செட்டிகுளத்தில் விபத்து; நால்வர் படுகாயம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து ஜீப் ரக வாகனமும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது. குறித்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த விபத்தானது வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப […]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் விஜயம்!

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். குறித்த விஜயத்தினை அவர் நேற்றையதினம்(26.1.2026) மேற்கொண்டுள்ளார். கடந்த இரு நாள்களாக வடக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் நேற்று காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் […]
மன்னார் – திருக்கேதீஸ்வரம் மஹா சிவராத்திரி; முன்னாயத்த நடவடிக்கைகள்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெற உள்ள மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தரவுள்ளனர். இதனால் பக்தர்கள் நலன் கருதி சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாயத்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று […]
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா; கலந்துரையாடல்!

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், இன்று செவ்வாய்க்கிழமை (27) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள வருடாந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக, அதற்கான நிதி விடயங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் குறித்த […]
வட்டுக்கோட்டையில் பொலிஸாருக்கு மதுபானம் விற்க முயன்றவர் கைது!
வட்டுக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்தபோதே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எம்.எச். புத்திக்க சிறிவர்தனவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சான்றுப் பொருட்களுடன் வட்டுக்கோட்டை […]
நாளை ஜனவரி மாத நலன்புரித் திட்டக் கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் நாளை (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 1,415,584 பயனாளி குடும்பங்களுக்கு 11,234,713,750.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. அத்துடன், அஸ்வெசும முதலாம் […]
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுனாமிவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (27) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த விபரங்கள் வருமாறு: அம்பலாங்கொடை, சுனாமிவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வின் போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் அங்கிருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த நபர், […]
தரமற்ற நிலக்கரிப் பிரச்சினை

தரமற்ற நிலக்கரி காரணமாக நாட்டின் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மின் உற்பத்தி இழப்பை ஈடுசெய்வதற்கு, களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்நிலையத்தை இயக்க வேண்டும் என வலுசக்தி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்நிலையம் மூலம் 165 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்ததாக உள்ளதால், தற்போது தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்கக்கூடிய மின்சாரத்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தரவு அறிக்கைகளை மேற்கோள் காட்டி வலுசக்தி நிபுணர் […]
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் 60 வரையான காணி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (27) முன்னெடுத்தனர். புதுக்குடியிருப்பு, கோம்பாவில் கிராமசேவையாளர் பிரிவு மற்றும் தேவிபுரம், அ., ஆ.பகுதி மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது […]
நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் பதவி: மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

கடந்த 8 மாத காலப்பகுதியில் நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்க முடியாமை மற்றும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் இதுவரை எவரும் நியமிக்கப்படாமை காரணமாக, பல்வேறு தரப்பினர் அரச நிதி மேலாண்மை குறித்து சர்ச்சைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை சமூகமயப்படுத்த சில தரப்பினர் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி […]