அநுர அரசு புலம்பெயர் தமிழர்கள் வழங்கும் பணத்துக்கு ஏற்ற விதத்தில் ஆடுகின்றது – நாமல்

அரசுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து கிடைக்கும் மூலதன அனுகூலங்கள் மற்றும் அரசியல் இலாபங்களுக்காக தமிழ் மக்கள் என்ன செய்தாலும் அரசாங்கம் கண்டுக் கொள்ளாமல் இருப்பதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். நாடாளுமன்றத்தில் இன்று 05.01.2026) உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார்.தொடர்ந்துரையாற்றிய அவர், 78 ஆவது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் வேறாக கரிநாள் போராட்டம் நடத்துகின்றனர்.அவற்றை கண்டு கொள்ளாமல் அவற்றுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதை நாங்கள் பிழை என்று சொல்லவில்லை.அவர்களுக்கும் உரிமை […]

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு இ.போ.ச பேருந்தின் பிரேக் செயலிழப்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று (05.02.2026) காலை பருத்தித்துறை நோக்கி 6 மணிக்கு புறப்பட்ட அரசு பேருந்து நாகர்கோவில் பகுதியில் பிரேக் செயலிழந்ததால் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்தின் பிரேக் செயலிழந்துள்ளதை தொடர்ந்து என்னால் பேருந்தை இயக்க முடியாதென இ.போ.ச சபையின் பருத்தித்துறை கிளைக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு சாரதி நாகர்கோவிலில் பேருந்தை நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள், அரச அதிகாரிகள், ஏனைய தொழில் துறைகளுக்குச் செல்லும் அதிகாரிகள் உரிய நேரத்திற்கு […]

மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக வாகரை மீனவர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மீனவர்கள் மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். வாகரை பிரதேசத்தில் உள்ள மீனவர் அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது. வாகரை பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவோர் பெருளமானோர் மட்டக்களப்ப கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வாவிக்கரை வீதியால் சென்று கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டகாலமாக கரை வலை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

‘முத்துராஜவெல அபிவிருத்தி அதிகாரசபை’ பேராயர் கோரிக்கை

முத்துராஜவெல ஈரநில வலயத்தைப் பாதுகாப்பதற்காக ‘முத்துராஜவெல அபிவிருத்தி அதிகாரசபை’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஸ்தாபிக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பேராயர் இல்லத்தில் இன்று (05) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தின் இயற்கையான நீர் வழிந்தோடும் முறைமை முத்துராஜவெல ஈரநிலத்தின் ஊடாக அமைந்துள்ளதால், அங்கு தொடர்ந்தும் அத்துமீறிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் மீண்டும் கம்பஹா மாவட்டத்தில் பாரிய வெள்ள […]

“ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்” பட்டியலில் நுவரெலியாவும்

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள “ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்” பட்டியலில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியாவையும் உள்ளடக்கியுள்ளது. மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் Agoda இணையத்தளம், உலகின் மிகப்பெரிய சுற்றுலாச் சேவை வழங்கும் தளங்களில் ஒன்றாகும். அந்த இணையத்தளம் நுவரெலியாவை ‘சின்ன இங்கிலாந்து’ (Little England) என வர்ணித்துள்ளது. இதமான காலநிலையைக் கொண்ட நுவரெலியா, உயர்தர தேயிலை உற்பத்திக்கு சர்வதேச ரீதியில் பெரும் புகழ்பெற்றதாகும். அங்குள்ள […]

‘தேசிய பாடசாலை ஆசிரியர்-பிள்ளை ஒன்றியம்’ ஜனாதிபதி செயலகத்தின் முன் போராட்டம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேசிய பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட ‘தேசிய பாடசாலை ஆசிரியர்-பிள்ளை ஒன்றியம்’ இன்று காலை ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டமொன்றை ஆரம்பித்தது. தேசிய பாடசாலைகளில் 3 வருட சேவையை பூர்த்தி செய்த கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு, தமது பிள்ளைகளை அதே பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான சலுகை எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் 2025 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரினி […]

இந்திய பாராளுமன்றில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்க்கட்சிகள்!

இந்திய பாராளுமன்றில் வரவு செலவு திட்ட கூட்டத்தொடர் கடந்த 28-ம் திகதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. 2-ஆம் திகதியில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி பேசும்போது, முன்னாள் இராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களை சுட்டிக்காட்ட விரும்பினார். இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது […]

தவெகவில் உட்கட்சி மோதல்?

தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அக்கட்சியில் உள்நிலை மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தவெகவில் இருந்து மிக முக்கிய புள்ளி விலக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் சூழலில், முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மீதும் அதிக கவனம் […]

சிமெந்து பூச்சு தலையில் விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு, முகத்துவாரம் மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியொன்றின் வெளிச்சுவரில் இருந்து கழன்று விழுந்த சிமெந்து பூச்சு தலையில் விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போதே, எதிர்பாராதவிதமாக சுவரில் இருந்த சிமெந்து பூச்சுப் பகுதி சிறுவனின் தலையில் விழுந்துள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (05) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு […]

அனர்த்த நிவாரணங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை

வெளிநாட்டு அனர்த்த நிவாரணங்களை ஒருங்கிணைப்பதற்கான சிரேஷ்ட குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவின் தலைமையில் கூடியுள்ளது. வெளிநாட்டு நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பை மீளாய்வு செய்வதற்கும், தற்போது முன்னெடுக்கப்படும் அனர்த்த நிவாரண வேலைத்திட்டங்களின் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதற்கும் தேவையான தீர்மானமிக்க நடவடிக்கைகளை எடுப்பதே இக்கூட்டத்தின் நோக்கமாக அமைந்திருந்தது. மிகவும் முறையான மற்றும் வெளிப்படைத்தன்மையான பொறிமுறையின் ஊடாக, குறித்த நிவாரண உதவிகளை உரிய மக்களுக்கு நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பது குறித்து குழு உறுப்பினர்கள் […]