நுவரெலியா கிரகறி வாவி அருகிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

நுவரெலியா கிரகறி வாவி பகுதியில் சிசுவொன்றின் சடலம் கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளது. சிசுவின் சடலம் எவ்வாறு அங்கு வந்தது, சிசு எவ்வாறு இறந்தது, சிசு யாருடையது என்பது தொடர்பாக நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள சவகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.வருகிறது உலகக் கிண்ணம்

உலகக் கிண்ணம் தாங்கிய ஊர்தி, தம்புள்ளையிலிருந்து ஞாயிறுக்கிழமை (01) புறப்பட்டது. அந்த ஊர்தி மிஹிந்தலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய நகரங்களைக் கடந்து யாழ்ப்பாணத்தை பிற்பகல் சென்றடையும். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு (கச்சேரி) முன்பாக உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம், துரையப்பா விளையாட்டு அரங்கம், யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் ஆகிய இடங்களுக்குக் கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளது. வடபகுதியின் முக்கிய […]
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்; சம்பியனான றிபெகினா

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், ஐந்தாம் நிலை வீராங்கனையான எலெனா றிபெகினா சம்பியனாகியுள்ளார். முதல் நிலை வீராங்கனையான அரீனா சபலெங்காவுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6-4 என்ற ரீதியில் முதலாவது செட்டை வென்ற கஸக்ஸ்தானின் றிபெகினா, 4-6 என்ற ரீதியில் இரண்டாவது செட்டை இழந்து தீர்க்கமான மூன்றாவது செட்டில் 0-3 என பின்தங்கியிருந்தபோதும் மீண்டு வந்து 6-4 என்ற ரீதியில் செட்டைக் கைப்பற்றி சம்பியனானார். தனது அரையிறுதிப் போட்டியில் ஆறாம் நிலை வீராங்கனையான ஜெஸிக்கா பெகுலாவை 6-3, […]
மாத்தளையில் நிலச்சரிவு

மாத்தளை-மாத்தலப்பிட்டிய பிரதான வீதியின் மரகஸ்பிட்டிய பகுதியில் சனிக்கிழமை (31) அன்று காலை மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது, இந்த இடத்தில் டிட்வா சூறாவளி காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையைப் பாதுகாக்க கட்டப்பட்ட பழைய கல் சுவரின் நாற்பது அடி பகுதியும், சாலையின் ஒரு பகுதியும் சரிந்துள்ளன. இந்த நிலச்சரிவு காரணமாக, குருமலாந்த, கூடல, எகொட பல்லேகலே, பல்லமுல்ல, 5வது கனுவ, புட்டாவ எலடிகஹேன, ரத்னிந்த, 4வது கனுவ கல்டோரஹேன, தெஹிகஷின்ன, கல்பாய துத்திரிபிட்டிய, கந்தஹேன மற்றும் கல்லுமதுர ஆகிய […]
பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கும் புதிய திரைப்படம்!
பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். தமிழில் ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கில் முன்னணி இயக்குநராக வலம்வந்தவர், தொழில்நுட்ப ரீதியாகவும் சினிமாவில் பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டவர். தனித்திறன் கொண்ட படைப்பாளியாக கருதப்படும் இவருக்கு நடிகர் கமல் ஹாசன், ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரில் கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார். இந்த நிலையில், சிங்கீதம் சீனிவாச […]
நடிகர் தனுஷின் புதிய திரைப்படத்தில் ஸ்ரீ லீலா
நடிகர் தனுஷின் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர். இறுதியாக, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனிக்க வைத்தார். நடிப்பிலும் கடந்தாண்டு குபேரா, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய வெற்றிப் படங்களையும் கொடுத்தார். தற்போது, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன் 55-வது படத்திற்குத் தயாராகி வருகிறார். […]
ஜெயிலர் பட பாடல் 20 கோடி பார்வைகளைக் கடந்தது!
ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல் 20 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் நல்ல பங்களிப்பைச் செய்தன. முக்கியமாக, ஜெயிலர் முழுக்கவே ஹுக்கும் பாடலின் பின்னணி இசையே காட்சிகளுக்கு பலமாக அமைந்திருந்தது. இந்த நிலையில், ஹுக்கும் பாடலின் லிரிக்கல் விடியோ யூடியூபில் 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. சூப்பர் சுப்பு எழுதிய இப்பாடலை அனிருத் பாடியிருந்தது […]
நடிகர் அபிஷன் ஜீவிந் நடிப்பில் ‘வித் லவ்’

நடிகர் அபிஷன் ஜீவிந் நடிப்பில் உருவாகியுள்ள வித் லவ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை இயக்குநர் அட்லீ தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷேன் ஜீவிந் தற்போது வித் லவ் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்தின் சியோன் ஃபிலிம்ஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் மதன் இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகை […]
“பேங் பேங்” டீசரை வெளியிட்டார் எஸ்.ஜே. சூர்யா!
நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. நடிகரும் நடன இயக்குநருமான பிரபு தேவா மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கின்றனர். 1990-கள் முதல் இருவரும் ஒன்றாக நடித்து வெளியான படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் நடிகர்கள் பிரபு தேவா மற்றும் […]
இளையராஜாவிடம் விருது பெற்ற பாக்யஸ்ரீ போர்ஸ்!

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் விருது அளித்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது சொந்த மண்ணில் இளையராஜாவிடம் விருது பெற்றதுக்கு மிகுந்த நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். தெலுங்கில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். நடிப்பாற்றலுடன் கூடிய அழகான தோற்றத்தால் தமிழ், தெலுங்கு திரைத்துறையில் பல படங்களில் வாய்ப்பைப் பெற்று வருகிறார். தமிழில் வெளியான காந்தா படத்திலும் அவரது நடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில். […]