இந்தியாவிற்குச் சென்ற நாமலுக்கு அழைப்பாணை

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியா சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று காலை 9.30 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர். நாமல் இந்தியா சென்றிருப்பதனை அறிந்தே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இந்த அழைப்பாணையானது நேற்று காலை 9.50 மணியளவிலேயே தங்காலை […]

நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!

முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை போதைப்பொருள் பாவித்த நிலையில் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக, நடமாடும் ஆய்வக வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த அந்த நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் யு. சி. பி. பெரேரா, இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் மாதங்களில் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் குறிப்பிட்டார். முன்னோடித் திட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 57 பயணிகள் […]

விபத்தில் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழப்பு

மொரந்துடுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் எகொட உயன பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியான உதவி பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது; அரசாங்கத்தின் மீது சஜித் கடும் தாக்கு!

6 ஆம் தர பாடத்திட்டச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுக்க அரசாங்கம் தவறியுள்ளதால், இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (26) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: 6 ஆம் தரத்திலிருந்து கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என இலட்சக்கணக்கான பெற்றோர்களும் பிள்ளைகளும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இதனை ஒத்திவைத்துள்ளதன் காரணமாக அவர்களின் எதிர்பார்ப்புகள் […]

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்; இலங்கை இளையோர் அணி வெற்றி

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நமீபியாவின் வின்ட்ஹோக் நகரில் நேற்று (26) நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முக்கிய விபரங்கள் வருமாறு: நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணியின் தலைவர் விமத் தின்சர முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை வீரர்களின் […]

தோட்ட முகாமையாளர் மன்னிப்புக் கோரினார்

ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட லெதன்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில், இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகத் தீர்வினைப் பெறும் நோக்கில் நேற்று (26) ஹட்டன் தொழில் திணைக்களத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், ஹட்டன் பிராந்திய சிரேஷ்ட பணிப்பாளர் விஸ்வநாதன், தோட்ட முகாமையாளர் மஞ்சுல சமரகோன், பிரதி முகாமையாளர் ரத்வத்த மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மால்ப்ரோ தோட்டத்தின் பிரதி முகாமையாளர், […]

கடந்த ஆண்டில் இலஞ்ச ஊழல்; 84 பேர் கைது

கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 130 சுற்றிவளைப்புகளில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கைதுகளில் அதிகப்படியானோர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களாவர்; அந்த எண்ணிக்கை 30 ஆகும். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் 13 […]

கனடாவின் முன்னாள் அமைச்சர் கிற்ஸ்டி டங்கன் காலமானார்

முன்னாள் லிபரல் அமைச்சரான கிற்ஸ்டி டங்கன், புற்றுநோயுடன் பல ஆண்டுகளாக போராடிய 59 வயதில் காலமானார். 1966 அக்டோபர் 31 அன்று பிறந்த டங்கன், 2008 முதல் 2025 வரை டொரோண்டோவின் எட்டோபிகோக் நார்த் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் லிபரல் எம்.பியாக ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசின் முதல் காலகட்டத்தில், அவர் அறிவியல் மற்றும் விளையாட்டு அமைச்சராகவும், குறுகிய காலத்திற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அமைச்சராகவும் அமைச்சரவையில் பணியாற்றினார். முன்னாள் விஞ்ஞானியும் விளையாட்டு […]

பனிப்பொழிவால் மூடப்பட்டிருந்த டொரோண்டோ பள்ளி வாரியங்கள் மீண்டும் திறப்பு

வார இறுதியில் பதிவான பெருமளவிலான பனிப்பொழிவு காரணமாக திங்கட்கிழமை பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், டொரோண்டோ மாவட்ட பள்ளி வாரியம் (TDSB) மற்றும் டொரோண்டோ கத்தோலிக்க மாவட்ட பள்ளி வாரியம் (TCDSB) ஆகியவை, செவ்வாய்க்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளன. பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், TDSB நிர்வாகம், பள்ளிகள் மற்றும் நிர்வாக வளாகங்களில் இருந்து பனியை அகற்றுவதற்காக தங்களது பணியாளர்களும் ஒப்பந்ததாரர்களும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, செவ்வாய்க்கிழமை மாணவர்களையும் பணியாளர்களையும் […]

கனடிய மக்களின் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க நடவடிக்கை

கனடிய மக்களின் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க உதவும் புதிய நடவடிக்கை தொடர்பில் பிரதமா் மார்க் கார்னி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக பொருட்கள் சேவைகள் வரி கொடுப்பனவு தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். குளிர்கால இடைவேளைக்குப் பிறகு பாராளுமன்றம் மீண்டும் கூடியுள்ள நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கனடா மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய நன்மை என்ற புதிய திட்டத்தை கார்னி அறிமுகப்படுத்தினார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் GST […]