இந்த ஆண்டு 25 நாட்களில் 155 பேர் பலி!

இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,375 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவற்றில் 147 பாரதூரமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 155 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ’பெர்ன்’ பனிப்புயல்: 17 பேர் பலி

மெரிக்காவின் பல மாநிலங்களில் வீசி வரும் கடும் பனிப்புயல், உறைபனி மற்றும் குளிர் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் வானிலை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் பனிப்புயல் தொடர்பான அனர்த்தங்களில் சிக்கி இதுவரை குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்பிற்கான துல்லியமான காரணங்களைக் கண்டறிய அதிகாரிகள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றனர். கடும் பனிப்பொழிவு மற்றும் பனி படிவங்கள் காரணமாக மின் கம்பிகள் […]

போலி விசாவில் ஸ்பெயின் பறக்க முயன்றவர் கட்டுநாயக்கவில் கைது

போலியாக தயார் செய்யப்பட்ட ஸ்பெயின் விசாவைப் பயன்படுத்தி குறித்த நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் நேற்று திங்கட்கிழமை (26) காலை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் 27 வயதுடைய பங்களாதேஷ் நாட்டவர் என தெரியவந்துள்ளதுடன் அவர் கத்தார் ஏர்வேஸ் விமானம் QR-665 மூலம் தோஹாவுக்கு புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவரது அனுமதிக்கு தேவையான ஆவணங்கள் கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளதுடன் […]

ஷிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மியூசியஸ் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றை கொள்வனவு செய்ததில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, ஊழலுக்கு எதிரான அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிடப்பட்ட உறுதிப்பத்திரத்தின் மூலம் இந்த வீடு ஷிராந்தி ராஜபக்சவின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக சிரிலிய கணக்கிலிருந்த 350 இலட்சம் ரூபாய் பணம் […]

தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு பிரதிநிதி நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தாலும் கொழும்பு உயர்நீதிமன்றத்தாலும் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று(26) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களின் தீர்ப்புகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பரிசீலனை செய்வதற்காக அந்த மனுக்கள் இன்று மீண்டும் அழைக்கப்பட்ட போது, சட்டமா அதிபரை பிரதிநிதித்து ஆஜரான மேலதிக சொலிசிட்டர் […]

மழையுடனான காலநிலை!

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 – 40 km வேகத்தில் அடிக்கடி […]

ஈஸ்டர் தாக்குதல்; குற்றவியல் ரீதியாகக் கடமையைப் புறக்கணித்த குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாகக் கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மார்ச் 23 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (26) உத்தரவிட்டது. இதற்கு முன்னர் இவ்வழக்கு மூவர் […]

ஓய்வூதிய கொடுப்பனவை இரத்து செய்தால் பின்விளைவுகள் பெரிதாகும்!

1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் பாராளுமன்றத்துக்கு முன்பாக இருந்து ஐந்து ரூபா கடன் பெற்றார்கள். இதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்தால் அரசியல்வாதிகள் தமது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு […]

நெல் சந்தைப்படுத்தல்; முல்லைத்தீவில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

நெல் சந்தைப்படுத்தல் சபையினர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவில் நெல் சந்தைப்படுத்தல் சபை 28ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் நெல் கொள்வனவினை நியாயமான விலையில் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இதன்மூலம் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நியாயமான முறையில் விற்பனை செய்ய முடியும். அந்தவகையில் வெள்ளை, சிவப்பு நாட்டரிசி – கிலோ120, சிவப்பு, வெள்ளை சம்பா -கிலோ130, கீரிசம்பா கிலோ-140, ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்பட இருக்கின்றது. அத்தோடு கொள்வனவு செய்யப்படும் நெல் ஈரப்பதன் […]

தமிழ் மக்களுக்கு விரோதமான கிவுள்ஓயா திட்ட போராட்டத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் பங்கேற்குமா?

கிவுள்ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு அமைவாக நேற்றைய தினம் பொது அமைப்புகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்றது. எனினும் குறித்த சந்திப்பில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, சிறிடெலோ கட்சியின் சார்பில் ஒருவரும் கலந்து கொண்டதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் […]