இளைஞர் அழகுப் போட்டியான ’’மிஸ் டீன் இன்டர்நேஷனல்’’ இயக்குனர் இலங்கை வருகை

உலகின் மிக பிரபலமான இளைஞர் அழகுப் போட்டியான “மிஸ் டீன் இன்டர்நேஷனல்” இன் இயக்குனர் நிஷாந்த ஆனந்த், கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெறும் மிஸ் இலங்கை போட்டியின் சான்றிதழ் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக புதன்கிழமை (28) இரவு இலங்கை வந்தார். கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெறும் “ரோட் டு பியூச்சர் மாடல் ஹன்ட்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வை மிஸ் டீன் இலங்கை போட்டியின் இயக்குநர் ருக்மல் சேனநாயக்க ஏற்பாடு செய்துள்ளார். “மிஸ் […]

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்தவர் உயிரிழப்பு 

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனகல பகுதியில் 17 வயதுடைய சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்து கிடந்த நிலையில் புதன்கிழமை (28) மாலை மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த கோனகல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ரந்தில் கவிந்து சபுசத என்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. குறித்த சிறுவனின் தாய் 28ஆம் திகதி மாலை மெதகொட பொலிஸ் சாவடியில் இது தொடர்பாக முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் யுத்த காலத்தில் மூடப்பட்ட வீதிகளைத் திறக்க நடவடிக்கை

மன்னார், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவனையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதி நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இன்றி மூடப்பட்டு காணப்பட்டது. குறித்த வீதி மூடப்பட்ட காலப்பகுதியில் இராணுவ சோதனை சாவடி மற்றும் பாஸ் வழங்கும் அலுவலகங்கள் அப்பகுதியில் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் நீதிமன்ற கட்டு காவல் பொருட்கள் சேமிக்கப்பட்டு […]

ஏறாவூர்பற்று புலையவெளியில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் வியாழக்கிழமை (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது 48) மற்றும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது 43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது – தமிழ்ச்செல்வி செல்வகுமார் […]

பல்பொருள் அங்காடி மீது தாக்குதல்: 4 பேர் கைது

ஹட்டனில் நகர சபையின் அனுமதியின்றி திறப்பட்ட பல்பொருள் அங்காடி மீது மாலை தாக்குதல் மேற்கொண்ட குற்றத்திற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் நகரில் நேற்று(28) அனுமதியின்றி திறக்கப்பட்ட பல்பொருள் அங்காடியை ஆராய்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வருமான வரி அதிகாரிகள் எதிர்வரும் நகர சபை கூட்டம் வரை கடையை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து, மாலை வேளையில், மூடி வைக்கப்பட்டிருந்த கடையின் […]

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் நாட்டிற்கு வருகை?

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்க, கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் நாட்டிற்கு வருகை தரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ தெரிவித்தார். ‘டித்வா’ புயலுக்குப் பின்னரும் IMF வேலைத்திட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில், நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய […]

ஜூலையில் நாமலுக்கு எதிரான பணமோசடி வழக்கு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (29) இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான நாமல் ராஜபக்ச உட்பட நான்கு சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது, இந்தச் சம்பவம் தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என […]

விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெராவை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01 ஆம் திகதிகளில் கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஜனவரி 31 (சனிக்கிழமை) மற்றும் பெப்ரவரி 01 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்களிலும் மாலை 06:30 மணி முதல் பெரஹெரா நிறைவடையும் வரை இந்தப் போக்குவரத்து ஒழுங்குகள் அமுலில் இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரஹெரா காலப்பகுதியில் […]

கொழும்பின் புறநகர் பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட யுவதி : திருமணமான காதலன் கைது

கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானை சயுர அடுக்குமாடி குடியிருப்பில் 24 வயதுடைய யுவதியை கொடூரமாக கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் நேற்று அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ, குடா வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த ஹேஷலா காவிந்தி சில்வா என்ற 24 வயதான யுவதி துடைப்பத்தாலும், கைகளாலும், கால்களாலும் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியை பிரிந்து வாழும் திருமணமான சந்தேக நபர் கடந்த 8 […]

மயக்க மருந்து கொடுத்து வங்கி ஊழியரிடம் கொள்ளையிட்ட நபர் கைது

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி, அவர்கள் நினைவிழந்த பின்னர் அவர்களிடமிருந்த பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபரொருவரைப் பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். டிக்டொக் சமூக ஊடகத்தின் ஊடாக நண்பரான தனியார் வங்கி உதவியாளர் ஒருவரை, கடந்த 19 ஆம் திகதி சந்தேகநபர் சந்திக்கச் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள முன்னணி வர்த்தகத் தொகுதியொன்றில் அமைந்துள்ள உணவகத்தில் இவ்வாறு சந்தித்துள்ளதுடன், பின்னர் சந்தேகநபர் குறித்த நபருக்கு இரகசியமாக […]