குடும்பத்தை இழந்த இலங்கையருக்கு உதவிக் கரம் நீட்டிய கனடா

கடந்த 2024ஆம் ஆண்டு கனடா, ஒட்டாவாவில் நடந்த மிகக்கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் குடும்பத்தை இழந்த இலங்கையருக்கு கனடா அரசாங்கம் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. குறித்த சம்பவத்தில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இழந்த இலங்கையரான தனுஷ்க விக்ரமசிங்கவின் தந்தை மற்றும் சகோதரருக்குக் கனடா அரசாங்கம் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனுஷ்கவின் மனைவி தர்ஷனி அவர்களது பிள்ளைகளான இனுக்க அஸ்வினி, 3வயதான ரனாயா, 2 வயதான கெல்லி […]
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் சுயலாப அரசியலுக்காகவே பிரஜா சக்தி திட்டம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் சுயலாப அரசியலுக்காக தான் பிரஜா சக்தி கொண்டு வரப்படுவதாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஷ் தெரிவித்துள்ளார். நேற்று (31) இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திரமாக இயங்கக்கூடிய சபையின் விடயத்தில் சுயலாப கட்சி அரசியல் செய்யும் நோக்கோடு கிராமம் தோறும் பிரஜா சக்தி அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதை இச்சபை வன்மையாக கண்டிக்கின்றது. பருத்தித்துறை பிரதேச சபையின் நிதி மற்றும் நிர்வாக கட்டமைப்பு விடயங்களில் தலையீடு செய்யும் விதமாக பிரஜா […]
இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது […]
தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்கள் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் இரண்டு கொள்கலன் நிவாரணப் பொருட்களையும், நிதி உதவியையும் வழங்கியுள்ளனர். இலங்கை மக்களுடன் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள், தித்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, இரண்டு 20 அடி கொள்கலன் அளவிற்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், கணிசமான நிதி உதவியையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். […]
போதைப்பொருள் கடத்தல்காரரான “எல்டோ தர்மே” உறுப்பினர்கள் மூவர் கைது!
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான தர்மசிறி லியனகே அல்லது “எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களை கல்கிஸ்ஸ பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்கள், 25 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 15 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் மொரட்டுவ, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுகளில் “எல்டோ […]
அரசின் கிவுல் ஓயா திட்டத்தை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்று கூட வேண்டும்

சித்தாண்டி சமூக ஒன்றியம் நாடாத்தும் மாபெரும் பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் சித்தண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத ஆலய முன்றலில் நேற்று (31) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன கலந்து கொண்டார். இதன் போது அங்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது அரசாங்கம் கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்கின்றது. இதில் வவுனியா மாவட்டத்தில் தமிழர்களுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 13,000 ஏக்கரிற்கும் அதிகமான நிலப்பரப்பினை அழித்து மணலாறு பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்ட […]
புதிய விமான சேவை ஆரம்பம்

சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, நேற்று (31) பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய விமானத் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கன்னிப் பயணத்திற்காக A-330 எயார்பஸ் ரக விமானம் பயன்படுத்தப்பட்டது. இவ்விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, பாரம்பரிய முறைப்படி நீர்த்தாரை மரியாதை வழங்கப்பட்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டது. இதில் 170 பயணிகள் மற்றும் […]
சரியான கல்விச் சீர்திருத்தங்களே இந்த நாட்டிற்கு அவசியம் – திலித்

சரியான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த நாட்டிற்கு அவசியமானவை என்றும், அது அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார். பதவிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே திலித் ஜயவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். “நவீன கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என்று நாம் கூறத் தொடங்கி இருபது வருடங்களாகிவிட்டன. இப்போது சீர்திருத்தங்கள் அவசியம். ஆனால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ள முதலாவது அரிச்சுவடிப் புத்தகத்தில் பாட்டனுக்கு […]
போதையில் வாகனம் ஓட்டிய 382 சாரதிகள் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் நேற்று பல நபர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 28,470 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதில் சந்தேகத்தின் பேரில் 523 நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்கள் தொடர்பில் நேரடியாக 09 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல இந்த நடவடிக்கைகளின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட […]
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் “நீதிக்கான சாட்சி”!

1996 தொடக்கம் 2009 வரையான காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்றையதினம் யாழ். சிவகுரு ஆதீனத்தில் “நீதிக்கான சாட்சி” என்ற நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதே போன்ற ஒரு நாளில் (1996.01.31) கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதியின் 31வது ஆண்டை நினைவுகூரும் முகமாக இந்த நூதன போராட்டம் […]