பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம் ஜனநாயகமற்றது

பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய சமிந்த குலரத்னவை பணி இடைநீக்கம் செய்தமை ஜனநாயகமற்ற செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பவுள்ளதாகவும் அவர் தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு குறிப்பிட்டுள்ளார். தண்டனை வழங்குவதற்கு முன்னர் விடயங்களை விசாரிக்கும் ஜனநாயக உரிமையை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு செயற்படாமையினால் தனிப்பட்ட பழிவாங்கல் குறித்த சந்தேகம் எழுவது சாதாரண இயல்பு என்றும், இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது ஆபத்தானது […]

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு ரணில் – சஜித் இணைவு பாதிப்பில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஓரணியில் இணைவதால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் இரு கட்சிகளின் கடந்த அரசியல் வரலாற்றையும் அவர் விமர்சித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த நாட்டை அழித்த கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளும் இணைகின்றமையால் – […]

பிரான்ஸ் ஜனாதிபதியின் அறிவிப்பு

15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை அடுத்த கல்வியாண்டு தொடங்கும் செப்டம்பருக்குள் அமல்படுத்த விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இதற்கான சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்த தனது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எங்கள் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மூளைகளும் உணர்ச்சிகளும் விற்பனைக்கு அல்ல என மக்ரான் தெரிவித்துள்ளார். அமெரிக்க தளங்களாலோ, சீன அல்கோரிதங்களாலோ கையாளப்படுவதற்கோ அல்ல என குறிப்பிட்டுள்ளார். 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களைத் […]

அலி கமேனி; சுரங்கத்தில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலால் பதற்றம்

ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடங்கலாம் என்ற சூழலில், ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி சுரங்கத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், கிட்டத்தட்ட 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இதை கண்டித்து, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவு தெரிவிக்க, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஈரானில் பொதுமக்கள் நடத்தி […]

இணையத் தடைகளை கண்டிக்கும் ஜனாதிபதியின் புதல்வர்

ஈரானில் விதிக்கப்பட்டுள்ள இணையத் தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அவர்களின் மகன் யூசுப் பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார். போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளை காட்டும் புகைப்படங்கள், காணொளிகள் பரவுவதை தள்ளிப்போடுவதால் எந்த பிரச்சினையும் தீராது என அவர் தெரிவித்துள்ளார். 2024 ஆண்டில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியானின் மகனும் அரசு ஆலோசகருமான யூசுப், டெலிகிராம் பதிவொன்றில், இணையத் தடை தொடர்வதால் மக்கள் மற்றும் அரசாங்கத்துக்கிடையிலான இடைவெளி மேலும் பெருகும் என […]

பத்ம விருதுகள் அறிவிப்பு

இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சு நேற்று அறிவித்தது. இதற்கமைய 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது, 13 பேருக்கு பத்ம பூஷன் விருது, 5 பேருக்கு பத்ம விபூஷன் விருது என 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், […]

இந்தோனேஷியா பேட்மின்டன்: சென் யுபெய் சாம்பியன்

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, சீன வீராங்கனை சென் யுபெய் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சென் யுபெய், தாய்லாந்து வீராங்கனை பிட்சமோன் ஒபாட்னிபுத் மோதினர். முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை குவித்தனர். விறுவிறுப்பாக நடந்த […]

ஒன்றிய அரசு கலாசார ரீதியாக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றது!

கலாசார ரீதியாக தமிழர்கள் மீது ஒன்றிய அரசு தாக்குதல் நடத்துகிறது என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தியாகிகளை நினைவு கூரும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி. தொடர்ந்து இடையிடையே […]

இந்திய குடியரசு தின விழா; டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் திரவுபதி முர்மு

இந்திய 77-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. தேசத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு டெல்லியில் நடைபெற்றது. நாட்டின் 77-வது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. குதிரைப் […]

பருத்தித்துறையில் சட்டவிரோதமாக மணல் ஏற்றல் டிப்பர் வாகனம் கைப்பற்றல்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினையும், வெறுமனே சென்ற மற்றுமொரு டிப்பர் வாகனத்தையும் சிறப்பு அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (24.01.2026) இடம்பெற்றுள்ளதுடன், இரண்டு டிப்பர்களின் சாரதிகளையும் கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர். பத்து வருடங்களுக்கு மேலாக வடமராட்சி கிழக்கு மாமுனை செம்பியன்பற்று மாற்றும் பகுதிகளில் சட்டவிரோத மணல் மண் அகழ்ந்து டிப்பர் வாகனத்தில் கொண்டு சென்று விற்பனையில் […]