மலையக சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்

வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2026.01.18 அன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது மலையக பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது கல்முனை பகுதியில் உள்ள […]

டிட்வாவால் சேதமடைந்த வீதியில் விபத்து

​கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அரை ஏக்கர் பகுதியில் அமைந்துள்ள உப்பழத்து வீதியில் செங்கல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியில் காணப்பட்ட பாரிய பள்ளம் ஒன்றினுள் உழவு இயந்திரத்தின் பெட்டி சடுதியாக வீழ்ந்தமையே இந்த விபத்துக்குக் காரணமாகும்.​ கட்டுமானப் பணிகளுக்காக செங்கற்களை ஏற்றி வந்த குறித்த உழவு இயந்திரம், உப்பழத்து வீதியூடாகப் பயணித்த போது, அங்கு புனரமைக்கப்படாமல் இருந்த பள்ளத்தில் சிக்கியது. இதனால் உழவு இயந்திரத்தின் பெட்டி ஒரு பக்கமாகச் சரிந்து விபத்துக்குள்ளானது. […]

சர்வதேச நிதி நிறுவனம் தனியார் துறைக்காக 166 மில்லியன் டொலர்

சர்வதேச நிதி நிறுவனம் (IFC) இலங்கையின் தனியார் துறைக்காக 166 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இலங்கை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் இருந்து நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையிலுள்ள மூன்று முக்கிய தனியார் வங்கிகள் இந்த நிதியை விநியோகித்துள்ளது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (NTB) 50 டொலர் மில்லியன் கடன் மற்றும் 20 டொலர் மில்லியன் வர்த்தக நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற […]

அமைச்சரின் பெயரை வைத்து பாரிய மோசடி

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, தன்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களிடம் பணம் கோரும் மோசடி நபர் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பொது பதிவில், தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பொய்யாகக் கூறி நிதி உதவி மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவது குறித்து மறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பணம் அல்லது முக்கியமான தனிப்பட்ட விபரங்களை தெரியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் […]

இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் தரமற்ற நிலக்கரி?

சமூகத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலக்கரித் தொகுதி தொடர்பில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில், தேவையான கிலோ கலோரி அளவில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். களுத்துறையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியதோடு, அதற்கமைய சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அபராதம் அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, “கொள்முதல் நடவடிக்கையில் எந்தப் பிரச்சினையும் […]

மூடப்பட்டிருந்த பாடசாலை ஒன்றை மீளத் திறக்க பரிந்துரை

மண்சரிவு அபாயத்தால் மூடப்பட்டிருந்த பாடசாலை ஒன்றை மீளத் திறக்க பரிந்துரை மண்சரிவு அபாயம் காரணமாக சுமார் 02 மாதங்களாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி அனுருத்த குமார ஆரம்பப் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான பரிந்துரையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நேற்று(25) வழங்கியுள்ளது. கடந்த நவம்பர் 27 ஆம் திகதி நிலவிய சீரற்ற வானிலையுடன், இப்பாடசாலைக்கு மேலே அமைந்துள்ள ஸ்ரீ கவீஷ்வர வேலுவனாராம விகாரையின் பாதுகாப்பு மதில் மண்சரிவுக்கு உள்ளானது. இதன் காரணமாக, NBRO […]

இந்திய பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான “வராஹா” (Varaha) மற்றும் “அதுல்யா” (Atulya) ஆகிய கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதோடு, இலங்கை கடற்படையினரால் கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைவாக வரவேற்கப்பட்டன. 96.2 மீட்டர் நீளமான கடல்சார் ரோந்துக் கப்பலான “வராஹா” கப்பலானது, கட்டளை அதிகாரி அஷ்வினி குமாரினால் வழிநடத்தப்படுகிறது. 50 மீட்டர் நீளமான வேக ரோந்துக் கப்பலான “அதுல்யா” கப்பலானது, கட்டளை அதிகாரி அனித் குமார் மிஸ்ராவினால் வழிநடத்தப்படுகிறது. இக்கப்பல்கள் இலங்கை கடலோர காவல்படையினருடனான பயிற்சிகளில் […]

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சௌமிய தான யாத்திரை திட்டத்தின் கீழ் உலர் உணவு

‘சௌமிய தான யாத்திரை’ திட்டத்தின் கீழ், பெருந்தோட்ட பகுதிகளுக்கு தற்போது விநியோகம் செய்யப்படவுள்ள உலர் உணவு பொருட்களை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நேற்று (25) சென்று ஆய்வு செய்தார். பெருந்தோட்ட பகுதிகளில் ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ‘சௌமிய தான யாத்திரை’ திட்டத்தின் கீழ், இதுவரை 100 தொன்களுக்கும் அதிகமான உலர் உணவுப் பொருட்கள் வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையாக மீளாத, இயல்பு நிலைக்கு திரும்பாத மக்களுக்கு உதவிகளை […]

வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளிச் சிலைகளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன. களவாடப்பட்ட இவ்விரு சிலைகளின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் எழுவைதீவிற்கு நேரில் சென்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது […]

கனடா மார்க்கம் நகரில் தைப்பொங்கல் விழா!

மார்க்கம் நகரில் நடைபெற்ற 15-ஆவது ஆண்டு தைப்பொங்கல் விழாவில் தமிழ் சமூகத்தினருடன் இணைந்து பங்கேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. என ஒன்ராறியோவின் பிரதமர் டக் ஃபோர்ட் (Doug Ford) பதிவிட்டுள்ளார். தைப்பொங்கல் என்பது நன்றியுணர்வு, புதுப்பிப்பு மற்றும் ஒன்டாரியோ மாகாணத்திற்கு தமிழ் குடும்பங்கள் வழங்கி வரும் சிறப்புமிக்க பங்களிப்புகளைப் போற்றும் காலமாகும். இவ்விழாவை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்த ஆண்டாக அமைய என் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.