இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவது தொடர்பான கூட்டம்!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வர்த்தகச் சபை மற்றும் […]

பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களையும் திறன்களையும் சரியாக இனங்காண்பதற்கு பழைய கல்வி முறை போதுமானதாக அமையவில்லை

பழைய கல்வி முறையானது பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களையும் திறன்களையும் சரியாக இனங்காண்பதற்கு போதுமானதாக அமையவில்லை எனத் தொழில் துறை பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். தற்போதய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக இந்த நிலைமையைத் தகுந்த முறையில் சீர்செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை (28) நடைபெற்ற தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த உயர் டிப்ளோமா […]

பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வராவிட்டால் சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் பாரிய போராட்டம் – சமன் ரத்னப்பிரிய

சுகாதாரத்துறை எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வராவிட்டால், சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து பாரிய தொழிந்சங்க போராட்டத்துக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தாதியர்களின் சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை (29) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அரச வைத்தியர் அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று வைத்திய […]

கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பம் கோரல்

2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக, தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களை ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவமானது, 2026.01.21 ஆம் திகதியிடப்பட்ட 2472/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமையத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன், கட்சியின் செயலாளரின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தை, தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமாகவோ […]

சுயவிருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தேவைப்படின் எதிர்வரும் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை மீளப் பெற விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.எஸ்.ஐ. குமார, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை அறிவித்துள்ளார். வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட இலக்கம் MOE/SRS/VRS/28 மற்றும் 2025.11.14 திகதியிட்ட கடிதத்திற்கு அமைய, 2025 ஒக்டோபர் 27 […]

தொழிலதிபர் கைது

பணமோசடிக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ஒரு தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 (1) (b) இன் கீழ் பணமோசடி குற்றத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, சந்தேக நபர் தனக்கு சட்டப்பூர்வமாக வர வேண்டியிராத 30 மில்லியன் ரூபாயை, சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து […]

சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமியை காணவில்லை?

மீகஹகொடுவ அரச தடுப்பு காவல் மையத்திலிருந்து (சிறுவர் இல்லம்) காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மயூமி பிரார்த்தனா என்ற சிறுமி, ஜூலை 14, 2025 அன்று சிலாபம் பொலிஸாரால் முதலில் காவலில் எடுக்கப்பட்டு, சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சிலாபம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 17, 2025 அன்று அவர் மீண்டும் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காணாமல் போன சிறுமி எண் […]

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியிலிருந்து விலகிய ஸ்டேர்லிங்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியுடனான தனது ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் இணக்கத்தை ரஹீம் ஸ்டேர்லிங் எட்டியுள்ளதாக கழகம் புதன்கிழமை (28) உறுதிப்படுத்தியுள்ளது. இறுதியாக 2024ஆம் ஆண்டு மேயிலேயே செல்சிக்காக விளையாடியிருந்த 31 வயதான ஸ்டேர்லிங், கடந்த பருவகாலத்தில் கடனடிப்படையில் ஆர்சனலில் களித்திருந்தார். இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியிலிருந்து 2022ஆம் ஆண்டு ஸ்டேர்லிங்கை செல்சி கைச்சாத்திட்ட நிலையில் அவரது ஒப்பந்தத்தில் 18 மாதம் எஞ்சியிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்பாக; சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2025 ஒகஸ்ட் 22 அன்று கைது செய்யப்பட்டார். அந்த விவகாரம் கொழும்பு அரசியலில் தடல்புடலாக பேசப்பட்டது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றார். இந்நிலையில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பால்கனியில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இவ்வாறான நிலையில் பட்டமளிப்பு விழாவில் பங்குகொள்ளவா 16 மில்லியன் […]

இளையோர் உலகக்கிண்ணக் கிரிக்கெட்; இலங்கை அபார வெற்றி

19 வயதுக்குட்பட்ட ஒருநாள் இளையோர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 6 சுற்றில், இன்று (29) நடைபெற்ற தீர்மானமிக்க போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சிம்பாப்வேயின் புலவாயோ நகரில் நடைபெற்ற இப்போட்டியில், தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை, 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் போட்டியின் 46 ஆவது ஓவரில் கடந்து இலங்கை அணி இந்த வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியுடன் இம்முறை […]