இருபதுக்கு – 20; உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றப் போவது யார்?

சர்வதேச கிரிக்கெட் சபையின் 10ஆவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் சனிக்கிழமை (07) நடைபெறவுள்ள பாகிஸ்தான், நெதர்லாந்துக்கிடையேயான போட்டியுடன் ஆரம்பிக்கின்றது. இந்தியா மற்றும் இலங்கையில் இம்முறை நடைபெறும் தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்ற நிலையில், பாகிஸ்தான், நெதர்லாந்து தவிர நடப்புச் சம்பியன்கள் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, நமீபியா ஆகியன குழு ஏயில் இடம்பெற்றுள்ளன. குழு பியில் அவுஸ்திரேலியா, இலங்கை, ஓமான், சிம்பாப்வே, அயர்லாந்து ஆகியன இடம்பெற்றுள்ளன. குழு சியில் இங்கிலாந்து, […]

இலங்கை விமானப்படை சாம்பியன்

இலங்கை ஜூடோ சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 62வது தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் விளையாட்டு அமைச்சின் உள்ளக மைதானத்தில்  நிறைவடைந்தது. இந்தப் போட்டியில், இலங்கை விமானப்படை ஆண்கள் ஜூடோ அணி 6 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை ஆடவர் பிரிவில் வென்றது. விருது வழங்கும் விழாவில் தேசிய விளையாட்டு கவுன்சிலின் தலைவர் பிரியந்த ஏகநாயக்க, விமானப்படை ஜூடோ தலைவர் எயார் கொமடோர் எம்.பி.ஏ. கலப்பத்தி, முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் […]

சமூக விரோதச்செயல்களுடன் தொடர்பு: டொராண்டோ பொலிசார் ஒன்பது பேர் கைது

டொராண்டோ மாநகரக் காவல் துறையில் பணியாற்றும் 9 அதிகாரிகள், சமூக விரோதக் கும்பல்களுடன் கைகோர்த்துக்கொண்டு பல்வேறு பயங்கரக் குற்றங்களில் ஈடுபட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. யோர்க் பிராந்தியக் காவல்துறையினர் (York Regional Police) நடத்திய ரகசிய விசாரணையில், இந்தக் காவலர்கள் செய்த குற்றங்கள் வெளிப்பட்டுள்ளன. டொராண்டோ தெற்குச் சிறைச்சாலையின் (Toronto South Detention Centre) ஓர் உயர் அதிகாரியைக் கொலை செய்ய இவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் ரகசியத் தகவல்களைப் பரிமாறியமை போன்ற குற்றச்சாட்டுகளும் […]

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு மீண்டும் 90 நாள் தடுப்புக்காவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின், தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியாகிவிட்டதாகவும், மேலும் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் 31ஆம் திகதி பெறப்பட்ட 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியான நிலையிலேயே மீண்டும் தடுப்புக்காவல் கோரப்பட்டதாக இன்று வியாழக்கிழமை (05) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவலில் வைக்கப்பட்டுள்ள […]

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் எற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று வியாழக்கிழமை (05) நண்பகல் 12.00 இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும். அதன்படி, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடும் மின்னல் தாக்கம், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய […]

தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளியில் அறுவடை செய்த நெல்லை எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதி – ரவிகரன்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்லும் வீதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடி இறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தற்போது அக்கரைவெளியில் அறுவடைசெய்யப்பட்ட 5000 வரையிலான நெல் மூடைகள் அங்கிருந்து எடுத்துச்செல்ல முடியாமல் வயல்வெளிகளிலும் வீதிகளிலும் நீண்ட நாட்களாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டிற்கு அமைவாக அப்பகுதிக்குச் […]

தனியார் பேருந்துத் தொழில்துறையின் 30 ஆண்டு சட்டச் சிக்கலுக்கு தீர்வு

நாட்டின் தனியார் பேருந்துத் தொழில்துறையினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வந்த மிகப்பாரிய சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2026 ஜனவரி 17ஆம் திகதியிடப்பட்ட 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயணிகள் சேவை அனுமதிப்பத்திர ஒழுங்குவிதிகள் இதற்கான அவசியமான சட்ட ஏற்பாடுகளை வழங்குகின்றன. இந்த புதிய விதிமுறைகளின் கீழ் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை இரு தரப்பினரும் […]

எம்.பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் அவையில் கூச்சல் குழப்பம்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரைபின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் இன்று (05.01.2026) ஆரம்பிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார எழுப்பிய ஒழுங்கு பிரச்சினை ஒன்றின் போது இந்த கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டா சமர்ப்பித்த தனக்கிருக்கும் பாதுகாப்பு அறுச்சுறுத்தல் குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என […]

ட்ரம்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்ற வழக்கில், குற்றவாளியான ரியான் ரூத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், புளோரிடாவில் உள்ள டிரம்பிற்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது, புதர்களுக்கு இடையே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த 60 வயதுடைய ரியான் ரூத் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் […]

மத்திய பிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 09 பேர் உயிரிழப்பு

மத்திய பிலிப்பைன்ஸில் மலைப்பாங்கான பகுதியில் இருந்து லொறி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள பயாவன் நகரில் உள்ள விவசாய கிராமம் ஒன்றுக்கு மசகு எண்ணெய் மற்றும் வேறு சில பொருட்களை விநியோகித்து விட்டு தொழிலாளர்கள் தங்கள் அலுவலகத்திற்கு லொறியில் திரும் சென்றுக் கொண்டிருந்தனர். இதன்போது, அவர்கள் பயணித்த லொறி வீதியை விட்டு 98 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதில், ஐந்து பெரல் மசகு […]