கொங்கோவில் பயங்கரவாத அமைப்பு கொடூரத் தாக்குதல் ; 25 பேர் பலி

கொங்கோ நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு கும்பல் பொதுமக்களை நோக்கி நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏடிஎப் என்கிற கூட்டணி ஜனநாயகப் படை (Allied Democratic Force – ADF) நடத்திய இத்தாக்குதலில் ஒரே வீட்டில் இருந்த 15 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இடுரி (Ituri) மாகாணத்தின் இருமு (Irumu) பிரதேசத்தில் உள்ள அபாகுலு கிராமத்தில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், வேலஸ் வோன்குட்டு […]
மத்திய கிரீஸில் பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து!

மத்திய கிரீஸ் நகரமான திரிகலா அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை அதிகாலையில் வயலண்டா பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து இடம்பெற்றது. தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு அங்கு வெடிப்பு சத்தம் கேட்டதாகக் கூறப்படுவதோடு, தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் காயமடைந்த 06 பேரும் தீயணைப்பு வீரர் ஒருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு […]
கராச்சி நகரில் பாரிய தீ: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 23 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி இரவு எம்.ஏ. ஜின்னா வீதியில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவ்வளாகத்தில் உள்ள கட்டடத்தில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவினால் தீ பரவியதாகவும் கட்டடத்தின் மூன்று தளங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். […]
யாழ்.விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விட வேண்டாம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தல் தொடர்பான சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள , காங்கேசன்துறை , மாவிட்டபுரம் , வறுத்தலை விளான் , பலாலி , மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன் […]
திருக்கோணேஸ்வர ஆலய காண்டாமணி தொடர்பாக சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை

கோணேஸ்வர ஆலய காண்டாமணி விவாகரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்த்து வைக்க வேண்டும் என சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் இந்த காண்டாமணி விவகாரம் தீர்த்து வைக்கப்பட்டால் நிச்சயமாக ஜனாதிபதிக்கு பக்கபலமாக இந்து மக்கள் இருப்பார்கள். இந்து மக்களால் இலங்கை சிவ பூமி என்று போற்றப்படுகின்றது. அதை வேளை பஞ்ச ஈஸ்வரங்களைக் […]
நாவலப்பிட்டி பிரதேசத்தில் மதன மோதக போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

கண்டி – நாவலப்பிட்டி பிரதேசத்தில் மதன மோதக போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் நாவலப்பிட்டி பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) கைதுசெய்யப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இளைஞன் உணவகம் ஒன்றை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான இளைஞன் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து அதிக விலைக்கு மதன மோதக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. […]
புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு சுமார் 7.30 மணியளவில், குறித்த இளைஞனின் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர், அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரது […]
உலக சம்பியன் பட்டங்கள் இரண்டுடன் டாவி சமரவீர நாடு திரும்பினார்

உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கல்கிஸ்ஸை சென். தோமஸ் கல்லூரி சிறுவன் டாவி சமரவீர இந்த வருடத்தை இரண்டு உலக சம்பியன் பட்டங்களுடன் ஆரம்பித்து இலங்கைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார். பாஹ்ரெய்ன், மனாமாவிலும் கத்தார், தோஹாவிலும் நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப்களிலேயே அவர் உலக சம்பியன் பட்டங்களை சுவீகரித்தார். மனாமா இசா பின் ராஷித் விளையாட்டுத் தொகுதி அரங்கில் ஜனவரி 14 முதல் 18 வரை […]
வவுனியா வடக்கு கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம்

அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று நடாத்தப்பட உள்ளது. குறித்த போராட்டமானது எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து கிவுல்ஓயா திட்டமானது அரசாங்கத்தின் மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீட்டோடு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், பொது அமைப்புகள் உடனான கலந்துரையாடல் ஒன்றினை தமிழ் கட்சிகள் 26 ஆம் […]
சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய பிரான்ஸ்!

சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் எண்ணெய் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடற்படையினால் கைப்பற்றப்பட்ட நிலையில் இந்தக் கப்பலின் இந்திய மாலுமி தற்போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ‘தி கிரின்ச்’ (The Grinch) என்று பெயரிடப்பட்ட இந்த எண்ணெய் கப்பல், ரஷ்யாவின் ஆர்க்டிக் துறைமுகமான முர்மான்ஸ்க்கில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது பிரான்ஸ் கடற்படையால் இடைமறிக்கப்பட்டது. இந்தக் கப்பல் கொமோரோஸ் தீவுகளின் கொடியுடன் பயணித்தாலும், உண்மையில் ரஷ்யாவிற்குச் சொந்தமானது என்றும், சர்வதேசத் […]