ஒன்டாரியோவில் நெட்ஃப்ளிக்ஸ் நிர்வாகிகள்…

ஒன்டாரியோ உலகளாவிய திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்கு துறைகளின் முக்கிய மையமாக வளர்ந்து வரும் நிலையில், அந்த வளர்ச்சியை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். இந்தச் சூழலில், நேற்று டொராண்டோவில் மல்யுத்த வீராங்கனை செல்சியா கிரீன் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிர்வாகிகளை வரவேற்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது மகிழ்ச்சியளித்தது என ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) பதிவிட்டுள்ளார்.

திருக்கேதீஸ்வரத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதிகளை வழங்க நடவடிக்கை

திருக்கேதீஸ்வரத்திற்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித அசௌரியங்களும் ஏற்படா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்தார். சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முன்னோடி கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து, திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், ”திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் வருடா வருடம் இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் ஒன்றுகூடுவது வழமையாகும். இந்த […]

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆவது நிறைவு நினைவேந்தல்

கிழக்கு மாகாணத்தையே உலுக்கிய படுகொலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம் 28/01/2926 நடைபெற்றது. மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டது. 28/01/1987 மற்றும் 12/06/1991 ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இறால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239பேர் படுகொலைசெய்யப்பட்டனர். குறித்த படுகொலையில், சிறுவர்கள்,பெண்கள் […]

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி; அபராதம் வசூல்!

தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக நேற்று(28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தின் நிபுணர்கள் முன்னிலையில் நிலக்கரி மாதிரிகள் பெறப்பட்டு, அவை மேலதிக பரிசோதனைகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக அவர் […]

2025 டிசம்பரில் ஆடை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 டிசம்பரில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளின் தேவை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு ஆடை சங்கங்களின் பேரவை (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதி வீழ்ச்சியடைந்த போதிலும், இந்த மூன்று பிரதான சந்தைகளும் அந்த இழப்பை ஈடுசெய்து ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2024 டிசம்பருடன் ஒப்பிடும்போது கடந்த டிசம்பரில் அமெரிகாவுக்கான ஏற்றுமதி 6.49% அதிகரித்து 178.29 […]

இன்றும் வரட்சியான வானிலை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வரும் நாட்களில் வரட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், பதுளை, காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பனிமூட்டம் காரணமாக வீதித் தெரிவுத்திறன் குறைவாக இருக்கும் என்பதால், அதிகாலை வேளையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் […]

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிராக நடைபெற உள்ள போராட்டத்தில் நாமும் இணைகிறோம்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் குழு மெய்நிகர் மூலமாக கூடியது. இதில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, இலங்கை அரசாங்கம் மாகாணசபை தேர்தல் தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைத்திருப்பதால் மாகாணசபை தேர்தல்கள் பல வருடங்கள் தள்ளிப்போகலாம் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன், தேர்தலை மிக விரைவில் நடாத்துவதற்கான அழுத்தங்களை ஏனைய கட்சிகளுடன் இணைந்து உருவாக்க வேண்டும் எனவும் மாகாணசபைத் தேர்தலின் அவசியத்தை இராஜதந்திர […]

இலங்கையில் புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் சுமார் 240 பில்லியன் ரூபா வரை நட்டம்

புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதுடன், இதன் விளைவாக நாட்டிற்கு வருடத்திற்கு 225 பில்லியன் முதல் 240 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை குறித்து, சுகாதார, ஊடக மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இடம்பெற்ற நிறுவன ரீதியான மீளாய்வின் போதே […]

கொலம்பியாவில் விமான விபத்து: அரசியல்வாதி உட்பட 15 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 15 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பயணிகள் பட்டியலின்படி, அந்த விமானத்தில் அந்நாட்டு அரசியல்வாதியான டையோஜெனெஸ் குயின்டெரோ (Diogenes Quintero) மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அந்நாட்டுத் தேர்தலில் அவர் போட்டியிடத் தயாராக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினர் விமானம் விழுந்த இடத்திற்கு […]

இன்று 2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை

2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் தேசிய விழா, அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று காலை கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதேவேளை, வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் […]