இம்மாத இறுதியில் ஜனாதிபதி இந்தியா விஜயம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் சத்தியாகிரக போராட்டம்

சாமிமலை மற்றும் கவுரவில தோட்டங்களில் எட்டு தொழிலாளர்களின் சேவையை தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தியதற்கு எதிராக இன்று வியாழக்கிழமை (பெப் 5) காலை 7.30 மணிக்கு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும், சேவை இடைநிறுத்தப்பட்ட காலத்திற்கு சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தொழிலாளர்கள் தெரிவித்ததாவது, கடந்த 48 நாட்களாக தங்களின் சேவை இடைநிறுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பின்புலமாக தோட்ட நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், தோட்டத்தில் பதிவு […]
இலங்கையின் தற்போதைய அரசு குறித்தும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்

பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சமத்துவமின்மைக்குத் தீர்வுகாண்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கை தொடர்பில் ஐக்கிய […]
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு; அரசாங்கம் தலையிடாவிட்டால் வேலைநிறுத்தம்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் தற்போதைய பணிச்சுமை தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் (TPA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கூட்டணியின் தலைவர்கள் கலந்துகொண்டு ஆக்ரோஷமான கருத்துக்களை முன்வைத்தனர். முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கருத்துத் தெரிவிக்கையில்: “தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பளம் உயர்த்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்குப் பதிலாக கம்பெனிகள் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டப் பார்க்கின்றன. முன்னதாக 20 கிலோ பறித்த இடத்தில், தற்போது 25 கிலோ […]
சாணக்கியனால் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துப் தனிநபர் பிரேரணை கையளிப்பு
யங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் சாணக்கியன் இராசமாணிக்கம், பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (இரத்து ) சட்டம் என்று தலைப்பிடப்பட்ட வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்ற செயலாளர் […]
சுதந்திர தின கறுப்பு கொடி போராட்டக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கறுப்புக்கொடி ஏந்தி அரசுக்கும், அரசமைப்புக்கும் எதிராக செயற்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ( 5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், சுதந்திர தின […]
மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும்

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய அவர், மின் அலகு ஒன்றிற்கான சராசரி உற்பத்திச் செலவு ஏற்கனவே 37 ரூபாவிலிருந்து 29 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார். “மின் அலகு ஒன்றின் உற்பத்திச் செலவைக் குறைக்காமல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தற்போது அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலையே காணப்படுகிறது. நாம் நாட்டினைப் […]
வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்ட E-Gates வசதியால் பயணிகளுக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம் பயணிகளின் வசதி கருதி அறிமுகம் செய்யப்பட்ட E-Gates வசதி முறையான வகையில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முனையங்களில் கடவுச்சீட்டுகளை சரியாக ஸ்கேன் செய்யத் தவறியதால் வருகை முனையத்தில் நீண்ட வரிசைகளும் தாமதங்களும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளின் விபரங்களை முன்கூட்டியே சரியாக முறையில் விமான நிறுவனங்கள் பதிவேற்றமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அழுகிய மீன்கள் மூதூரில் மீட்பு

மூதூர் – இறால்குழி பகுதியில் கருவாடு தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 கிலோ கிராம் எடையுள்ள அழுகிய மீன்கள் சுகாதார அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை இன்று(05.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட மீன்கள், புழுக்கள் மொய்த்த நிலையில், சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதால் உடனடியாக அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் புகார் […]
தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் நினைவேந்தல்

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04.02.2026) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 04.02.1957 அன்று இலங்கையின் சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். இந்த நிலையில் திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், சிங்கள அரச படைகளால் […]