கனடாவின் கார் உற்பத்தித் துறையில் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் முடிவு

கனடாவின் கார் உற்பத்தித் துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக நிலவி வந்த அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக ‘ட்ரில்லியம் நெட்வொர்க்’ (Trillium Network) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போது ஜப்பானிய நிறுவனங்கள் அந்த இடத்தைப் பிடித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் கார் உற்பத்தியில் ‘டெட்ராய்ட் த்ரீ’ (Detroit Three) எனப்படும் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் பங்கு பெருமளவு குறைந்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் கனடாவில் உற்பத்தியான […]

புளியங்குளம் அலகரையில் சட்டவிரோத மின்சார வேலி அமைத்த காணி உரிமையாளர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் அலகரை, பகுதியில் யானைகளில் இருந்து பாதுகாப்பு பெற சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட யானை வேலியில் மின்சாரம் தாக்கி மோகனராசா லோயிதன் (வயது 5) எனும் சிறுவன் மரணமடைந்ததை தொடர்ந்து குறித்த காணி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் அலகரை, பகுதியில் யானைகளில் இருந்து பாதுகாப்பு பெற அமைக்கப்பட்ட யானை வேலியில் இலங்கை மின்சார சபையின் மின்னிணைப்பு ஊடாக கிடைக்கும் மின்சாரம் நேரடியாக வழங்கப்பட்டதாலேயே […]

கனடாவிலிருந்து அல்பர்ட்டா பிரிய வேண்டுமென்பது பெரும் துரோகம் – முன்னாள் பிரதமர்

கனடாவிலிருந்து அல்பர்ட்டா மாகாணம் தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக, ஆளும் கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திடுவது “மிகப்பெரிய துரோகம்” என முன்னாள் பிரதமர் ஜேசன் கென்னி (Jason Kenney) கடுமையாகச் சாடியுள்ளார். அல்பர்ட்டா மாகாணத்தைச் சுதந்திர நாடாக்கக் கோரி ‘ஸ்டே ஃப்ரீ ஆல்பர்ட்டா’ (Stay Free Alberta) என்ற அமைப்பு ஒரு பொதுமனுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தப் பிரிவினைவாத மனுவில் தற்போதைய அல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித்தின் (Danielle Smith) கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களே […]

கியூபெக் இரட்டைக்கொலை; இரண்டு சிறுவர்கள் கைது

வடக்கு கியூபெக்கின் மிஸ்டிஸினி கிரி பிரதேசத்தில், நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பாக 17 வயதுடைய இரண்டு சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த அமைதியான பழங்குடியின மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு ஈயூ ஈனு (Eeyou Eenou) காவல்துறையினர் சென்றபோது, குண்டுகளால் துளைக்கப்பட்ட ஒரு காரையும், அதனுள் படுகாயங்களுடன் இருந்த இரண்டு இளைஞர்களையும் கண்டெடுத்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 30 வயதான பெடாபின் நீபோஷ் (Bedabin […]

”ஒரு தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது”

”ஒரு தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது” என, பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை வியூகவாதி ஜென்னி பைர்ன் (Jenni Byrne) தெரிவித்துள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி சந்தித்த தோல்வி மற்றும் கட்சித்தலைவர் பொய்லிவ்ரே தனது சொந்தத் தொகுதியிலேயே தோற்றமை குறித்துக் கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருகிறது. மேலும், கன்சர்வேடிவ் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ‘தலைமைத்துவ மறுஆய்வு’ வாக்கெடுப்பு நடைபெறும் நிலையிலேயே ஜென்னி பைர்னின் இந்த கருத்து […]

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை உறுதிப்படுத்தவும் – பவ்ரல்

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்யும் பணிகள் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், தகுதியுள்ள அனைத்துப் பிரஜைகளும் தமது பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம்’ கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2027 ஜனவரி 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 வயது பூர்த்தியடையும் இளம் பிரஜைகள், தத்தமது பிரதேச கிராம அலுவலர் மூலம் YC […]

டிராக்டர் விபத்தில் ஒருவர் காயம்

தலவாக்கலை லோகி தோட்டத்தில் இருந்து தேயிலை கொழுந்து ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை லோகி தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் வைத்து திங்கட்கிழமை (02) மாலை விபத்துக்குள்ளானதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். லோகி தோட்டத்திலிருந்து பெயாவல் தேயிலை தொழிற்சாலை நோக்கி சென்றுக் கொண்டிருந்த டிராக்டர் வாகணத்தின் டெய்லர்( பெட்டி) கழன்ற நிலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது டெய்லரில் (பெட்டியில்) பயணித்த தொழிலாளி ஒருவர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (3) அன்று மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் மரண மடைந்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் புளியங்குளம் அலகரை கிராமத்தை சேர்ந்த மோகனராசா லோயிதன் (வயது 5) என்றசிறுவனே இவ்வாறு மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் குறித்த சிறுவன் அவரது அம்மம்மாவுடன் புல்லு வெட்டுவதற்கு சென்ற போது குறித்த புல் வெட்டும் பகுதியில் குறித்த பகுதியில் யானைக்காக அமைக்கப்பட்டுள்ள […]

“ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தெவ்னிமோரி தரிசனத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று புதன்கிழமை (04) பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்படும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் 1960களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர […]

மன்னாரில் பணிசில் பல்லி எச்சம்

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகத்தர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் மேற்குறித்த வெதுப்பகம் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. […]