சிவில் பாதுகாப்பு படையின் தீர்மானம்

சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பொலிஸ் துறைக்குச் சிவில் பாதுகாப்புப் படையிலிருந்து சுமார் 10,000 பேரை இணைத்துக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் சிவில் பாதுகாப்புப் படையின் […]

இலங்கைக்கு தென் கிழக்காக கீழ் வளிமண்டல தளம்பல்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக கீழ் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று உருவாகியுள்ளது என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக நாளை(30.01.2026) காலை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பின்னர் நாளை முற்பகல் அளவில் இது பரவலடைந்து ஊவா மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் விரிவடையும். நாளை மறுதினம் (31.01.2026) இது கிழக்கு மாகாணம் முழுவதும் பரவலடைந்து கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் […]

சிறுவர்கள் பிரான்ஸில் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. தற்போது இந்த சட்டமானது, செனட் சபை அனுதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் வருகிற செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இது அமலுக்கு வரும். இது தவிர, உயர் தர பாடசாலைகளிலும் கையடக்க தொலைப்பேசி பயன்படுத்த முழுமையாக தடை விதிக்க இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது. அவுஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக இத்தகைய கடுமையான […]

எட்டு ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியப் பிரதமர் ஒருவர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானியப் பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் உலகளாவிய பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பீஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் த பீப்பிள்’ மண்டபத்தில் 80 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே “ஆரோக்கியமான மற்றும் நிலையான” உறவை வளர்க்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பிரித்தானியாவின் புகழ்பெற்ற […]

காலி சிறைச்சாலைக்குள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையில் தகராறு!

காலி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தகராறு செவ்வாய்க்கிழமை (27) இரவு ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவர்களான “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகாக்களுக்கும் “அகமிபொடி அஜித்” என்பவரின் சகாக்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகா ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கல்வித் துறையில் முன்பள்ளி ஆசிரியர்களின் சேவை தர நிர்ணயம் – அமைச்சர் சரோஜா போல்ராஜ்

முன்பிள்ளைப்பருவ கல்வித் துறையில் முன்பள்ளி நிலையங்களின் பௌதீகக் கட்டமைப்புக்களைத் தரப்படுத்துவதுடன், முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையைத் தரநிர்ணயம் செய்து, அதனை மிகவும் வினைத்திறனான சேவையாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்ட முன்பிள்ளைப்பருவ சிறுவர் பராமரிப்பு மற்றும் மேம்பாடு குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை (29), மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜின் தலைமையில் சபரகமுவ மாகாணசபை […]

22 கோடி ரூபாய் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்லதே பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் இன்று (29) காலை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது 04 கிலோகிராம் கொகைன் மற்றும் 3450 போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொல்லதே பகுதியில் வசிக்கும் 48 வயதுடைய பெண் ஆவார். சம்பவம் […]

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு; நாளை கையெழுத்திடும் நடவடிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை நாளை (30.01.2026) இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், அடிப்படைச் சம்பளம் 1,350 ரூபாயிலிருந்து 1,550 […]

நிருபமா ராஜபக்சவின் செயற்பாட்டால்: பதவி விலகிய விமானப்படை அதிகாரி

நிருபமா ராஜபக்ச ஜப்பான் மாகாநாயக்க தேரர் ஒருவருக்கு வழங்கிய விமான நிலைய விசேட பாஸ் ஒன்றை புதுப்பிக்க தவறிய சிக்கலில் விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து (இலங்கை) லிமிடெட்டின் தலைவர்,ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான ஹர்ஷ அபேவிக்ரம நேற்று (28.01.2026) பதவி விலகியுள்ளார். முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலங்கை பௌத்த பிக்குவும் ஜப்பான நாட்டின் இலங்கைக்கான சங்க நாயக்க ஒருவருக்கு வெளிநாடு செல்லும் போது எவ்வித பரிசோதனை நடவடிக்கையும் இல்லாமல் செல்வதற்கு அன்றைய அரசில் […]

மக்களின் உரிமையை நோக்கிச்சென்ற இலங்கை தமிழரசுக்கட்சி இப்போது பதவிக்கும் கதிரைக்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றது – கந்தசாமி பிரபு

தமிழ் மக்களின் உரிமையை நோக்கிச்சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியானது இன்று பதவியாசைக்கும் கதிரைப்போட்டிக்குமான கட்சியாக மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். இன்று(29.01.2026) களுவாஞ்சிகுடியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற குழத்தலைவர் சிறிதரனுக்கு எதிராக தங்களது கட்சிக்குள்ளே குழப்ப நிலையினை ஏற்படுத்திக் கொண்டு அவரை அரசியலமைப்பிலிருந்து விலகவேண்டும் என்ற விடயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற குழுக்களின் […]