காஸா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்!

எகிப்து நாட்டுடனான காஸாவின் எல்லையை மீண்டும் திறக்கவுள்ளதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. காஸாவில், 2023 முதல் நடைபெற்று வந்த இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையிலான போர் கடந்த 2025 அக்டோபரில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்தை ஏற்று இருதரப்பினரும் தாக்குதல்களைக் கைவிட்டனர். இந்த நிலையில், போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக எகிப்து உடனான காஸாவின் ரஃபா எல்லையை வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) முதல் மீண்டும் திறக்கவுள்ளதாக, இஸ்ரேல் […]

உலக அரங்கில் வல்லரசாக உயர்ந்து வரும் இந்தியா; மோடிக்கு உலகத் தமிழ் வர்த்தக சங்கம் பாராட்டு

இரண்டாவது முறையாக பதவியேற்ற நாள் முதல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்தியாவின் மீது பல்வேறு வகையில் வர்த்தகப் போரை செய்து வருகிறார். இதனை சமாளிக்கும் வகையில் அமைதியாக இந்திய இறையாண்மையை காக்கும் வகையிலும் இந்திய ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கும் வகையிலும், நடவடிக்கைகளில் இந்திய அரசு செய்து வருவது உலக அரங்கில் நற்பெயரை பெற்று வருகிறது. அமெரிக்காவின் மக்கள் தொகை 338 மில்லியன் அதற்கு தேவையான பொருட்களை இந்தியா மற்றும் சீனா பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. […]

பாரதி தமிழ் வித்தியாலயத்தில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

திருகோணமலை வலயக் கல்வி அலுவலக எல்லைக்குட்பட்ட பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த பாடசாலையில் கடமையாற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (30.01.2026) இந்தப் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பாடசாலையில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வரும் குறித்த ஆசிரியரது முயற்சியால் தமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தநிலையிலே, அவ்வாறானதொரு ஆசிரியரை இடமாற்றம் செய்வது அந்தப் பகுதி […]

மணல் பற்றாக்குறை; ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் கடுமையாக பாதிக்கிறது!

வட மாகாணம் தற்போது கடுமையான மணல் பற்றாக்குறை என்ற மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக இலங்கை தேசிய நிர்மாண சங்கம் வடமாகாண கிளையின் தலைவர் ந. நந்தரூபன் தெரிவித்துள்ளார். இந்த நிலை வீடமைப்பு, அரச அபிவிருத்தித் திட்டங்கள், தனியார் கட்டுமானங்கள் மட்டுமல்லாது, கட்டுமானத் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் கொண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் கடுமையாக பாதித்து வருகிறது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கோரிக்கையில், ஒரு அடிப்படை கட்டுமானப் பொருளான மணல் இன்று சட்டபூர்வமான […]

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் கைது

நாவலப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் வடிக்கும் தொழிற்சாலையொன்றை நடத்திய 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று(29.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, 47 வயதான பிரதான சந்தேக நபர் உட்பட உதவி புரிந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது […]

கல்வி மறுசீரமைப்பு; யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்

தற்போது தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, சர்சைக்குள்ளாகிய நிலையில் பிற்போடப்பட்டுள்ள பாடத்திட்ட – கல்வி மறுசீரமைப்பு குறித்த, சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து, அதனைச் செயற்படுத்துவதற்குப் பொருத்தமான திட்டவரைபை முன்மொழிவதற்காக நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் வழங்கிய வழிகாட்டல்களின் அடிப்படையில், பாடத்திட்ட – கல்விச் சீர்திருத்தப் பணிகளை முன்னெடுக்கவென விசேட நிபுணர் […]

தேசிய மக்கள் சக்தி என்பது ஒரு அரசாங்கம் மட்டுமே தவிர அது ‘அரசு’ அல்ல

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரான லால்காந்த மேற்கொண்டு வரும் செயற்பாடுகள், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஜான் டொய்லி ஆற்றிய சூழ்ச்சிமிக்க பாத்திரத்தையே நினைவூட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார். பத்தரமுல்லயில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி (NPP) என்பது ஒரு அரசாங்கம் மட்டுமே தவிர அதுவே ‘அரசு’ அல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார். ஒரு அரசாங்கத்தைத் தேர்தலில் […]

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விசனம்

மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு அவர்களுக்கே பாராட்டு விழாக்களை நடத்தும் வழக்கம் கடந்த ஆட்சி காலத்தில் தாராளமாக இடம்பெற்றது. நாம் அதற்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கத்திலும் இவ்வாறான சம்பவங்கள் எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்றன என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வுகளே அதிகம் இடம்பெற்று வருகின்றன. இதற்கு பாடசாலை சமூகமானது […]

தமிழ்த் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது பிராஜா சக்தி திட்டம் 

பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (30) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்கள் அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக பிரஷா சக்தி என்கின்ற அமைப்பை உருவாக்கியுள்ளது அந்த அமைப்பின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டத்தை தாம் […]

விமானச் சேவைகள் நிறுவன முன்னாள் தலைவர் ஹர்ஷ அபேவிக்ரம பதவி நீக்கம் தொடர்பில் விளக்கம்

விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷா அபேவிக்ரம பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025.12.29ஆம் திகதி இலங்கை மகாபோதி சங்கத்தின் கடிதத் தலைப்பில் பாணகல உபதிஸ்ஸ தேரர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதில், […]