மாமுனை சந்தியில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மாமுனை சந்தி பகுதியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று(29.1.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மருதங்கேணியில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த குறித்த வாகனம் மாமுனை சந்தி பகுதியில் நிறுத்தி இருந்த வாகனத்தின் மீது மோதி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது வாகனத்தில் பயணித்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பாக விசாரணைகளை […]
ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (29) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தக் கோரியும் அந்தப் பகுதியில் இயங்கி வரும் கோழித்தீன் தொழிற்சாலையின் துர்நாற்றம் தொடர்பாகவும் எதிர்ப்பு தெரிவித்து மஜ்மா நகர் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடாத்திய மக்களிடம் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு குறித்த விவகாரம் […]
நாளை ஆரம்பிக்கிறது இருபதுக்கு – 20 தொடர்!

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது பல்லேகலவில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. ஒரு வாரத்தில் உலகக் கிண்ணம் ஆரம்பிக்க முன்னர் இரண்டு அணிகளும் தமது பதினொருவர் அணியை உறுதிப்படுத்த இத்தொடரின் மூன்று போட்டிகளும் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையைப் பொறுத்த வரையில் மீண்டும் வந்துள்ள டெஸ்ட்களுக்கான அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவிடமிருந்து துடுப்பாட்டத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுவதோடு, சரித் அசலங்கவிடமிருந்தும் ஓட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கமாக ஜொஷ் டொங்கின் இருபதுக்கு […]
பளையில் விபத்து; சோரன்பற்று பெண் பலி

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை நகர் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி என்கின்ற 63 வயதுடைய பெண் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது. டிப்பர் வாகனத்தின் ஓட்டுநர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹற்றன் – நுவரெலியா வேன் கவிழ்ந்து சிறுவன் காயம்

ஹற்றன் -நுவரெலியா பிரதான வீதியில், திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளயார் தோட்டத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (29) முற்பகல் 9மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான வேன் கண்டி பகுதியில் வந்தது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வாகனத்தை தந்தை செலுத்தி வந்துள்ளார். அவருடன் அவரது மூன்று பிள்ளைகளும் பயணித்துள்ளனர். விபத்தில் வாகனத்தில் பயணித்திருந்த ஒரு சிறுவன் காயமடைந்த நிலையில், பிரதேச மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, கொட்டகலை பிரதேச […]
சென்னையில் ஆபாச தகவல் அனுப்பியவரை வீதியில் தாக்கிய துணை நடிகை

சென்னையில் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய நபரை துணை நடிகை ஸ்ரீ அஸ்வினி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை நடிகை ஸ்ரீ அஸ்வினிக்கு இன்ஸ்டாகிராமில் மணிகண்டன் என்பவர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை பார்த்து கடுப்பான ஸ்ரீ அஸ்வினி குறுஞ்செய்தி அனுப்பிய உணவக ஊழியர் மணிகண்டன் என்பவரை உணவகத்திற்கு நேரிலே சென்று நடுரோட்டில் வைத்து அடித்து அவரை காவல்துறையில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இங்கிலாந்துக்கெதிரான இலங்கைக் குழாமில் துஷார, கமிந்து இல்லை?

இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் நுவான் துஷார, கமிந்து மென்டிஸ், துஷான் ஹேமந்த ஆகியோர் இடம்பெறவில்லை. இந்நிலையில் இக்குழாமில் பவன் ரத்னாயக்க இடம்பெற்றுள்ளார். குழாம்: தசுன் ஷானக (அணித்தலைவர்), பதும் நிஸங்க, கமில் மிஷார, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்னாயக்க, டுனித் வெல்லலாகே, வனிது ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரண, […]
புத்தளத்தில் சிறுமியை வன்புணர்ந்த போதகருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை

த்தளம் மாவட்டம், கொட்டுகச்சியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணிபுரியும் போதகர் ஒருவர், 15 வயது சிறுமியுடன் பழகி, பின்னர் கடவுளுக்கு சேவை செய்ய அழைத்த பின்னர் அவளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) அன்று உறுதி செய்தது.
வீடொன்றில் பரவிய தீயில் முதியவர் கருகி உயிரிழப்பு!

வேயாங்கொடை – பத்தலகெதர பகுதியில், வீடொன்றில் வியாழக்கிழமை (29) அன்று அதிகாலையில் பரவிய தீயில் சிக்குண்டு 73 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மொரட்டுவத்த, பத்தலகெதர பகுதியைச் சேர்ந்த முதியவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். தீ பரவல் ஏற்பட்டபோது முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளதாகவும், தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
45 இலட்சம் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சுமார் 45 இலட்சம் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற ஒருவர் இன்று வியாழக்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம், கல்பிட்டியைச் சேர்ந்த 43 வயதுடைய மீனவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வியாழக்கிழமை (29) அன்று Gulf Air விமானம் G.9-587 மூலம் ஷார்ஜாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார். சந்தேக நபர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் இருந்து 30,000 […]