ஹெரோயினுடன் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து அம்பகஸ்துவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் சிக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் அம்பகஸ்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாளை கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களும் பணிப்புறக்கணிப்பு

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், நாளை (28) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது, கதிரியக்க பரிசோதனைகள் (X-ray), CT பரிசோதனைகள், MRI பரிசோதனைகள், மார்பகப் புற்றுநோய் கண்டறிதலுக்கான மமோகிராம் (Mammogram) பரிசோதனைகள் மற்றும் சத்திரசிகிச்சை கூடங்களில் கதிர்வீச்சை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகள் அனைத்தும் நாளை பாதிக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம தெரிவித்தார். கடந்த 21ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஒரு […]
யாழ்ப்பாணக் கோட்டை மீளமைப்பு; சுமந்திரன் ஆய்வு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. சுமந்திரன், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நேற்று (26) யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கட்டிய இந்தக் கோட்டை, பின்னர் டச்சு மற்றும் பிரித்தானியர் காலனிய ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. பல போர்களும், நீண்டகால அலட்சியமும் காரணமாக கோட்டை பெருமளவில் சேதமடைந்துள்ளது. கோட்டையின் உள்ளே அமைந்துள்ள Our Lady of Miracles (அற்புத மாதா) […]
சுகாதார பரிசோதகர்களால் ஊர்காவற்துறை கடைகளுக்கு அபராதம்

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் ஊர்காவற்றுறை பொது சுகாதார பரிசோதகர் ரா. சானுஜன் மற்றும் வேலணை பொது சுகாதார பரிசோதகர் சீ. வி. கிசோக்குமார் ஆகியோரடங்கிய குழுவினரால் கடைகள் கடந்த 22 ஆம் திகதி பரிசோதனை செய்யப்பட்டது. இதன்போது இருகடைகளில் சுகாதாரமற்ற முறையில் களஞ்சியபடுத்தப்பட்ட திகதி காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உகந்ததல்லாத பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து இரு கடை உரிமையாளர்களிற்கும் எதிராக தனித்தனியாக 34 குற்றச்சாட்டுக்கள், 13 குற்றச்சாட்டுகளுடன் நேற்று (26) ஊர்காவற்துறை […]
நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகாத ஷிரந்தி

தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் (27) பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, அங்கு முன்னிலையாவதற்காக அவர் இரண்டு வார கால அவகாசத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக, இன்றைய தினம் காலை 9 மணிக்கு பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் ‘சிரிலிய’ […]
மலையக மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவந்தவர்களை அவர்கள் இன்று ஓரம்கட்டி வைத்துள்ளனர் – கிருஷ்ணன் கலைச்செல்வி

பரம்பரை பரம்பரையாக மலையக மக்களை ஏமாற்றி வந்தவர்களை மக்கள் இன்று ஓரம்கட்டி வைத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். ஹட்டனில் திங்கட்கிழமை (26) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி மலையகத்தில் கடந்தகால அரசியலில் வாதிகளுக்கு மக்கள் முன்னுரிமை வழங்குவதில்லை இவர்களின் அரசியல் பயணம் கேல்விகுறியாக மாரியுள்ளது. கடந்த வாரங்களில் […]
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்தியர் ருக்ஷான் பெல்லன

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை முன்னிலையாகிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். கொலை மிரட்டல் சம்பவம் ஒன்று குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர் ருக்ஷான் பெல்லன, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியிலிருந்து பணிநீக்கம் செய்ய அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் மீது கத்திக்குத்து

மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைக்கவசம் அணிந்திருந்த நபரொருவர் ஆசிரியரை கத்தியால் குத்தும் காட்சிகள் வீதியில் உள்ள சி.சி.ரிவியில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் […]
ஈரான் வன்முறை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ஈரானிய ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்துள்ளதாக சர்வதேச நிதி சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடும் நாணய வீழ்ச்சி, ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி […]
வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதே செயலகத்திற்கு உட்பட்ட சுண்டிக்குளம் – பூனைத்தொடுவாயை அண்மித்த பகுதியில் கடற்தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் நேற்று (26.01.2026) நண்பகலளவில் இடம்பெற்றுள்ளது. உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள கடந்த அரசு காலத்தில் நீரியல்வள திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த அனுமதியின் பிரகாரம் உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள தற்போது நீரியல்வளத் திணைக்களத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்களும், […]