2026 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்ட கலந்துரையாடல்

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட வரவு–செலவுத் திட்டம் தொடர்பாக மக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை கனடா பிரம்டன் நகரசபை வழங்குகிறது. அந்தவகையில் வார்டு 2 மற்றும் 6 பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், பிரம்டன் வரவு–செலவுத் திட்டம் 2026 பொதுப் பங்கேற்பு செயல்முறையின் ஒரு பகுதியாக நடைபெறும் “வார்டு காபி கலந்துரையாடல்” நிகழ்வில் மேயர் பேட்ரிக் பிரவுன், கவுன்சிலர்கள் மைக்கேல் பாலெஷி, பிராந்திய கவுன்சிலர் (வார்டுகள் 2 மற்றும் 6) மற்றும் நவ்ஜித் கௌர் […]
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், ஐக்கிய இராச்சியத்தில் வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்து 01 மில்லியன் ரூபாயினை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மாத்தறை பிரிவின் அதிகாரிகள், குறித்த நபரை திக்வெல்ல – வெஹெல்ல பகுதியில் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் வெஹெல்ல, உருகமுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குற்றப் […]
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்…

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, தமது வீட்டிற்குரிய செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பிலான தகவல்களை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு […]
மாவத்தகம ரஜமஹா விகாரை புத்தர் சிலை திருட்டு

வத்தகம – கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையின் தேரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 28ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு நான்கு பேர், விகாரைக்கு சென்று, விசாரணைக்குத் தேவை என கூறி, தேரர்களிடமிருந்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒன்றறை அடி […]
பல கோடி நிதி மோசடியில் ஈடுபட்ட இளைஞன் கைது
கொழும்பில் இரத்தினக்கல் விற்பனை பாரிய மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் சுமார் ஒன்பது கோடி ரூபா மதிப்புள்ள 09 இரத்தினக்கற்களை பெற்று, அதன் மதிப்புக்கு சுமார் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை வழங்கி பணத்தை மோசடி செய்துள்ளார். மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் […]
ஈரான் தென் பகுதியில் வெடிப்பு சம்பவம்

ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை நகர் பந்தர் அபாஸ்–இல் ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட வெடிப்பால் ஒரு சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததுடன் 14 பேர் பாயமடைந்துள்ளனர். உள்ளூர் மீட்பு சேவைகள் அதிரடியாகச் செயல்பட்டு, நெருக்கடியான சூழலில் மக்களை பாதுகாக்க முயற்சி செய்ததாக ஊள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வெடிப்பு ஒரு வாயு கசிவால் ஏற்பட்டதாக பந்தர் அபாஸ் தீயணைப்பு படைப் பிரிவின் தலைவர் குறிப்பிட்டார். ஈரானின் முக்கிய இராணுவ தளபதியை இலக்கு வைத்து இந்த தாக்குதல் […]
காசா மீது தொடரும் இஸ்ரேல் தாக்குதல்கள்

காசா பகுதி முழுவதும் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் வான்தாக்குதல்களில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக, ஹமாஸ் நிர்வகிக்கும் சிவில் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த ஒரு கூடாரத்தை ஹெலிகாப்டர் தாக்கியதில் பலர் உயிரிழந்ததாகவும், இது அண்மைய காலத்தில் நடந்த மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தம் […]
நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுகிறது!

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதற்காக கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வரைபடங்கள் மற்றும் நில அளவைத் திணைக்களத்தின் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில், நேற்று (31) காத்தான்குடி நகர சபைத் தவிசாளரின் அலுவலகத்தில் பரிசீலிக்கப்பட்டன. இதன்போது, குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக மேலதிகமாக தேவையான விடயங்களை தாமதமின்றி ஆவணப்படுத்தி சமர்ப்பிக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். […]
மீண்டும் மின்வெட்டு?

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் மீண்டும் மின்வெட்டு நிலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். தரமற்ற நிலக்கரியை தொடர்ந்து நாட்டிற்குள் இறக்குமதி செய்தால், இந்த நிலையைத் தவிர்க்க முடியாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் நாட்டை வந்தடைந்த மூன்று நிலக்கரி கப்பல்களில், முதலாவது கப்பலில் கொண்டு வரப்பட்ட நிலக்கரி தரமற்றது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏனைய இரண்டு கப்பல்களில் உள்ள நிலக்கரியின் […]
மீண்டும் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெளிகண்டல் ஆற்றுப்பகுதியில் டிட்வா புயல் காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் ஆற்றுப் படுக்கை மற்றும் வயல் பகுதிகளில் இயற்கையாகவே தேங்கி கிடக்கும் மணல்களை சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் உழவு இயந்திரத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த மணலை டிப்பர் ரக வாகனம் மூலம் ஏற்றி எந்தவித அனுமதியும் […]