இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தத்திற்கு வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது

இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாண்புமிகு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதில் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். இத்திட்டம் முழுமையடையும்போது முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை 9 மணிக்கு […]
சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி!

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனேடியப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் மீது உடனடியாக 100% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். எவ்வாறாயினும் எந்த ஒப்பந்தம் என்பது குறித்து அவர் எவ்வித தகவல்களையும் வௌிப்படுத்தவில்லை. கடந்த வாரம், கனடா பிரதமர் […]
ஹட்டன் நகரில் தங்கச் சங்கிலியை திருடிய நபர் கைது

ஹட்டன் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து 2,89,000 ரூபாய் பெறுமதியுடைய தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற சந்தேக நபர், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சனிக்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட கிவ் தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், ஹட்டன் நீதவான் எஸ். ராம்மூர்த்தி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (25) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை இந்த மாதம் […]
நாடு தழுவிய ரீதியில் அரச வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டம்

சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (26) முதல் நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை இன்று பிற்பகல் அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் கடந்த இரண்டு நாட்களாக அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், தாம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பினை இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வந்தனர். எனினும் நாளை […]
மானிப்பாய் பிரதேச சபையின் கணக்கறிக்கை தூக்கி எறியப்பட்டதால் பரபரப்பு

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. சபை நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் கணக்கறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அவ்வாறு சபை ஆரம்பத்தின் போது கணக்கறிக்கையை வழங்குவதால் அதில் உள்ள பிழைகளை உடனே கண்டுபிடிப்பது கடினம் என்றும், அந்த கணக்கறிக்கையை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னைய நாட்களில் வழங்க வேண்டும் என்றும் பிரதேச சபை உறுப்பினர் நா.பகீரதன் தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்ட தவிசாளர் ஜெசீதன், கணக்கறிக்கையில் தவறு உள்ளது என்றால், அந்த […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஐசிசி எச்சரிக்கை?

வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவித்து டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகினால் பாகிஸ்தானுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அணியுடனும் இருதரப்பு போட்டிகள் விளையாட முடியாது, PSL தொடரில் விளையாட வெளிநாட்டு வீரர்களுக்கு தடையில்லா சான்று (NOC) வழங்கப்படாது, ஆசியக் கோப்பை தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்கதேச இடைக்கால தலைவர் ஒரு ‘கொலைகார பாசிஸ்ட்’ – ஷேக் ஹசீனா

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இடைக்கால அரசுத் தலைவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம் காரணமாக ஆட்சி கவிழ்ந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையே கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததுடன், வருகிற பிப்ரவரி 12ம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் போட்டியிட அவாமி லீக் […]
தமிழ்நாட்டில் பருவமழை இயல்பை விட 153% கூடுதலாக பெய்துள்ளது!
தமிழ்நாட்டில் குளிர்கால பருவமழை இயல்பை விட 153% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் குளிர்கால பருவமழை இயல்பைவிட 81% கூடுதலாக பெய்துள்ளது.
மொழிப்போர் தியாகிகள் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தியாகிகள் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு வீர முழக்கங்களையும் எழுப்பினார். மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த திருவாளர்கள் நடராசன்-தாளமுத்து இருவரும் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்று இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள். “தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள்” இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர்கள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரது தியாகத்தைப் போற்றும் வண்ணம் நினைவிடத்தை […]
அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு

அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரங்களில் தொடங்கிய இந்த பனிப்புயல், வடகிழக்கு மாகாணங்களுக்குச் செல்லும் போது அதிக பனிப்பொழிவை ஏற்படுத்தும் என்று வானிலை விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பனிப்புயல் அமெரிக்கா முழுவதும் 3,200 கிலோமீற்றர் தொலைவுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும், மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பனி மற்றும் உறைபனி நிலைமைகள் கடுமையாக இருக்கும் என்றும் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நீண்ட நேர மின்வெட்டு, […]