கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்துக்கு கடும் குளிர் மற்றும் பனிக் காற்று எச்சரிக்கை

இன்று செவ்வாய்க்கிழமை கனடாவின் வாட்டர்லூ பிராந்தியம், குவெல்ஃப் மற்றும் வெல்லிங்டன் கவுண்டி பகுதிகளில் கடும் குளிர் மற்றும் பனியைத் தூக்கும் வலுவான காற்று காரணமாக இரண்டு வானிலை எச்சரிக்கைகள் அமலில் உள்ளன. செவ்வாய்க்கிழமை வெப்பநிலை –10°C-ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் காற்றின் தாக்கம் (wind chill) காரணமாக பிற்பகலில் –20°C வரை காலநிலை மாற்றம் பெறும். என்விரோன்மெண்ட் அண்ட் கிளைமேட் சேஞ்ச் கனடா வெளியிட்ட எச்சரிக்கையில், இவ்வளவு கடும் குளிர் நிலவும்போது சிறு குழந்தைகள், முதியவர்கள், […]

கனடா – கேன்மோர் நீச்சல் குளத்தில் சுவாசப் பிரச்சினை: 11 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

கனடா கேன்மோர் இன் அண்ட் ஸூட்ஸ் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 11 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவசர சுகாதார சேவைகள் (EHS) தெரிவித்தன. கேன்மோர் தீயணைப்பு-மீட்பு பிரிவுக்கு ஆபத்தான இரசாயனங்கள் தொடர்பான (ஹாஸ்மாட்) அழைப்பு வந்ததாக கேன்மோர் நகராட்சி தெரிவித்தது. அதன் பின்னர் அவர்கள் அங்கு விரைந்த போது நீச்சல் குளப் பகுதியில் சுமார் 30 குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட உடல்நலக் குறைவு அறிகுறிகளுடன் இருப்பதை மீட்புப் பணியாளர்கள் […]

பணிப்புறக்கணிப்பை ஒத்திவைத்தது கதிரியக்க சங்கம்

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தினால் நாளை (28) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கப்படவிருந்த இந்தத் தொடர் பணிப்புறக்கணிப்பை 48 மணித்தியாலங்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்ததாக அந்தச் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார். சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார பிரதி அமைச்சருக்கும் இடையில், பணிப்புறக்கணிப்பிற்கான காரணங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமையவே இந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை […]

குளவி கொட்டியதில் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு

மாங்குளத்தில் குளவி கொட்டியதில் அரச உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 03 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் பாடசாலை மாணவர்கள் பாடசாலை விட்டு திரும்பிக் கொண்டிருக்கையில் பழைய கொலணி பகுதியில் குளவி கூடு கலைந்து வீதியால் சென்றவர்களை குளவிகள் தாக்கின. இதில் துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றும் ஆரம்ப பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்ரனி ஜோர்ஜ் என்ற அரச உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் […]

சம்பள உயர்வு குறித்து அமைச்சர் விளக்கம்

வைத்தியர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன், 2027 ஆம் ஆண்டில் இதற்காக 330 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் அமைச்சர் வெளிப்படுத்தினார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்: […]

பனிப்புயலின் போது தனியார் விமானம் கவிழ்ந்து தீப்பற்றியதில் 7 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வடகிழக்கு மாகாணமான மெய்னே(Maine) மாநிலத்தில் கடுமையான பனிப்புயலின் போது தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் இருந்தனர். ஓடுபாதையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து 45 வினாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விழுந்து தீப்பற்றியது. இந்தக் கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் […]

இலங்கையில் முதல் தடவையாக சிறார்கள் பங்குபற்றும் கோப்பா சிம்ஹா கால்பந்தாட்டத் திருவிழா

லங்கா ஸ்போர்ட்ரைசன் நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூர், சிங்ககப் (SingaCup) பிறைவேட் லிமிட்டெட் ஏற்பாடு செய்துள்ள 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான அங்குரார்ப்பண கோப்பா சிம்ஹா (சிங்க கிண்ணம்) கால்பந்தாட்டத் திருவிழா கொழும்பில் நடத்தப்படவுள்ளது. இந்தக் கால்பந்தாட்ட திருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நடத்தப்படும். இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள சிறார்களின் கால்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் குறிக்கோளுடன் இலங்கையில் முதல் தடவையாக 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோப்பா சிம்ஹா கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படுவதாக சிங்கப்பூர் சிங்ககப் பிறைவேட் லிமிட்டெடின் முகாமைத்துவப் […]

திருகோணமலையில் காணாமல் போன மாணவன் நிட்டம்புவையில் மீட்பு

​திருகோணமலையில் திங்கட்கிழமை (26) அன்று முதல் காணாமல் போயிருந்த 17 வயதுடைய மாணவன் எம்.எல். முன்சித், கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் நிட்டம்புவ பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி ஒருவரின் மகனான குறித்த மாணவன் பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து ​வெளியேறிய நிலையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்தார். சமுத்திரகம பகுதியில் குறித்த மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்கப்பட்டதுடன் பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கடத்தல் காரர்களிடமிருந்து […]

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் 6 வழக்குகளும் தள்ளுபடி

நிகழ்நிலை காப்புப் சட்டத்தின்கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆறு வழக்குகள் நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் செவ்வாய்க்கிழமை (27) அன்று தள்ளுபடி செய்யப்பட்டன. முகநூல் சமூக வலைத்தளத்தில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஆறு வழக்குககள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன். அந்த ஆறு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் எதிராளிகள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகள், இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான், சப்ரின் சலாகுதீன் ,எம்.ஐ. இயாஸ்டீன், ஹனிபா பசில், ஜெசிம் ஆகியோ​ர் […]

ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம்

ஜனாதிபதி செயலகம் முன் பாடசாலை மேம்பாட்டு அதிகாரிகள் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை (27) நிறுத்துவதற்கு பொலிஸார் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே சென்றதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கத்தின் பல அதிகாரிகள் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏனைய உறுப்பினர்கள் அந்த இடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அறிக்கைகளின்படி, உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிய பொலிஸாரின் அறிவிப்பையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கும் […]