தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பெப்ரவரி முதல் சம்பள அதிகரிப்பு

தோட்டங்களில் பணிபுரியும் மக்கள் ஒரு நாளைக்கு 1,750 ரூபாய் சம்பளத்தை பெறுவார்கள். இந்த மாதம் பெப்ரவரி 10ஆம் திகதி அந்த சம்பளம் கிடைக்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இதை மேலும் அதிகரிக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஆனால் இது இலங்கையில் முதல் முறையாக நடக்கிறது. இந்த 400 ரூபாய் நாளாந்த சம்பள உயர்விலிருந்து 200 ரூபாவை ஏற்க அரசாங்கம் முடிவு செய்தது. டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ […]

மத்துகம பெண் கொலை: சந்தேகநபருக்கு வலை

மத்துகம காவல் பிரிவின் டோல ஹேன பகுதியில் 18.04.2025 அன்று கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து 34 வயதுடைய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து மத்துகம காவல் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றம் தொடர்பான உண்மைகள் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன, மேலும் மேற்படி குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை […]

கடந்த 10 வருடகால பகுதியில் 16-22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றச் செயல்கள் அதிகரிப்பு!

கடந்த 10 வருடகால பகுதியில், 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள் அதிகரித்துள்ளதாக சட்ட உளவியல் விசேட வைத்திய நிபுணர் தாரக பெர்னாண்டோ தெரிவிக்கின்றார். இது தற்போது எமது நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், உலகம் முழுவதிலும் இந்த நிலைமையை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய மனநல நிறுவகம் 100 ஆண்டுகளை பூர்த்தி செய்வதை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியர் தாரக பெர்னாண்டோ இதனைத் […]

தாண்டிக்குளம் தண்டவாளத்தில் ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்!

வவுனியா தாண்டிக்குளம் தண்டவாளத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வவுனியா தாண்டிக்குளம் ரயில் கடவையில் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியுள்ளது. விபத்தில் கிடாச்சூரி சாஸ்திரிகூழாங்குளத்தை சேர்ந்த அல்பிரட் ஜெயராஜ் திலகவதி (வயது – 52) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பான […]

வாட்ஸ்அப்பில் – விளம்பரங்கள்

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் செல்போனில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்றிருப்பது வாட்ஸ்அப் தான். உலக முழுவதும் 3 பில்லியன் பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பும் வசதியுடன் அறிமுகமான வாட்ஸ்அப், நாளடைவில் புகைப்படங்கள், கோப்புகள், வீடியோ உள்ளிட்டவற்றையும் பகிரும் வசதியை அறிமுகம் செய்தது. வாட்ஸ்அப்பில் குழு அரட்டை, ஸ்டேட்டஸ் என புதுப்புது வசதிகள் கொண்டு வரப்பட்டன. இதனால் எத்தனை நிறுவனங்கள் போட்டிக்கு வந்தாலும் வாட்ஸ்அப் […]

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு இ.தொ.கா எதிரானது அல்ல: ஜீவன்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கு இ.தொ.கா ஒருபோதும் எதிரானது அல்ல எனத் தெரிவித்த காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், யார் அரசாங்கத்திற்கு வந்தாலும், அவர்களின் நோக்கமும் செயற்பாடுகளும் மக்களுக்குச் சாதகமாக இருந்தால் முழுமையான ஆதரவை வழங்குவோம் தவறுகள் இருந்தால் ஆலோசனைகளை முன்வைப்போம் என்றார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்ட தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் நுவரெலியா மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களில் திங்கட்கிழமை (26) அன்று நடைபெற்றது. இ.தொ.கா பொதுச் செயலாளரும் […]

அதிமுக கூட்டணி குறித்து டிடிவி தினகரன் விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணியில் இணைவது குறித்து செங்கோட்டையன் தனக்கு விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் தான் அதிமுக கூட்டணியில் இணைந்ததால் அவர் தயக்கம் காட்டியதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுக கூட்டணியில் இணைந்தது ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கத்திற்காகவே என்றும், தனக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றும், அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் ஒன்றிணைந்துவிட்டதாகவும் […]

இந்தியா – ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நேற்று(ஜன. 26) கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ’அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என குறிப்பிடப்படும் இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். “நேற்று(ஜன. 26) ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை மக்கள் ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் […]

ஜப்பான் கடல்பகுதியில் வட கொரியா ஏவுகணைச் சோதனை!

ஜப்பான் நாட்டின் கடல்பகுதியில், 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி இன்று (ஜன. 27) வட கொரியா சோதனை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் தலைநகர் சியோல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் கிழக்கு கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாக, தென் கொரிய ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதேபோல், 2 பாலிஸ்டிக் ஏவுகணைக் கண்டறிந்ததாகவும், அவை ஏற்கெனவே கடலில் விழுந்திருக்கக் கூடும் எனவும் ஜப்பானின் கடலோரக் காவல்படை அறிவித்துள்ளது. இந்தச் சோதனையானது துல்லியமான தாக்குதல் திறன்களை மேம்படுத்துதல் மட்டுமின்றி அமெரிக்கா […]

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் ஜன நாயகன் வெளிவராது?

தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் தேர்தலுக்கு முன்னர் திரைக்கு வருமா? சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை அளித்திருக்கும் தீர்ப்பு காரணமாக, இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் மேலும் சிக்கலாகியிருக்கின்றது! கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஜன நாயகன் படத்தின் […]