தென் மோடிக் கூத்து: காப்பு பாடி ஆரம்பிப்பு

செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் அண்ணாவியார் கலாசாரம் றோக்கு யூட்சன் செபசின்ரனின் நெறிப்படுத்தலில் யுவானியார் தென் மோடி நாட்டுக் கூத்து காப்பு பாடல் ஆலயத்தில் செம்பியன் பற்று பங்கு மக்கள் முன்னிலையில் பாடப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (25) அன்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவான எதிர் வரும் வைகாசி மாதம் 26 திகதி அன்று பிற்பகல் 9:30 மணியளவில் தென் மோடி நாட்டுக்கூத்து […]

பிபில விபத்தில் 20 பேர் படுகாயம்

பிபில-பதுளை சாலையில் யல்கும்புரா பகுதியில் திங்கட்கிழமை (26) அன்று இடம்பெற்ற ஒரு வீதி விபத்தில் குறைந்தது 20 பேர் காயமடைந்தனர். இரண்டு பேருந்துகளும் ஒரு லாரியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பிபில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெக்சிகோ கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு கால்பந்து போட்டிக்குப் பிறகு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதாக சாலமன்கா மேயர் சீசர் பிரிட்டோ கூறினார். பத்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், ஒருவர் பின்னர் மருத்துவமனையில் இறந்தார் என்று அவர் அமெரிக்க சமூக ஊடக தளமான […]

இலங்கையின் சுதந்திர தினமான கரி நாளுக்காக அணி திரட்டல்

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொது மக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு திங்கட்கிழமை (26) சென்ற மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் […]

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து 33 வீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றம்

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திலேயே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் 33வீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளற்ற மக்கள், வீடுகளை நிர்மாணிப்பதற்கும் வீடுகளை திருத்துவதற்குமான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று(26-01) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் இறுதிக்கட்டத்தினை அடைந்து அதனை மக்களிடம் […]

யாழ். தொடருந்து மோதியதில் முதியவர் பலி

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், ஆனந்தபுரத்தை சேர்ந்த 82 வயதுடைய சபாபதி என்பவர் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விபத்து இன்று(26.01.2026) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி – பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் முதியவர் ஒருவர் வீதியை கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது, அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். தொடருந்துடன் மோதுண்டு, முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அருட்தந்தையை தாக்கிய சிறப்பு அதிகாரிகள்; அடையாள அணிவகுப்புக்கு உத்தரவு

கத்தோலிக்க திரு அவையின் அருட்தந்தை ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரிகள், […]

வெளிநாட்டு தம்பதி உட்பட 9 பேர் விபத்தில் காயம்

அனுராதபுரம் – கண்டி பிரதான வீதியின் மரதன்கடவெல பிரதேசத்தில் ஜீப் வண்டி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில், வெளிநாட்டு தம்பதியினர் உட்பட 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஜீப் வண்டி, எதிர்த் திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் வெளிநாட்டு தம்பதியினரும், ஜீப் வண்டியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் வேனில் பயணித்த ஏனையவர்களும் காயமடைந்து […]

பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு 3% வட்டியில் கடன்

‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நடவடிக்கைகளை விரைவில் மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான நடைமுறை மூலதனக் கடன்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி முதல் மூன்று அரச வங்கிகள் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தனியார் வங்கிகள் உட்பட மேலும் 13 வங்கிகள் இந்தக் கடன்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி […]

வட மாகாண பாடசாலைகளில் கல்வியில் முறைகேடு?

கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு முரணாகவும், முறையான அனுமதிகள் இன்றியும் வட மாகாண பாடசாலைகளில் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை நடத்தும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூல முறைப்பாடு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் 2025.11.11 ஆம் திகதிய ED/09/12/02/02/05(I) இலக்க கடிதத்திற்கு முரணாக, அரச வளங்களையும் அரச கரும நேரத்தையும் […]