச் சிறுவர்களைக் குறிவைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 27 வயதுடைய நபர் மீது 596 குற்றச்சாட்டுகளை அவுஸ்திரேலிய பொலிஸ் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அவுஸ்திரேலியா உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த 459 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் விளக்கமறியலில் உள்ள குறித்த நபரின் மின்னணு சாதனங்களிலிருந்து 23,000-க்கும் மேற்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதன்படி, இதுவரை 360 […]

கனிம பாதுகாப்பு கூட்டமைப்பை இந்தியா ஆதரிக்கும்

அமெரிக்காவின் கனிம பாதுகாப்பு கூட்டமைப்பை இந்தியா ஆதரிக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் நேற்று (4) அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் ஏற்பாட்டில் கனிமங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியதைத் தொடர்ந்து, ஜெய்சங்கர் அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அதில் அவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவின் கனிம பாதுகாப்பு கூட்டமைப்பை இந்தியா ஆதரிக்கும். எங்களது இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக விரிவாக மதிப்பாய்வு செய்தோம். வெளியுறவுத்துறை அமைச்சர்கள் […]

இலங்கைக்கு சொந்தமான இரு படகுகள் மாலைதீவில் கைப்பற்றல்

மாலைதீவின் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக இரு இலங்கை மீன்பிடி படகுகளை மாலைதீவு தேசிய கடலோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (1.01.2026) பிற்பகல் 2:02 மணியளவில் மாலைதீவு தேசிய கடலோர காவல்படை மற்றும் விமானப்படை நடத்திய கண்காணிப்பு நடவடிக்கையின் போது இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மாலைதீவு தேசிய கடலோர காவல்படையினரின் கூற்றுப்படி, வடக்கு மாலைதீவில் உள்ள அலிஃப் கேலாவிலிருந்து சுமார் 109 கடல் மைல் தொலைவில் இந்த மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த […]

இருளில் மூழ்கிய நகரங்கள்; உக்ரைனை குறிவைத்து தாக்கிய ரஷ்யா

உக்ரைனின் வலுசக்தித் துறையைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய தீவிரத் தாக்குதல்களால், தலைநகர் கிவ் உட்பட பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. சுமார் -20°C வரை குளிர் நிலவும் சூழலில், கிவ் நகரில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மின்சாரம் மற்றும் வெப்ப வசதியின்றி (Heating) முடங்கியுள்ளன. பழுதடைந்த மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்க 200-க்கும் மேற்பட்ட குழுக்கள் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடும் குளிரைத் தாங்க முடியாமல் பொதுமக்கள் […]

நடைமுறைக்கு வந்தது புதிய திட்டம்

நாட்டின் டிஜிட்டல் நிர்வாக இயக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, GovPAY டிஜிட்டல் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை அதிகாரபூர்வமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாடு தழுவிய ரீதியிலான அறிமுகமானது கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி நிறைவடைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாகன சாரதிகள் எந்த இடத்திலிருந்தும் மின்னணு முறையில் போக்குவரத்து அபராதங்களை செலுத்தவும், தாமதமின்றி தங்கள் ஓட்டுநர் உரிமங்களை உடனடியாக மீட்டெடுக்கவும் அனுமதிக்கிறது. இந்த தளம் ஏற்கனவே 86,000 […]

மக்கள் விடுதலை முன்னணியின் குழு ஒன்று இந்தியா விஜயம்

இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின் (ICCR) அழைப்பின் பேரில், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான ஒரு குழு, வியாழக்கிழமை (05) காலை இந்தியாவின் புதுடெல்லிக்கு புறப்பட்டது. புதுடெல்லியைத் தவிர, அவர்கள் குஜராத் மற்றும் கேரளாவிற்குச் செல்ல உள்ளனர், அங்கு அவர்கள் இந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கலந்துரையாடுவார்கள். இந்தியாவின் விவசாயம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான மையங்களையும் அவர்கள் பார்வையிடுவார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன் மற்றும் கிட்ணன் செல்வராஜ் […]

தோட்டத் தொழிலாளர்கள் சத்தியாக்கிரகம்

சாமி மலை பகுதியில் உள்ள கவரவலை தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் பணி நிறுத்தம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் எட்டு பேர் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாமி மலை பகுதியில் உள்ள ஹொரணை தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் கவரவலை தேயிலைத் தோட்டத்தை சேர்ந்த எட்டு தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலுக்கு முன்னால் சத்தியாக்கிரகத்தை வியாழக்கிழமை ( 05 ) ஆம் திகதி காலை 7 .30 மணிக்கு தொடங்கினர். கவரவலை […]

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி; 39 மாணவர்கள் பாதிப்பு

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலை காணப்பட்ட பெரிய குளவி கூடு ஒன்று கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் […]