நாளை முதல் புதிய விமான சேவை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள விமானப் பட்டியலில் புதிதாக பெய்ஜிங் கேபிடல் ஏர்லைன்ஸை சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிறுவனம் நாளை முதல் (ஜனவரி 31, 2026)செயல்பாடுகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. “பெய்ஜிங் டாக்சிங்” சர்வதேச விமான நிலையத்திற்கும் பஞ்சாப் விமான நிலையத்திற்கும் இடையே வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்கும். அதே போன்று, இந்த விமான நிறுவனம், ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் சேவைகளை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடம், நாடு புத்தாண்டில் […]
தமிழினத்தின் உரிமைக்காகத் தன்னை ஈகம் செய்த முத்துக்குமாரின் நினைவேந்தல்

தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உகந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்றைய தினம் (29.01.2026) இடம்பெற்றுள்ளது. யாழில் உள்ள தமிழீழத் தாயக நினைவேந்தல் பணிமனையில் உணர்வுப்பூர்வமாக இந்த நினைவேந்தல் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தமிழினத்தின் உரிமைக்காகத் தன்னை ஈகம் செய்த வீரனுக்கு, உணர்வாளர்கள் திரளாகக் கூடி வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் புதிய திருப்பம்
2025ஆம் ஆண்டிற்கான இலங்கையின் தற்போதைய கையிருப்பு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிகத்தைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் இந்த மேலதிக நிலை காணப்பட்டமை பொருளாதாரத்திற்கு ஒரு சாதகமான அறிகுறியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய வருமானம் 2025இல் 8 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது. இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22.8 சதவீத வளர்ச்சியாகும். அத்தோடு, சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018ஆம் ஆண்டை விட […]
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பேச்சுக்கு அழைத்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார். இந்த கலந்துரையாடலை அடுத்த செவ்வாய்க்கிழமை (3) மாலை 6 மணிக்கு நடத்த ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதியின் ஒப்பந்தம் குறித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை(30) தெரிவித்தார். பாடசாலைகளில் பயிற்சி பெற்ற இந்த பட்டதாரிகள் தங்கள் சேவைகளை நிரந்தரமாக்கக் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக […]
இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறக்கம்!

குவைத்தில் இருந்து டெல்லி நோக்கிப் பயணித்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் அகமதாபாத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் 180 பயணிகள் உட்பட மொத்தம் 186 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, கழிவறையில் இருந்த ஒரு டிஷ்யூ பேப்பரில் எழுதப்பட்ட மிரட்டல் குறிப்பை விமான ஊழியர்கள் கண்டெடுத்தனர். அதில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், விமானம் கடத்தப்படும்என்றும் எழுதப்பட்டிருந்தது. பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றிய விமானி, அகமதாபாத் விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, அங்குள்ள சர்தார் வல்லபாய் […]
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும்!

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் நாட்டினுடைய அபிவிருத்தியை எந்த தடைகளும் இல்லாமல் மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் காத்திருப்பு பகுதி வேலைகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் […]
கனடா விமானங்களுக்கு 50 சதவீத வரி?

அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந்த நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்கு சான்றளிக்க கனடா மறுத்ததற்குப் பதிலடியாக இந்த வரி நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் […]
சங்கானை இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை!

சங்கானையில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினரும், வலி. மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், சுழிபுரத்தில் 30 வருடமாக நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு அந்த காணியின் உரியவர்களான பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரிடம் ஒப்படைத்து […]
இலங்கை குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் ஆட்டநிர்ணய சர்ச்சை?

சிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் மற்றும் ஊழல் இடம்பெறுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து, நேற்று (29) இரவு அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இலங்கை குத்துச்சண்டை சங்கம் மற்றும் அதன் தலைமைத்துவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த நெருக்கடிக்கு, தமக்கு நெருக்கமானவர்களுக்குச் சாதகமாக போட்டி முடிவுகளை மாற்றும் முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதே பிரதான காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியின் போதே இந்த சர்ச்சை ஏற்பட்டதாகக் குற்றம் சுமத்தும் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். குறித்த […]
தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்கச் சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கமைய, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 368,000 ரூபாய் வரை குறைவடைந்துள்ளது. நேற்றைய தினம் (29) அது 386,400 ரூபாவாகப் பதிவாகியிருந்தது. இதேவேளை, நேற்று 420,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை, இன்று […]